Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

குறுவினாக்கள்

Question 1.
சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?
Answer:
“சங்க காலத்தில் தமிழகத்தில் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் தமிழ் விளங்கியுள்ளது. மேலும், தமிழ் மொழியே சமயம், வாணிகம் முதலான எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது” என இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.

Question 2.
உ.வே.சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.
Answer:

  • மரபு முக் கல்வி முறைகளுள் ஒன்றான உயர்நிலைக் கல்விமுறையில் உ.வே.சா. பயின்றார்.
  • இக்கல்விமுறை, தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறையாகும்.
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம், உ.வே.சா. பாடம் பயின்றமுறை இம்முறையாகும்.

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

கூடுதல் வினாக்கள்

Question 3.
தமிழகத்தின் சங்க காலத்திய கற்பித்தல் பணி பற்றி எழுதுக.
Answer:
சங்கம்’ என்னும் அமைப்பு, பலர் கூடி விவாதிக்கும் பாங்குடையது. சங்கம் தவிர மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப் பள்ளி, பௌத்தப் பள்ளி போன்ற அமைப்புகள், சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தமிழகத்தில் கற்பித்தல் பணியைச் செய்து வந்துள்ளன.

Question ‘4.
எவர் ‘ஆசிரியர்’ எனப்பட்டனர்?
Answer:
பிற்காலத்தில் ஐந்தாக விரித்து உரைக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும், அவற்றுக்கு எடுத்துக் காட்டுகளான பேரிலக்கியங்களையும் கற்பித்தோர், ஆசிரியர் எனப்பட்டனர்.

Question 5.
‘குரவர்’ என அழைக்கப்பட்டோர் எவர்?
Answer:
சமயநூலும் தத்துவ நூலும் கற்பித்தோர், ‘குரவர்’ என அழைக்கப்பட்டனர்.

Question 6.
கல்வியின் நோக்கம் யாது?
Answer:
கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள சிந்தனைகளைத் தோண்டி வெளிக்கொணர்வதே, கல்வியின் நோக்கமாகும்.

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 7.
கல்வி கற்பிக்கும் இடங்களைத் தமிழ்நூல்கள் எவ்வாறு வழங்கின?
Answer:

  • கல்வி கற்பிக்கப்பெற்ற இடங்களைப் ‘பள்ளி’ எனப் பெரிய திருமொழியும்,
  • ‘ஓதும் பள்ளி’ எனத் திவாகர நிகண்டும்,
  • ‘கல்லூரி’ எனச் சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன.

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 8.
கற்றலுக்கு உரிய சுவடிகள் எவ்வாறு வழங்கப்பெற்றன?
Answer:
கற்றலுக்கு உரிய ஏட்டுக் கற்றைகள் ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், பால என வழங்கப்பெற்றன.

Question 9.
தமிழகத்துப் பட்டி மண்டபம் குறித்து எழுதுக.
Answer:
‘பட்டி மண்டபம்’ என்பது, சமயக் கருத்துகளை விவாதிக்கும் இடம் என்று மணிமேகலை சுட்டுகிறது.

Question 10.
திண்ணைப் பள்ளிகளை யார், எப்படிப் பாராட்டினர்?
Answer:

  • சென்னை மாகாணத்தில் இயங்கி வந்த 12,498 சிண்ணைப் பள்ளிகளின் கல்வித்தரத்தைச் சென்னை மாகாண கவர்னர் சர் தாமஸ் மன்றோ ஆராய்ந்தார்.
  • “திண்ணைப் பள்ளிகளின் கல்வித்தரம், பல ஐரோடவிய நாடுகளின் அப்போதைய கல்வித் தரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே உள்ளது” எனப் பாராட்டி ஆய்வு அறிக்கை தந்தார்.

Question 11.
ஐரோப்பிய டச்சுக்காரர்களின் கல்விப்பணி பாது?
Answer:
ஐரோப்பியருள் டச்சுக்காரர்களின் (சமயப்பரப்புச் சங்கம், தமிழகத்தின் தரங்கம்பாடியில் அச்சகம் நிறுவியது. மாணவர்களுக்குத் தேவையான தமிழ்ப் புத்தகங்களை அச்சடித்தது. அறப்பள்ளிகளையும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளையும் நிறுவி, முதன்முதலில் கல்விப் பணியில் ஈடுபட்டது.

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 12.
மாநில மொழிக்கல்வி மறுக்கிட்டது ஏன்?
Answer:

  • லார்டு மெக்காலே தலைமையில் 1835இல் அமைக்கப்பட்ட கல்விக்குழு, மேனாட்டுக் கல்வி முறையைப் பின் பறி, ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்க வலியுறுத்தியது.
  • அதனால் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிவழிக் கல்வி மறுக்கப்பட்டது.

Question 13.
‘திண்ணைப்பள்ளிக் கல்விமுறை’ எங்கு நடைமுறையில் உள்ளது?
Answer:
திண்ணைப் பள்ளிக் கல்விமுறை, ஸ்காட்லாந்தில் ‘மெட்ராஸ் சிஸ்டம்’, ‘பெல் சிஸ்டம்’, ‘மானிடரி சி என அழைக்கப்பெறுகிறது. அங்கு அங்கீகரிக்கப்பட்டு, இன்றும் நடைமுறையில் உள்ளது.

சிறுவினாக்கள்

Question 1.
தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.
Answer:

  • தொல்காப்பியம், கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை , ‘ஓதற் பிரிவு’ எனக் குறிப்பிடுகிறது.
  • அத்துடன், “கல்வியின் பொருட்டு ஒருவருக்குப் பெருமிதம் தோன்றும்” எனவும் குறிப்பிடுகிறது.
  • ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களைத் தொல்காப்பியமும் நன்னூலும் வகுத்துள்ளன.
  • சங்க இலக்கியங்களும் கல்வியின் சிறப்பைப் பெரிதும் போற்றுகின்றன.
  • புறநானூறு, “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” எனக் குறிப்பிடுகிறது.
  • “துணையாய் வருவது தூயநற் கல்வியே” எனத் திருமந்திரமும், “கல்வி அழகே அழகு” என நாலடியாரும், “இளமையில் கல்” என ஆத்திசூடியும் கல்வியின் சிறப்புக் குறித்துக் கூறுகின்றன.

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 2.
சமணப் பள்ளிகளும், பெண்கல்வியும் – குறிப்பு வரைக.
Answer:
சமணப் பள்ளி :
கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் என்பன, சமண சமயத்தின் அறக்கொடைகள்.
மலைக்குகைகளில் தங்கிய சமணத் திகம்பரத் துறவிகள், அங்கிருந்தே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்க்குப் போதித்தனர். சமணப் பள்ளிகளில் கல்வி கற்றதனால் கல்விக்கூடம், “பள்ளிக்கூடம்” என அழைக்கப்பட்டது.

பெண்கல்வி :
வந்தவாசிக்கு அருகிலுள்ள ‘வேடல்’ கிராமத்திலிருந்த சமணப்பள்ளியின் பெண்சமண ஆசிரியர், 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துள்ளார். சமணப்பெண் ஆசிரியர் “பட்டினிக்குரத்தி”, விளாப்பாக்கத்தில் பள்ளி ஒன்றை நிறுவியுள்ளார். இவற்றால் சமணப்பள்ளிகளில், பெண்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளமை வெளிப்படுகிறது. அத்துடன், பெண்களுக்கு எனத் தனிய கக் கல்வி கற்பிக்கும் சமணப்பள்ளிகள் இருந்தமையும் புலப்படுகிறது.

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

கூடுதல் வினாக்கள்

Question 3.
மரபுவழிக் கல்வி முறைகளில் எவையேனும் இரண்டனை விளக்குக.
Answer:
மரபுவழிக் கல்விமுறை சார்ந்த குருகுலக் கல்வி முறையில், மாணவர்கள் ஆசிரியர்களை அணுகிப் பல ஆண்டுகள் அவருடன் தங்கி இருந்து, ஆசிரியருக்குத் தேவையான பணிகளைச் செய்து கல்வி கற்றனர்.

குருகுலக் கல்வி முறையானது செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்னும் அடிப்படையில் அமைந்திருந்தது. இம்முறையானது, வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதியானதாக விளங்கியது.

19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், சிற்றூர்கள் தோறும் பெருமளவில் திண்ணைப் பள்ளிகள் தோன்றின. இவற்றைத் ‘தெற்றிப் பள்ளிகள்’ எனி அழைத்தனர். இதன் ஆசிரியர் ‘கணக்காயர்’ என அழைக்கப்பட்டார். இப்பள்ளிகள் ஒரே மாதிரியாக வரன்முறை செய்யப்படவில்லை. ஆங்கிலேயர்கள் திண்ணைப் பள்ளிகள், பாடசாலைகள், மத்தாபுகள் போன்ற கல்வி அமைப்புகளை ‘நாட்டுக்கல்வி’ என அழைத்தனர்.

இப்பள்ளிகளுக்கான பாடத்திட்டம், உள்ளிநேரம், பயிற்றுவிக்கும்முறை ஆகியன ஆசிரியர்களின் விருப்பப்படி அமைந்திருந்தன. இவை பொதுமக்களின் கல்வித் தேவையை நிறைவு செய்தன.

சென்னை மாகாணத்தில் 24 திண்ணைப் பள்ளிகள் இருந்ததாகவும், அவற்றின் கல்வித்தரம் ஐரோப்பிய நாடுகளின் கல்வித்தரத்தைவிட உயர்ந்திருந்ததாகவும் தாமஸ் மன்றோ நடத்திய ஆய்வு உறுதி செய்துள்ளது.

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 4.
‘குருகுலக் கல்விமுறை குறித்துப் பெறப்படும் செய்தி யாது?
Answer:
‘குருகுலக் கல்வி முறையில், மாணவர்கள் இளம் வயது முதலே தகுதிக்கும் திறமைக்கும் ஏற்பக்
கல்வி சற்றனர். இம்முறையில் ஆசிரியரை அணுகி, அவருடன் பல ஆண்டுகள் தங்கி, அவருக்குத் தேவைப்பட்ட பணிகளைச் செய்து, மாணவர்கள் கல்வி கற்றனர்.

செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்னும் அடிப்படையில், குருகுலக் பால்விமுறை அமைந்திருந்தது. போதனா முறையைத் தாண்டி, வாழ்வியலைக் கட்டமைப்பதில் தெருகுலக் கல்விமுறை, உறுதியாக விளங்கியது.

Question 6.
தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.
Answer:
பண்டைத் தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம், எண்வகை மெய்ப்பாடுகள் பற்றிக் கூறும்போது, “கல்வியின் பொருட்டு ஒருவருக்குப் பெருமிதம்’ தோன்றும்” எனக் குறிப்பிடுகிறது.

புறநானூறு – “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”
திருமந்திரம் – “துணையாய் வருவது தூயநற் கல்வியே”
நாலடியார் – “கல்வி அழகே அழகு”
ஆத்திசூடி – “இளமையில் கல்”

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

நெடுவினா

Question 1.
பௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்விமுறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.
Answer:
தலையாய அறம் :
கல்வி, மருத்துவம், உணவு, அடைக்கலம் என்பன, சமண சமயத்தின் தலையாய அறங்கள். சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் சமண, பௌத்தப் பள்ளிகள் இருந்துள்ளன.

சமண பௌத்தப் பள்ளிகள் :
சமண, பௌத்தத் துறவிகள் தங்கிய இடம், ‘பள்ளி’ எனப்பட்டது. அங்கு, மாணவர்கள் சென்று கற்றதால், கல்வி கற்பிக்கும் இடம், பிற்காலத்தில் பள்ளிக்கூடம்’ எனப்பட்டது.

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர் சிலர், சமணப்படுக்கைகள் அமைத்தமை குறிக்கத் திருச்சி மலைக் கோட்டை, கழுகுமலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

கல்வி கற்பித்தல் :
சமண சமயத் திகம்பரத் துறவிகள், தாங்கள் தங்கி இருந்த மலைக்குகைப் பள்ளிகளில், மாணவர்களுக்குக் கல்வியையும் சமயக் கருத்துகளையும் போதித்துள்ளனர்

‘பள்ளி’ என்பது சமண, பௌத்தச் சமயங்களின் கொடையாகும். வடல்’ என்னும் ஊரில் பெண் சமணத் துறவி, 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துள்ளார். விளாப்பாக்கத்தில், பட்டினிக்குரத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர், பள்ளியை நிறுவிக் கற்பித்துள்ளார்.

மரபுவழிக் கல்வி :
மரபுவழிக் கல்வியில், ‘குருகுலக் கல்வி’ முறையில் மாணவர்கள் குருவோடு தங்கி, அவருக்குரிய பணிகளைச் செய்து கல்வி கற்றனர். செய்து கற்றல் போழந்து கற்றல், எளிமையாக வாழ்தல் ஆகிய அடிப்படையில் இக்கல்விமுறை அமைந்தது. போதனை முறையைத் தாண்டி, வாழ்வியலைக் கட்டமைப்பதில் குருகுலக் கல்வி முறை, உறுதியாக விளங்கியது

ஆங்கிலேயர் போற்றிய திண்ணைப்பள்ளி : 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியல் கராமங்களில் திண்ணைப் பள்ளிகள் என்னும் தெற்றிப்பள்ளிகள் மரபுவழிக் கல்வி என்னும் அமைப்புக் கல்வியைக் கற்பித்தன. மரபுவழிக் கல்விக் கூடங்களான திண்ணைப் பள்ளிகள், பாடசாலைகள், மக்தாகள், மதரஸாக்கள் போன்றவற்றை, ஆங்கிலேயர் ‘நாட்டுக்கல்வி’ அமைப்பு என அழைத்தனர். அப்பள்ளிகளில் பள்ளிநேரம், பயிற்றுமுறை எல்லாம், ஆசிரியர் விருப்பப்படி அமைந்திருந்தன.

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

பலவுள் தெரிக

Question 1.
ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ……………..என்பதாகும்.
அ) நூல்
ஆ) ஓலை
இ) எழுத்தாணி
ஈ) தாள்
Answer:
அ) நூல்

Question 2.
சரியான விடையைத் தேர்க.
அ) கல்வி அழகே அழகு – 1. தொல்காப்பியம் சிறப்புப்பாயிர உரைப்பாடல்
ஆ) இளமையில் கல் – 2. திருமந்திரம்
இ) துணையாய் வருவது தூயநற் கல்வி – 3. ஆத்திசூடி
ஈ) பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் – 4. திருக்குறள்
– 5. நாலடியார்
i) அ – 2, ஆ – 3, இ – 4, ஈ – 1
ii) அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
iii) அ – 5, ஆ – 3, இ – 2, ஈ – 1
iv) அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 5
Answer:
iii) அ – 5, ஆ – 3, இ – 2, ஈ – 1

கூடுதல் வினாக்கள்

Question 3.
“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்னும் அடிகள் இடம் பெற்ற நூல் ……………….
அ) சிலப்பதிகாரம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) மணிமேகலை
ஈ) வளையாபதி
Answer:
இ) மணிமேகலை

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 4.
தனிமனிதனைச் சமுதாயத்திற்கு ஏற்றவனாக மாற்றுவது …………………
அ) வேலை
ஆ) பணம்
இ) வியாபாரம்
ஈ) கல்வி
Answer:
ஈ) கல்வி

Question 5.
கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை, ‘ஓதற் பிரிவு’ எனக் கூறும் நூல்……………..
அ) ஆத்திசூடி
ஆ) திருமந்திரம்
இ) மணிமேகலை
ஈ) தொல்காப்பியம்
Answer:
ஈ) தொல்காப்பியம்

Question 6.
கல்வியினால் ஒருவனுக்குத் தோன்றுவது ………………..
அ) அறிவு
ஆ) செருக்கு
இ) பெருமிதம்
ஈ) செயல்
Answer:
இ) பெருமிதம்

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 7.
ஆசிரியர், மாணவர்க்கான இலக்கணம் வகுத்த நூல்கள் …………….
அ) தொல்காப்பியம், திருக்குறள்
ஆ) நன்னூல், ஆத்திசூடி,
இ) தொல்காப்பியம், நன்னூல்
ஈ) நன்னூல், திருமந்திரம்
Answer:
இ) தொல்காப்பியம், நன்னூல்

Question 8.
மன்னராட்சிக் காலத்தில் முக்கியக் கல்வியாகக் கருதப்பட்டது ……………..
அ) குருகுலப் பயிற்சி
ஆ) தொழில் பயிற்சி
இ) போட்ட பயிற்சி
ஈ) சமயக் கல்வி
Answer:
இ) போர்ப் பயிற்சி

Question 9.
எழுத்தும் இலக்கியமும், உரிச்சொல்லும் கணக்கும் கற்பித்தோரைக் ………… என அழைத்தனர்.
அ) ஆசிரியர்
ஆ) குரவர்
இ) குரு
ஈ) கணக்காயர்
Answer:
ஈ) கணக்காயர்

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 10.
மூவகை இலக்கணத்தையும், அவற்றிற்கு எடுத்துக்காட்டுகளான பேரிலக்கியங்களையும் கற்பித்தோர்……. என அழைக்கப் பெற்றனர்.
அ) ஆசிரியர்
ஆ) குரவர்
இ) குரு
ஈ) கணக்காயர்
Answer:
அ) ஆசிரியர்

Question 11.
சமய நூல்களையும், தத்துவ நூலையும் கற்பித்தோர், …………….. என அழைக்கப்பட்டனர்.
அ) ஆசிரியர்
ஆ) குரவர்
இ) குரு
ஈ) கணக்காயர்
Answer:
ஆ) குரவர்

Question 12.
கலைகள் கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை……………
அ) மகாறங்கள்
ஆ) பள்ளிகள்
இ) சான்றோர் அவைகள்
ஈ) கூடங்கள்
Answer:
ஆ) பள்ளிகள்

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 13.
கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தது ……………..
அ) பள்ளி
ஆ) மன்றம்
இ) சான்றோர் அவை
ஈ) பட்டி மன்றம்
Answer:
ஆ) மன்றம்

Question 14.
செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவை…………………..
அ) பட்டி மன்றம்
ஆ) பேச்சு மன்றம்
இ) கலைக்கூடம்
ஈ) சான்றோர் அவை
Answer:
ஈ) சான்றோர் அவை

Answer:15.
கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் ‘பள்ளி’ என்று குறித்தது …………………
அ) திவாகர நிகண்டு
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) பெரிய திருமொழி
Answer:
ஈ) பெரிய திருமொழி

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 16.
கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ‘ஓதும்பள்ளி’ எனக் கூறியது ………………
அ) பெரிய திருமொழி
ஆ) சீவகசிந்தாமணி
இ) திவாகர நிகண்டு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) திவாகர நிகண்டு

Question 17.
கல்வி கற்பிக்கப்படும் இடங்களைக் கல்லூரி’ எனக் கூறியுள்ளது ……………
அ) பெரிய திருமொழி
ஆ) திவாகர நிகண்டு
இ) மணிமேகலை
ஈ) சீவகசிந்தாமணி
Answer:
ஈ) சீவகசிந்தாமணி

Question 18.
‘தெற்றிப் பள்ளிகள்’ என அழைக்கப்பட்டவை………………
அ) சமணப் பள்ளிகள்
ஆ) பௌத்த பள்ளிகள்
இ) திண்ணைப் பள்ளிகள்
ஈ) ஐரோப்பியப் பள்ளிகள்
Answer:
இ) திண்ணைப் பள்ளிகள்

Question 19.
சென்னை மாகாணத் திண்ணைப் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பாராட்டியவர்……………..
அ) ஜான் கூடன்பர்க்
ஆ) யுவான் சுவாங்
இ) தாமஸ் மன்றோ
ஈ) கார்லஸ்வுட்
Answer:
இ) தாமஸ் மன்றோ

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 20.
“ஆசிரியர்களால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவர்களால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகளை அவர்களாலேயே மதிப்பிட இயலாது” என்று கூறியவர் …………………..
அ) சார்லஸ் உட்
ஆ) ஹென்றி ஆடம்ஸ்
இ) டச்சுக்காரர்கள்
இ) ரெவரெண்டு பெல்
Answer:
ஆ) ஹென்றி ஆடம்ஸ்

Question 21.
தாய்நாட்டு இலக்கியங்களையும், கீழைத்தேசத்துக் கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டோர்…………………..
அ) ஐரோப்பியர்
ஆ) மேற்கத்தியவாதிகள்
இ) டச்சுக்காரர்கள்
ஈ) கீழைத்தேயவாதிகள்
Answer:
ஈ) கீழைத்தேயவாதிகள்

Question 22.
தற்காலக் கல்வி முறையும், தேர்வு முறையும் உருவெடுக்கக் காரணம் ………………….
அ) ஹண்டர் கல்விக்கும்
ஆ) லண்டன் பாராளுமன்றம்
இ) தாமஸ் மன்றே ஆய்வு
ஈ) சார்லஸ் உட் அறிக்கை
Answer:
ஈ) சாஸ் உட் அறிக்கை

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 23.
‘இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்’ எனப் போற்றப்பட்டது …………………
அ) ஹண்டா கல்விக்குழு
ஆ) தாமஸ் மன்றோ ஆய்வு
இ சாலஸ் உட் அறிக்கை
ஈ) ஹென்றி ஆடம்ஸ் அறிக்கை
Answer:
இ) சார்லஸ் உட் அறிக்கை

Question 24.
அளளிகளில் சீருடை முறை, தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது ……………….
அ) சார்லஸ் உட் அறிக்கை
ஆ) தாமஸ் மன்றோ ஆய்வு
இ) ஹென்றி ஆடம்ஸ் அறிக்கை
ஈ) ஹண்டர் கல்விக்குழு
Answer:
ஈ) ஹண்டர் கல்விக்குழு

Question 25.
புதுப்பள்ளிகளைத் தொடங்கி நடத்தும் பொறுப்பைத் தனியாருக்கு வழங்கப் பரிந்துரைத்தது……………….
அ) சார்லஸ் உட்குழு
ஆ) ஹண்டர் கல்விக்குழு
இ) ஹென்றி ஆடம்ஸ் அறிக்கை
ஈ) டச்சு சமயப் பரப்புக் குழு
Answer:
ஆ) ஹண்டர் கல்விக்குழு

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 26.
‘சட்டாம் பிள்ளை ‘ என அழைக்கப்படுபவர்
அ) மாணவர் தலைவர்
ஆ) ஆசிரியர்
இ) பெற்றோர்
ஈ) துணை ஆசிரியர்
Answer:
அ) மாணவர் தலைவர்

Question 27.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” எனக் கூறிக் கல்வியின் சிறப்பை விளக்கியவர் ……………..
அ) தொல்காப்பியர்
ஆ)ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
இ) வள்ளுவர்
ஈ) ஔவையார்
Answer:
ஆ) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

Question 28.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடல் காணப்படும் நூல் ………………..
அ) சிலப்பதிகாரம்
ஆ) திருமந்திரம்
இ) நன்னூல்
ஈ) புறநானூறு
Answer:
ஈ) புறநானூறு

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 29.
“துணையாய் வருவது தூயநற் கல்வி” எனக் கூறும் நூல்……………..
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) நாலடியார்
ஈ) திருமந்திரம்
Answer:
ஈ) திருமந்திரம்

Question 30.
“கல்வி அழகே அழகு” என்னும் பாடல்வரி இடம்பெற்ற நூல்………….
அ) நன்னூலார்
ஆ) புறநானூறு
இ) நாலடியார்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) நாலடியார்

Question 31.
“கற்றில னாயினும் கேட்க” எனக் கூறியவர்…………………….
அ) தொல்காப்பியர்
ஆ) திருவள்ளுவர்
இ) நன்னூலார்
ஈ) திருமூலர்
Answer:
ஆ) திருவள்ளுவர்

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 32.
‘கண்ணுடையர் என்பவர் கற்றோர்’ எனக் கூறும் நூல் ……………..
அ) நன்னூல்
ஆ) நாலடியார்
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருக்குறள்
Answer:
ஈ) திருக்குறள்

Question 33.
‘இளமையில் கல்’ எனக் கூறியவர்……………..
அ) தொல்காப்பியர்
ஆ) நாக்ஷயார்
இ) ஔவையார்
ஈ) நாடக மகளிர்
Answer:
இ) ஔவையார்

Question 34.
‘பட்டிமண்டபம்’ என்பது, அயைக் கருத்துகளை விவாதிக்கும் இடம் என்று சுட்டும் நூல்……………
அ) தொல்காப்பில்
ஆ) மணிமேகலை
இ) புறநானூறு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஆ) மண மேகலை

Question 35.
“கணக்காயம் இல்லாத ஊர், நன்மை பயக்காது” என்று கூறும் நூல்………………
அ) திருக்குறள்
ஆ) ஆத்திசூடி
இ) திருமந்திரம்
ஈ) திரிகடுகம்
Answer:
ஈ) திரிகடுகம்

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 36.
சென்னை ஆளுநர் சர் தாமஸ்மன்றோ ஆணைப்படி தொடங்கப்பட்டது…………..
அ) சென்னை மருத்துவக் கல்லூரி
ஆ) சென்னைப் பல்கலைக்கழகம்
இ) இடைநிலைக் கல்வி வாரியம்
ஈ) பொதுக்கல்வி வாரியம்
Answer:
ஈ) பொதுக்கல்வி வாரியம்

Question 37.
“மேற்கத்திய பாணி (ஆங்கில வழிக் கல்வி முறையால் மட்டுமே இந்தியர் முன்னேற முடியும்” எனக் கூறியோர் …………..
அ) டச்சு சமயப் பரப்புச் சங்கத்தார்
ஆ) கீழைத்தேசியவாதிகள்
இ) ஹண்டர் கல்விக்குழு
ஈ) மேற்கத்தியவாதிகள்
Answer:
ஈ) மேற்கத்தியவாதிகள்

Question 38.
கீழைத்தேசியவாதிகள், மேற்கத்தியவாதிகள் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க அமைக்கப்பட்ட கல்விக்குழு …………
அ) சார்லஸ் உட்குழு
ஆ ஹண்டர் கல்விக்குழு
இ) கட்டாய இலவசக் கல்வி
ஈ) மெக்காலே கல்விக்குழு
Answer:
ஈ) மெக்காலே கல்விக்குழு

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 39.
சரியான விடையைத் தெரிவு செய்க. அ. ஆசிரியர் – 1. நிகண்டும் கணக்கும் கற்பிப்போர்
ஆ. கணக்காயர் – 2. நடனமும் நாட்டியமும் கற்பிப்போர்
இ. குரவர் – 3. இலக்கணம், பேரிலக்கியம் கற்பிப்போர்
– 4. சமய, தத்துவ நூல் கற்பிப்போர்
1. அ – 3, ஆ – 4, இ – 2
2. அ – 3, ஆ – 1, இ – 4
3. அ – 1, ஆ – 2, இ – 3 4.
அ – 2, ஆ – 3, இ – 1,
Answer:
2. அ – 3, ஆ – 1, இ – 4

Question 40.
கூற்று 1 : மரபுவழிக் கல்விமுறை, போதனா முறையைத் தாண்டி வாவியலைக் கட்டமைப்பதில் உறுதியானதாக விளங்கியது.
கூற்று 2 : காஞ்சி மாநகரத்திற்கு வந்த சீனப்பயணி, ‘யுவான் சுவாங்’, அங்கிருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கிச் சிறப்புரை ஆற்றினார். ‘
அ) கூற்று 1 சரி, இரண்டு தவறு
ஆ கூற்று தவறு, இரண்டு சரி
இ) இரு கூற்றுகளும் தவறு
ஈ இரு கூற்றுகளும் சரி
Answer:
ஈ) இரு கூற்றுகளும் சரி

Question 41.
சரியான விடையைத் தெரிவு செய்க.
மரபுவழிக் கல்வி முறைகள் ………….
1. குருகுலக் கல்விமுறை
2. திண்ணைப்பள்ளிக் கல்விமுறை
3. உயர்நிலைக் கல்விமுறை
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 2 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
Answer:
ஈ) அனைத்தும் சரி

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 42.
சரியான விடையைத் தெரிவு செய்க.
கல்வியின் நோக்கம் …………….
அ) கற்றலாம் கற்பித்தலும் வளர்ப்பது
ஆ) கல்விக் கூடங்களைப் பெருக்குவது
இ) நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பது
ஈ) மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் உதவுவது
Answer:
இ) நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பது

Question 43.
சரியான விடையைத் தெரிவு செய்க.
இந்திய அரசியலமைப்பு வழங்கும் “அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி” என்பது………….
அ) 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
ஆ) 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
இ) 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
ஈ) 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
Answer:
இ) 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு

Question 44.
பொருந்தாததை நீக்குக.
நன்னூல், புறநானூறு, திருமந்திரம், நாலடியார், நாடக மகளிர்
Answer:
நாடக மகளிர்

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

Question 45.
பொருத்துக.
1. கல்வி சிறந்த தமிழ்நாடு – அ. சமண முனிவர்
2. பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே – ஆ. திருவள்ளுவர்
3. துணையாய் வருவது தூயநற் கல்வி – இ. தொல்காப்பியர்
4. கல்வி அழகே அழகு – ஈ. பாரதியார்
5. கண்ணுடையர் என்பவர் கற்றோர் – உ.ஔவையார்
6. இளமையில் கல் – ஊ. திருமூலர்
– எ. நெடுஞ்செழியன்
Answer:
1-ஈ, 2-எ, 3-9, 4-அ, 5-ஆ, 6-உ

Question 46.
கூற்று 1 : தரங்கம்பாடியில் அச்சுக்கூடத்தை ஆங்கிலேயர் நிறுவினர்.
கூற்று 2 : டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம், அறப்பள்ளிகளையும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி களையும் நிறுவியதோடு, இந்திய மொழிகளில் தமிழ்மொழியை அச்சேறிய முதல் மொழியாக்கியது.
அ) இரண்டு கூற்றுகளும் சரி
ஆ கூற்று 1 தவறு, இரண்டு சரி
இ) கூற்று 1 சரி, இரண்டு தவறு
ஈ) இரு கூற்றுகளும் தவறு
Answer:
ஆ கூற்று 1 தவறு, இரண்டு சரி

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. கல்வியின் நோக்கம், நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும்.
வினா : கல்வியின் நோக்கம் எவற்றை வளர்ப்பதாகும்?

2. காலந்தோறும் மக்களின் தேவைகளுக்கேற்பக் கற்றலும் கற்பித்தலும், பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளன.
வினா : காலந்தோறும் கற்றலும் கற்பித்தலும், எவற்றுக்கேற்ப எவ்வாறு வளர்ந்துள்ளன ?

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

3. சங்க காலத்தவர், குடும்பம், அரசு, சமூகம் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பினைப் பெறக் கல்வி தேவை என்பதை உணர்ந்து கற்றதும்.’
வினா : சங்க காலத்தவர், எந்த மூன்று நிலைகளிலும் எதனைப் பெற, எது தேவை என்பதை உணர்ந்து கற்றனர்?

4. சங்கம் என்ற அமைப்புப் பலர் விவாதிக்கும் பாங்குடையது.
வினா : பலர்கூடி விவாதிகளும் பாங்குடையது எவ்வமைப்பு?

5. கல்வி, மருந்து, உண அடைக்கலம் ஆகிய நான்கு கொள்கைகளும் சமண சமயத்தின் தலையாய அறங்களாகும்.
வினா : எந்நான்கு கொள்கைகள், சமண சமயத்தின் தலையாய அறங்களாகும்?

6. ‘ரெவரெண்ட் பெல்’ என்ற ஸ்காட்லாந்து பாதிரியார், தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்வி முறையை கண்டு வியந்தார்.
வினர் : ரெவரெண்ட்’ பெல் என்ற ஸ்காட்லாந்து பாதிரியார், எந்தக் கல்வி முறையைக் கண்டு பயந்தார்?

Chapter 4.1 தமிழகக் கல்வி வரலாறு

7. செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்ற அடிப்படையில், குருகுலக் கல்விமுறை அமைந்திருந்தது.
வினா : குருகுலக் கல்விமுறை, எவ்வெவ் வடிப்படையில் அமைந்திருந்தது?

8. திண்ணைப் பள்ளி ஆசிரியர், கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.
வினா : திண்ணைப் பள்ளி ஆசிரியர், எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

9. ஹண்டர் கல்விக்குழு, சீருடைமுறை, தாய்மொழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது.
வினா : சீருடைமுறை, தாய்மொழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது எக்குழு?

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.2 பிறகொரு நாள் கோடை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 1.
‘மழை’ தொடர்பான கவிதைகளைத் தொகுத்து இதழ் ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை 2

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
Answer:
இ) மழைத்துளிகள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

குறுவினா

Question 1.
‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
Answer:

  • மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.
  • திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
  • சில மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

சிறுவினா

Question 1.
‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்” – இக்கவிதையின் அடி,
‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்’
Answer:

  • ஏற்றம் இறைப்பவர்கள் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
  • விடியும் போது மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனிநீர் வைரம் வைத்தது போல இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த ஒருதுளி நீரையும் விட்டு வைக்காமல் தானே எடுத்துக் கொள்வான்.
  • அதிகாலையில் மூங்கில் இலையில் இருக்கும் பனிநீரை மீண்டும் சூரியன் வாங்கிக் கொள்கிறான். இஃது ஓர் நீர்வட்டம்.

“நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குறித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்”

  • நீர் நிலைகளை வந்தடையும் மழை நீரைச் சூரியன் தன் ஒளிக்கதிர் என்ற உதடுகளால் உறிஞ்சுகிறான்.
  • வானில் இருந்து விழும் மழை நீரை மீண்டும் வானுக்கே எடுத்துக் கொள்கின்றான் சூரியன். இது ஒரு நீர் வட்டம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

நயம் :

  • நாட்டுப்புறப்பாடலில் ஒரு துளி பனி நீரைக்கூட சூரியன் விடுவதில்லை தன் ஒளிக்கதிர்களால் எடுத்துக் கொள்கிறான் எனக் குறிப்பிடப்படுகிறது.
  • பிறகொரு நாள் கோடை’ கவிதையில் கவிஞர் மழையாக வந்து நீர்நிலைகளை நிரப்பும் நீரைத் தன் கதிர்களால் இதழ் குவித்து உறிஞ்சுகிறது சூரியன் என்கிறார்.
  • பனித்துளியை வாங்கிக் கொண்டான் கதிரவன் – நாட்டுப்புறப்பாடல்.
  • நீர்நிலை மழைத்துளிகளை உறிஞ்சுக் கொண்டான் கதிரவன் – பிறகு ஒரு நாள் கோடை.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பகலும் இரவும் சந்திப்பது
அ) இரவு
ஆ) அந்தி
இ) வைகறை
ஈ) யாமம்
Answer:
ஆ) அந்தி

Question 2.
நீர்நிலையில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்துக்கொண்டது?
அ) கரங்களால் பருகி
ஆ) நீரில் மூழ்கி
இ) உதடுகள் குவித்து
ஈ) குவளையில் பிடித்து
Answer:
இ) உதடுகள் குவித்து

Question 3.
அய்யப்ப மாதவன் இயங்கி வரும் துறைகள்
அ) இதழியல் துறை, திரைத்துறை
ஆ) கல்வித்துறை, இதழியல் துறை
இ) இசைத்துறை, இதழியல் துறை
ஈ) ஒளித்துறை, திரைத்துறை
Answer:
அ) இதழியல் துறை, திரைத்துறை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 4.
நம் பாடப்பகுதி எடுக்கப்பட்டுள்ள தொகுப்பு
அ) அய்யப்ப மாதவன் கவிதைகள்
ஆ) நீர்வெளி
இ) பிறகொரு நாள் கோடை
ஈ) மழைக்குப் பிறகும் மழை
Answer:
அ) அய்யப்ப மாதவன் கவிதைகள்

Question 5.
கூற்று சரியா? தவறா?
கூற்று 1 : நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது.
கூற்று 2 : செங்குத்தாய் இறங்கிய மழையைக் கரத்தினுள் வழிய விடுகிறேன்.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி 2 தவறு

Question 6.
கூற்று சரியா? தவறா?
கூற்று 1 : மீதமான சொட்டுகளை ஈரமான மரங்கள் தலையசைத்து உதறுகிறது.
கூற்று 2 : வெயில் கண்ட பறவைகள் வெயில் தாங்காமல் வீழ்கின்றன.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

Question 7.
கூற்று சரியா? தவறா?
கூற்று 1 : கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புகளுக்குள் மத்தளம் அடிக்கின்றது.
கூற்று 2 : போன மழை மீண்டும் திரும்பாது என அலைகிறேன்.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஈ) கூற்று இரண்டும் தவறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) நகரம் – அமைதியாயிருந்தது
ஆ) நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன
இ) மரங்கள் – வேர்விட்டன
ஈ) பறவைகள் சங்கீதம் இசைக்கவில்லை
Answer:
ஆ) நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) மரங்கள் – தலையசைத்து உதறுகிறது
ஆ) பறவைகள் – சங்கீதம் இசைத்தன
இ) சுவர் – நீர்ச்சுவடுகள் அழித்தன
ஈ) நரம்புகள் – மத்தளம் இசைத்தன
Answer:
ஈ) நரம்புகள் – மத்தளம் இசைத்தன

Question 10.
பொருத்துக.
அ) இன்று – 1. அய்யப்ப மாதவன்
ஆ) நீர்வெளி – 2. கவிதைக்குறும்படம்
இ) சிவகங்கை – 3. கவிதை நூல்
ஈ) நரம்புகள் – 4. வீணை

அ) 2, 1, 4, 3
ஆ) 2, 3, 4, 1
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 1, 2, 4
Answer:
இ) 2, 3, 1, 4

Question 11.
பொருத்துக.
அ) நகரம் – 1. நரம்புக்குள் மீட்டுதல்
ஆ) பறவைகள் – 2. உதடுகள்
இ) வீணை – 3. வைரம்
ஈ) ஒளிக்கதிர்கள் – 4. சங்கீதம்

அ) 3, 1, 4, 2
ஆ) 3, 2, 1, 4
இ) 3, 2, 4, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஈ) 3, 4, 1, 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 12.
‘பிறகொருநாள் கோடை’ என்னும் கவிதை எடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு
அ) மழைக்குப் பிறகும் மழை
ஆ) நானென்பது வேறொருவன்
இ) நீர்வெளி
ஈ) அய்யப்பமாதவன் கவிதைகள்
Answer:
ஈ) அய்யப்பமாதவன் கவிதைகள்

Question 13.
அய்யப்ப மாதவனின் ‘இன்று’ என்பது
அ) கவிதைத் தொகுப்பு
ஆ) கவிதைக் குறும்படம்
இ) ஆவணப்படம்
ஈ) புதினம்
Answer:
ஆ) கவிதைக் குறும்படம்

Question 14.
அய்யப்பன் மாதவனின் மாவட்டம் ………….. ஊர் ………………..
அ) தஞ்சாவூர், பருத்திக்கோட்டை
ஆ) சிவகங்கை, நாட்டரசன் கோட்டை
இ) மதுரை, அவணியாபுரம்
ஈ) திருநெல்வேலி, வள்ளியூர்
Answer:
ஆ) சிவகங்கை, நாட்டரசன் கோட்டை

Question 15.
அய்யப்ப மாதவனுக்குத் தொடர்பில்லாத கவிதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) மழைக்குப் பிறகும் மழை
ஆ) நானென்பது வேறெருவன்
இ) நீர்வெளி
ஈ) நீர்விழிராகம்
Answer:
ஈ) நீர்விழிராகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

Question 16.
போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அழைகிறேன் என்று பாடியவர்
அ) அய்யப்ப மாதவன்
ஆ) இரா. மீனாட்சி
இ) வேணுகோபாலன்
ஈ) ஆத்மாநாம்
Answer:
அ) அய்யப்ப மாதவன்

குறுவினா

Question 1.
அய்யப்ப மாதவன் வெளியிட்டுள்ள கவிதை நூல்கள் யாவை?
Answer:

  • மழைக்குப் பிறகும் மழை
  • நானென்பது வேறொருவன்
  • நீர்வெளி

Question 2.
வெளில் கண்ட பறவைகளின் செயல் யாது?
Answer:
வெளிலைக் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட சங்கீதம் இசைக்கின்றன.

Question 3.
சூரியனைக் கண்ட மரங்களின் செயல் யாது?
Answer:
சூரியனைக் கண்ட ஈரமான மரங்கள் மீதமுள்ள சொட்டுக்களை தலையசைத்து உதறுகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை

சிறுவினா

Question 1.
மழையிலிருந்து விடுபடும் ஊரின் தன்மையைக் கவிஞர் அய்யப்ப மாதவன் எக்குறியீடுகளின் மூலம் வெளிப்படுத்துகின்றார்?
Answer:

  • மழை நின்றதால் சுவர்கள் மீது வழிந்தோடிய மழைநீர் நின்றது.
  • கொஞ்சம் இருந்த நீர் சுவடுகளையும் சுவர் வேகமாகத் தன் வசம்படுத்திக் கொண்டது.
  • ஈரமான மரங்கள் தங்கள் கிளைகளை அசைத்து தன் மீது படர்ந்திருந்த மீதமான நீர்த்துளிகளையும் உதறியது.
  • வெயிலைக் கண்டதால், மழை நீருக்கு அஞ்சியிருந்த பறவை உற்சாகம் வெளிப்பட தன் குரலால் சங்கீதம் இசைத்தது.
  • இவையே அவ்வூர் மழையிலிருந்து விடுபடுவதைக் குறிப்பிடும் குறியீடுகளாக அய்யப்ப மாதவன் குறிப்பிடுகிறார்.

Question 2.
கவிஞர் அய்யப்ப மாதவன் பற்றிக் குறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : அய்யப்ப மாதவன்
ஊர் : சிவகங்கை – நாட்டரசன் கோட்டை
பணி : திரைத்துறை, இதழியல் துறை
நூல்கள் : மழைக்கு பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர் வெளி. இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.1 பெருமழைக்காலம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.1 பெருமழைக்காலம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 1.
வெள்ளப் பேரழிவு குறித்த நாளிதழ்ச் செய்திகளைத் தொகுக்க.
Answer:
கடலூர்.
2015இல் உலகையே உலுக்கிய வெள்ளம் கடலூரில். எங்குப் பார்த்தாலும் ஆடு, மாடுகள் இறந்துக்கிடக்கும் காட்சி கடலூர், தாழங்குடா, திருவந்திபுரம், நத்தம், ஞானமேடு போன்ற பகுதிகளில் குடிசை வீடுகள் தண்ணீரில் தத்தளித்தன. மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, நீர் தேங்கியதால் தொற்று நோய்கள். சிறுவர் முதியவர் இறப்பு எண்ணற்ற குடும்பங்களின் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

2004ஆம் ஆண்டு இதே கடலூர், தேவனாம்பட்டினம், தாழங்குடா ஆகிய பகுதிகளில் சுனாமி ஊருக்குள் புகுந்தது. வீடுகள், மரங்கள், மீன் பிடித்தொழில் செய்வோரின் பொருள்கள், படகுகள் எல்லாம் கடலில் மூழ்கி நிலைகுலைந்தது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். தாய் தந்தையைப் பிரிந்த குழந்தை, கணவனை இழந்த மனைவி என்று அரைகுறை வாழ்க்கையை ஏற்படுத்தியது.

Question 2.
ஜூன் 5, உலகச் சுற்றுச்சூழல் நாள். இந்நாளில் பள்ளியின் கூட்டத்தில் ஏற்க வேண்டிய உறுதிமொழியை உருவாக்குக.
Answer:

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

  • மரம் வளர்ப்போம்!
    மழை பெறுவோம்!!
  • நெகிழியைத் தவிர்ப்போம்!
    மண் வளம் பாதுகாப்போம்!!
  • வாகனப்புகை குறைப்போம்!
    வளமான வாழ்வு வாழ்வோம்!!
  • மழைநீர் தேங்காமல் பாதுகாப்பாகச் சேகரிப்போம்!
    கொசுவை ஒழிப்போம்!!
  • மக்கும், மக்காக் குப்பை எனப் பிரிப்போம்!
    மானிட சமுதாயம் காப்போம்!!
  • துணிப்பையைத் தூக்குவோம்!
    துக்கமின்றி வாழ்வோம்!!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

Question 1.
வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
அ) பருவநிலை மாற்றம்
ஆ) மணல் அள்ளுதல்
இ) பாறைகள் இல்லாமை
ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்
Answer:
ஆ) மணல் அள்ளுதல்

Question 2.
“உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுபடுத்த முடியும்” – இத்தொடர் உணர்த்துவது
அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது
இ) காலநிலை மாறுபடுகிறது
ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது
Answer:
அ) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

குறுவினா

Question 1.
‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத் தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
Answer:
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்ற முழக்கத் தொடர் வாயிலாக பின்வருவனவற்றை எடுத்துரைப்பேன்.

  • மழைக்கு ஆதாரம் மரம்.
  • உயிர்வளிக்கு உதவுவது மரம்.
  • மண் அரிப்பைத் தடுக்கும் மரம்.
  • மரம் தரும் நிழல் குளிர்ச்சி என்று கூறுவேன்.

Question 2.
மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான் – இரு தொடர்களாக்குக.
Answer:

  1. மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தினான்.
  2. மனிதன் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறான்.

சிறுவினா

Question 1.
மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
Answer:

  • வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தல் வேண்டும்.
  • வடிகால் வசதியை மேற்கொள்ள வேண்டும்.
  • இயல்பாகவே பெருமழையைத்தாங்கக்கூடிய குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால் வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகளைச் சேதப்படுத்தாமல் தூர் வார்தல் வேண்டும்.
  • சூறாவளி, புயல், வெள்ளம் குறித்த போதிய விழிப்புணர்வை அனைத்துப் பொதுமக்களும் பெறும் விதத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையம் முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 2.
பேரிடர் மேலாண்மை ஆணையம் – விளக்கம் தருக.
Answer:
(i) பேரிடர் மேலாண்மை ஆணையம் நடுவணரசால் 23.12.2005இல் தொடங்கப்பட்டது.

(ii) புயல், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ விபத்து. பனிப்புயல், வேறு விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும் போது இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த இந்த ஆணையம் உதவுகிறது.

(iii) இக்குழுக்கள் மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி அனைத்து நிலைகளிலும் பேரிடர்க் காலங்களில் இவ்வாணையம் செயல்பட வழிவகை செய்துள்ளது.

(iv) அரசு தீயணைப்புத்துறை, காவல், தன்னார்வத் தொண்டு நிறுவனம் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

நெடுவினா

Question 1.
‘நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து’ என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

பெருமழைக்காலம்

அயோத்திதாசர் : வணக்கம் ஐயா! நான் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

பசுமைதாசர் : வணக்கம். மிக்க மகிழ்ச்சி.

அயோத்திதாசர் : நெகிழி என்றால் என்னங்க ஐயா!

பசுமைதாசர் : நெகிழி என்பது திடப்பொருள். இச்சொல்லை பிளாஸ்டிக் என்றும்

அழைப்பர். பிளாஸ்டிக்கோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் உருவானது.

அயோத்திதாசர் : நெகிழி தோன்றியதின் வரலாறு கூறமுடியுமா ஐயா.

பசுமைதாசர் : நெகிழி செல்லுலோஸ் என்ற பொருளால் ஆனது. 1862இல் இலண்டனைச் 10. சேர்ந்த அலெக்சாண்டர் பாக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.

அயோத்திதாசர் : நெகிழியின் பயன்பாடுகள் பற்றிச் சில கூறுங்கள் ஐயா.

பசுமைதாசர் : பொதுவாக நெகிழி பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் தீமைகளே அதிகம்.
இன்றும் நாம் கையாளும் பொருள்கள் அனைத்திலும் நெகிழி உதவி இல்லாமல் இல்லை. காலை கண் விழித்து பல்துலக்கப் பயன்படுத்தும் பொருள் முதல், இரவு படுக்கைக்கு செல்லும் போது படுக்கும் பாய் வரை ஒவ்வொன்றும் நெகிழியால் உருவாக்கப்பட்டது.

அயோத்திதாசர் : நல்லது ஐயா! அப்ப நெகிழி இல்லாமல் நாம் இல்லை.

பசுமைதாசர் : அப்படிச் சொல்லக்கூடாது. நம்முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் நெகிழி இல்லையே!

அயோத்திதாசர் : சரிங்க ஐயா! நெகிழியால் ஏற்படும் தீமைகள் பற்றி எனக்கு விரிவாக விளக்குங்கள் ஐயா!

பசுமைதாசர் : நெகிழியைப் பயன்படுத்துவதால் மண் வளம் குன்றி தாவர இனம் அழிகிறது. தாவர இனம் அழிவதால் மழை வளம் குறைகிறது. மழை இல்லை என்றால் மனிதர் இல்லையே.

அயோத்திதாசர் : மேலும் அறிந்து கொள்ள விழைகிறேன் ஐயா!

பசுமைதாசர் : உறுதியாகச் சொல்கிறேன்!
நீர் செல்லும் கால்வாய்களில் நெகிழி அடைக்கப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நெகிழியை எரிப்பதால் டையாசீன் என்ற நச்சு வெளிப்பட்டு பல்வேறு நோய்கள் உருவாகிறது. சூடான பொருள்கள் நெகிழிப் பைகளில் வாங்கி உண்பதால் புற்றுநோய் உருவாகிறது. அவற்றைச் சில விலங்குகள் உண்ணுவதால் அவைகளும் மடிகின்றன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

அயோத்திதாசர் : நன்றிங்க ஐயா!

பசுமைதாசர் : துணிப்பை எளிதானது
தூர எறிந்தால் எருவாகும்…..
நெகிழிப் பை அழகானது.
தூர எறிந்தால் விட(ஷ)மாகும்…..
என்பதற்கு ஏற்ப நாம் நெகிழியைப் பயன்படுத்துவதைச் சிறிது சிறிதாக குறைப்போம்.
மண் வளம் காப்போம்!
மரம் நடுவோம்!
வாழ்க வளமுடன்! நன்றி!
மழை வளம் பெருக்குவோம்!
மனித குலம் தழைப்போம்!

அயோத்திதாசர் : நன்றி!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இயற்கைச் சமநிலையை நாம் சீர்குலைத்தன் விளவுை எதற்குக் காரணமாயிற்று
அ) பருவநிலை மாற்றம்
ஆ) உடல்நிலை மாற்றம்
இ) மண்ணின் மாற்றம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) பருவநிலை மாற்றம்

Question 2.
உலகப்புவி நாள்
அ) ஏப்ரல் 21
ஆ) ஏப்ரல் 22
இ) ஜூன் 21
ஈ) ஜூலை 22
Answer:
ஆ) ஏப்ரல் 22

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 3.
‘மாமழை போற்றுதும்’ – என்ற பாடல் வரியைக் கூறியவர்
அ) திருவள்ளுவர்
ஆ) கம்ப ர்
இ) ஒளவையார்
ஈ) இளங்கோவடிகள்
Answer:
ஈ) இளங்கோவடிகள்

Question 4.
‘நீரின்றி அமையாது உலகு’ – என்னும் பாடல் வரியைப் பாடியவர்
அ) கம்பர்
ஆ) திருவள்ளுவர்
இ) நக்கீரர்
ஈ) ஔவையார்
Answer:
ஆ) திருவள்ளுவர்

Question 5.
நம் நாட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது?
அ) 4
ஆ) 6
இ) 3
ஈ) 5
Answer:
ஈ) 5

Question 6.
2005-ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் பெய்த மழையளவு
அ) 994 செ.மீ
ஆ) 994 மி.மீ
இ) 995 மி.மீ
ஈ) 995 செ.மீ.
Answer:
ஆ) 994 மி.மீ

Question 7.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ‘லே’ பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழை பெய்த ஆண்டு
அ) 2010
ஆ) 2008
இ) 2005
ஈ) 2011
Answer:
அ) 2010

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 8.
‘ஒக்கி’ என்பதன் தமிழ்ச்சொல்
அ) வாயு
ஆ) காற்று
இ) கண்
ஈ) வாய்
Answer:
இ) கண்

Question 9.
புயலைக் குறித்த பெயர்களைப் பரிந்துரைச் செய்துள்ள ‘சார்க்’ அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை
அ) 8
ஆ) 4
இ) 64
ஈ) 7
Answer:
அ) 8

Question 10.
“புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே” – என்றவர்
அ) டேவிட் கிங்
ஆ) ஜான் டேவிட்
இ) ஜான் மார்ஷல்
ஈ) ஹென்றி
Answer:
அ) டேவிட் கிங்

Question 11.
ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை ஐக்கிய நாடுகள் உருவாக்கிய ஆண்டு
அ) 1972
ஆ) 1892
இ) 2002
ஈ) 1992
Answer:
ஈ) 1992

Question 12.
கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் அறிவித்த ஆண்டு
அ) 2008
ஆ) 2009
இ) 2007
ஈ) 2018
Answer:
ஆ) 2009

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 13.
உலகில் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகின்றனர்?
அ) 40.5
ஆ) 40.9
இ) 40
ஈ) 40.8
Answer:
இ) 40

Question 14.
நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைப்பதில் இதன் பங்கு இன்றியமையாதது
அ) கிணறு
ஆ) ஊற்று
இ) மணல்
ஈ) பாறை
Answer:
இ) மணல்

Question 15.
நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு
அ) 2005 டிசம்பர் 24
ஆ) 2005 டிசம்பர் 23
இ) 2005 நவம்பர் 23
ஈ) 2005 ஜூலை 23
Answer:
ஆ) 2005 டிசம்பர் 23

Question 16.
ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
அ) டெல்லி
ஆ) குஜராத்
இ) மும்பை
ஈ) கொல்கத்தா
Answer:
ஆ) குஜராத்

Question 17.
உலகச் சுற்றுச்சூழல் நாள்
அ) ஜுன் 5
ஆ) ஜுலை 5
இ) ஏப்ரல் 14
ஈ) மே 5
Answer:
அ) ஜுன் 5

Question 18.
கூற்று 1 : இயற்கையானது சமநிலையோடு இருந்தால்தான், அந்தந்தப் பருவநிலைக்கேற்ற நிகழ்வுகள் நடக்கும்.
கூற்று 2 : உபரிநீர் கால்வாய்களும் வெள்ளச்சமவெளிகளும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அற்றவை.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி 2 தவறு

Question 19.
கூற்று 1 : வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளை அழித்து குடியிருப்புகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களை மனிதன் அமைத்துள்ளான்.
கூற்று 2 : மணல் அள்ளியதன் விளைவாக வெள்ளச் சமவெளிகள் அழிகின்றன.
அ) கூற்று 1 தவறு, 2 சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 20.
கூற்று 1 : வெள்ளப்பெருக்குக் காலங்களில் மட்டுமே நம் நாட்டில் மாற்று ஏற்பாடுகளைச் செய்கிறோம்.
கூற்று 2 : வெள்ளம் வடிந்த பிறகு வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளைத் திட்டமிடவும் தவறுகின்றோம்.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Question 21.
சரியானதைத் தேர்க.
அ) மாமழை போற்றதும் – திருவள்ளுவர்
ஆ) மாரியல்லது காரியமில்லை – முன்னோர் மொழி
இ) நீரின்றி அமையாது உலகு – பழமொழி
ஈ) மும்பை – வறட்சி
Answer:
ஆ) மாரியல்லது காரியமில்லை – முன்னோர் மொழி

Question 22.
சரியானதைத் தேர்க.
அ) மும்பை – 994 செ.மீ. மழை
ஆ) ‘லே’ – 250 செ.மீ. மழை
இ) மீத்தேன் – பசுமைக்குடில் வாயு
ஈ) 2009ஆம் ஆண்டு – மிக வெப்ப ஆண்டு
Answer:
இ) மீத்தேன் – பசுமைக்குடில் வாயு

Question 23.
சரியானதைத் தேர்க.
அ) நாற்பது விழுக்காடு – மணல் பற்றாக்குறை
ஆ) எண்பத்து ஐந்து விழுக்காடு – வெள்ளப்பெருக்கால் பேரிடர்
இ) ஜுன் 5 – உலக வன உயிரின நாள்
ஈ) உலகப் புவி நாள் – ஏப்ரல் 22
Answer:
ஆ) எண்பத்து ஐந்து விழுக்காடு – வெள்ளப்பெருக்கால் பேரிடர்

Question 24.
பொருத்துக.
அ) ஹைட்ரஜன் ஆண்டு – 1. மிகவும் வெப்பமான ஆண்டு
ஆ) ரஷ்யா – – 2. கார்பன் அற்ற ஆற்றல்
இ) 2009ஆம் ஆண்டு – 3. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
ஈ) 2005 டிசம்பர் 23 – – 4. பசுமைக்குடில் வாயு

அ) 2, 3, 4, 1
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 2, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
ஆ) 2, 4, 1, 3

Question 25.
உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையான மழை, ……………. இன்றியமையாதது.
அ) நெசவுக்கும்
ஆ) உழவுக்கும்
இ) கடலுக்கும்
ஈ) மலைக்கும்
Answer:
ஆ) உழவுக்கும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 26.
வங்கக் கடலிலும் அரபிக் கடலிலும் உருவாகும் புயலுக்குப் பெயர் வைக்கும் எட்டு நாடுகளில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) இலங்கை
ஆ) மாலத்தீவு
இ) மியான்மர்
ஈ) நேபாளம்
Answer:
ஈ) நேபாளம்

Question 27.
வங்கக்கடலிலும் அரபிக் கடலிலும் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க எட்டு நாடுகள் வழங்கியுள்ள பட்டியலில் உள்ள பெயர்களின் எண்ணிக்கை
அ) 36
ஆ) 64
இ) 96
ஈ) 180
Answer:
ஆ) 64

Question 28.
கதிரவனைச் சுற்றியுள்ள கோள்களில் ………….. மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுகிறது.
அ) சந்திரனில்
ஆ) வியாழனில்
இ) புதனில்
ஈ) புவியில்
Answer:
ஈ) புவியில்

Question 29.
புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கல் என்று கூறிய இங்கிலாந்தின் அறிவியல் கருத்தாளர்
அ) டேவிட் ஷெப்பர்டு
ஆ) டேவிட் கிங்
இ) நைட் ஜான்
ஈ) வில்லியம் ஹென்றி
Answer:
ஆ) டேவிட் கிங்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 30.
ஆர்டிக் பகுதி, கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சதுர மைல்கள் உருகியுள்ளது?
அ) 2
ஆ) 4
இ) 20
ஈ) 40
Answer:
ஆ) 4

Question 31.
பசுமைக்குடில் வாயுக்களில் பொருந்தாததைக் கண்டறிக.
அ) கார்பன் டை ஆக்ஸைடு
ஆ) மீத்தேன்
இ) நைட்ரஸ் ஆக்ஸைடு
ஈ) ஹைட்ரஜன்
Answer:
ஈ) ஹைட்ரஜன்

Question 32.
மாற்று ஆற்றல்களாக விளங்கக்கூடியவற்றைக் கண்டறிக.
i) சூரிய ஆற்றல்
ii) காற்று ஆற்றல்
iii) ஹைட்ரஜன் ஆற்றல்
iv) தாவர ஆற்றல்

அ) i), ii) சரி
ஆ) ii), iv) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 33.
ஐக்கிய நாடுகள் அவை 1992ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கிய இடம்
அ) நியூயார்க்
ஆ) ஹைத்தீ
இ) ரியோடிஜெனிரோ
ஈ) ஹாமில்டன்
Answer:
இ) ரியோடிஜெனிரோ

Question 34.
சரியான விடையைக் கண்டறிக.
i) ஐ.நா. அவை 1992ஆம் ஆண்டு உருவாக்கிய காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கியபோது தொடக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.
ii) பின்னர் இந்த எண்ணிக்கை 193 நாடுகளாக உயர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

அ) i) சரி
ஆ) ii) சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 35.
பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள நாடுகளைக் கண்ட றிக.
i) சீனா
iii) இரஷ்யா
iii) அமெரிக்கா
iv) ஜப்பான்

அ) i), ii) சரி
ஆ) iii), iv) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 36.
கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வுத் துறையினர் அறிவித்த ஆண்டு
அ) 2006
ஆ) 2008
இ) 2009
ஈ) 2011
Answer:
இ) 2009

Question 37.
………….. ஆம் ஆண்டிற்குப் பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்துகொண்டே போகிறது.
அ) 2000
ஆ) 2001
இ) 2004
ஈ) 2006
Answer:
ஆ) 2001

Question 38.
புவியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் ………….. கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்.
அ) 100
ஆ) 200
இ) 300
ஈ) 250
Answer:
ஆ) 200

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 39.
உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் ………….. விழுக்காடு மக்கள் தண்ணீ ர்ப் பற்றாக்குறையோடு வாழ்ந்து வருகிறார்கள்.
அ) 30
ஆ) 40
இ) 45
ஈ) 50
Answer:
ஆ) 40

Question 40.
கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% …………. ஏற்பட்டவையே.
அ) வெள்ளப்பெருக்கினால்
ஆ) நிலநடுக்கத்தால்
இ) போரினால்
ஈ) கவனக்குறைவால்
Answer:
அ) வெள்ளப்பெருக்கினால்

Question 41.
சரியானக் கூற்றுகளைக் கண்டறிக.
i) தமிழக நிலப்பரப்பில், விடுதலைக்கு முன்பு, ஏறத்தாழ ஐம்பதாயிரம் நீர்நிலைகள் இருந்தன.
ii) தற்போது தமிழகத்தில் நீர்நிலைகள் இருபதாயிரமாகக் குறைந்துள்ளன.
iii) சென்னை , மதுரை ஆகிய மாநகரங்களைச் சுற்றி மட்டுமே ஏறத்தாழ ஐந்நூறு ஏரிகள், குளங்கள் காணாமல் போய்விட்டன.

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 42.
நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் …………. பங்கு இன்றியமையாதது.
அ) வண்டல் மண்ணின்
ஆ) கரிசல் மண்ணின்
இ) செம்மண்ணின்
ஈ) மணலின்
Answer:
ஈ) மணலின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

குறுவினா

Question 1.
இயற்கைச் சமநிலை என்றால் என்ன?
Answer:
மழைப்பொழிவு மூலமாக மண்பரப்பில் நீர் நிறைந்து தாவர உயிரினங்களும், விலங்கினங்களும் தோன்றின. இவ்வாறு சார்ந்து வாழும் இந்த உயிரினங்கள் அனைத்தும் ஒருகுழுவாக ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. இவற்றிற்கான உணவுச் சங்கிலியே இயற்கைச் சமநிலை எனப்படும்.

Question 2.
சார்க் அமைப்பில் இருக்கும் நாடுகள் யாவை?
Answer:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், தாய்லாந்து.

Question 3.
கார்பன் அற்ற ஆற்றல்கள் யாவை?
Answer:
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், ஹைட்ரஜன் ஆற்றல், தாவர ஆற்றல் போன்றவை கார்பன் அற்ற ஆற்றல்கள் எனப்படும்.

Question 4.
பெருமழையைத் தாங்க இயற்கை தந்த அமைப்புகள் யாவை?
Answer:
குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால், வாய்க்கால்கள், வெள்ளச் சமவெளிகள் போன்றவையே பெருமழையைத் தாங்க இயற்கை தந்த அமைப்புகளாகும்.

Question 5.
தேசிய பேரிடர் ஆணையம் எந்தெந்த நிலைகளில் குழுக்களை அமைத்துள்ளன?
Answer:
மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குழுக்களை அமைத்துள்ளன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 6.
குஜராத் விஞ்ஞானிகளின் மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குறிப்பிடுபவை யாவை?
Answer:
கார்மேகங்கள் சூரிய உதயத்திற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிழக்கு வானத்தில் தோன்றுதல், செம்மை நிற மேகங்கள், திடீர்ப்புயல், காற்றின்திசை, இடி, மின்னல், பலமான காற்று, வானவில், முட்டைகளைச் சுமந்திருக்கும் எறும்புகள், பறக்கும் பருந்து, சூரியனைச் சுற்றி ஒளிவட்டம், வெப்பமும் ஈரப்பதமுமான வானிலை, தூசுப் பனிமூட்டம் முதலியவைகளே மழையைக் கணிக்கும் அறிகுறிகளாகக் குஜராத் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

Question 7.
எவற்றையெல்லாம் பசுமைக்குடில் வாயுக்கள் என்கின்றோம்?
Answer:
கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், நீர்வாயு போன்றவைகளைப் பசுமைக்குடில் வாயுக்கள் என்கிறோம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 8.
மழையின் சிறப்பினை எடுத்துரைக்கும் இலக்கியத் தொடர்கள் முதுமொழிகள் சிலவற்றைச் சான்றாகத் தருக.
Answer:

  • மாமழை போற்றுதும்
  • நீரின்றி அமையாது உலகு
  • மாரியல்லது காரியமில்லை

Question 9.
ஆற்றில் மணல் அள்ளுவதால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பேரிடர் யாது?
Answer:
கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டவையே ஆகும். இதற்கு முதன்மையாகக் காரணமாக அமைவது ஆற்றல் மணல் அள்ளுவதே ஆகும்.

சிறுவினா

Question 1.
வெள்ளச் சமவெளி என்றால் என்ன? அதன் பயன் யாது?
Answer:
வெள்ளச்சமவெளி : வெள்ளச்சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரணாகும்.
வெள்ளச்சமவெளியின் பயன் :

  • ஆற்றின் ஓரங்களில் படியும் பொருள்களை ஆற்றங்கரைப் படிவு என்பர்.
  • படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான மணலாலும் மற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும்.
  • அப்படிவம் வெள்ளப்பெருக்குக் காலங்களில் நீரை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும்.
  • நீர் மாசடைவதைத் தடுக்கும்; வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்துவிட்டால் பாதுகாக்கும்.
  • உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் பயன் அடையும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.1 பெருமழைக்காலம்

Question 2.
பேரிடர் வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டியவை யாவை ?
Answer:

  • பதற்றமடைதலை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • வானிலை ஆராய்ச்சி மையங்கள் வெளியிடும் புயல், மழை தொடர்பான காலங்களின் அடிப்படையில் பொதுமக்கள் செயல்பட வேண்டும்.
  • வதந்திகளை நம்பவோ, பிறரிடம் பரப்பவோ கூடாது,
  • தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவற்றின் உதவியுடன் : மீட்புப் பணியை மேற்கொள்ளுதல் வேண்டும்.
  • பாதுகாப்புப் பணிகளில் முழுவதுமாக ஈடுபட வேண்டும்.
  • பாதுகாப்பு மையங்கள், மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றை மிக அருகிலே வைத்திருத்தல் வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 3.7 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 3.7 திருக்குறள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

குறுவினாக்கள்

Question 1.
தீயினால் சுட்டதைப் ‘புண்’ என்றும் நாவினால் சுட்டதை ‘வடு’ என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?
Answer:

  • தியினால் சுட்டது உடலில் வடுவாக இருந்தாலும், உள்ளத்தில் ஆறிவிடும்.
  • நாவினால் சுட்டது மனத்தில் என்றும் ஆறாத வடுவாக நிலைத்துவிடும்.
  • எனவே, தீயினால் சுட்டதைப் ‘புண்’ என்றும், நாவினால் சுட்டதை ‘வடு’ என்றும் வள்ளுவம் கூறுகிறது.

Question 2.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
Answer:

  • மருந்தாகித் தப்பா மரம், தன் எல்லா உறுப்புகளாலும் மருந்தாகப் பயன்படும் மரம் என்பது உவமை.
  • செல்வம், பிறருக்குப் பயன்படும்வகையில் வாழும் பெருந்தகையானுக்கு உவமையாகக் கூறப்பட்டது.
  • மரம் – உவமானம்; பெருந்தகையான் – உவமேயம்; பயன்படல் – பொதுத்தன்மை ; ‘அற்று’ – உவமை உருபு.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 3.
எதற்குமுன் நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது?
Answer:
நாக்கு அடைத்து, விக்கல் வந்து உயிர்க்கு இறுதி வருமுன், நல்ல செயல்களை விரைந்து செய்யவேண்டும் என்று, திருக்குறள் கூறுகிறது.

Question 4.
சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
Answer:
செயலின் வலிமை, தன்னின் வலிமை, பகைவனின் வலிமை, துணையானவரின் வலிமை

Question 5.
மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
Answer:
மருந்து மரமாக இருப்பவர் : பெருந்தகையாளர் மருந்து : செல்வம்

கூடுதல் வினாக்கள்

Question 6.
மலையினும் மாணப்பெரியது எது?
Answer:
தனக்குரிய நேர்வழியில் மாறாது, அடக்கமாக இருப்பவனின் உயரிய தோற்றமானது, மலைப்பின் மாண்பைக் காட்டிலும் பெரியதாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 7.
நாவை ஏன் காக்க வேண்டும்?
Answer:
எதனை அடக்கிக் காக்காவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கிக் காக்க வேண்டும். அவ்வாறு நாவைக் காக்காவிட்டால், சொல்குற்றம் ஏற்பட்டுத் துன்பப்படுவர்.

Question 8.
தாளாற்றிப் பொருளீட்டுவது எதற்காக எனக் குறள் கூறுகிறது?
Answer:
விடாமுயற்சி செய்து பொருளீட்டுவது, தகுதியானவருக்கு உதவி செய்வதற்கேயாகும் எனக் குறள் கூறுகிறது.

Question 9.
உயிர் வாழ்வார், செத்தார் – எவர் எவர்?
Answer:
உலக நடைமுறையோடு பொருந்தி ஒத்து வாழ்பவரே உயிர் வாழ்பவராவார். அவ்வாறு வாழாதவர் செத்தவராவர்.

Question 10.
உலகில் நிலைத்து நிற்பதாகக் குறள் கூறுவது யாது?
Answer:
இணையற்ற, உயர்ந்த புகழே அல்லாமல், இந்த உலகத்தில் ஒப்பற்று உயர்ந்து நிலைத்து நிற்பது, வேறு எதுவுமில்லை எனக் குறள் கூறுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 11.
‘நன்று’ என வள்ளுவர் எதனைக் கூறுகிறார்? ‘
Answer:
தோன்றினால், புகழ்தரும் பண்புகளுடன் தோன்ற வேண்டும். இல்லையெனில், தோன்றாமல் இருப்பதே நன்று என, வள்ளுவர் கூறுகிறார்.

Question 12.
வாழ்வார், வாழாதவர் எவர் எவர் என வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
பழி இல்லாமல் வாழ்பவரே வாழ்பவராவார்; புகழ் இல்லாமல் வாழ்பவர், வாழாதவராவார் என, வள்ளுவர் கூறுகிறார்.

Question 13.
செய்தவம் ஈண்டு முயலப்படுவது ஏன்?
Answer:
விரும்பியதை விரும்பியவாறே பெற முடியும் என்பதனால், செய்ய முடிந்த தவம், இங்கேயே முயன்று பார்க்கப்படுகிறது என, வள்ளுவர் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 14.
தவமிருப்பார் மேலும் பயன் யாது?
Answer:

  • பொன்னை நெருப்பில் புடம் இட்டுச் சுடும்போது, மாசு நீங்கி ஒளிவிடும். *
  • அதுவால், தவம் இருந்து, துன்பத்தில் தம்மை வருத்திக் கொள்பவருக்கு, ஞானம் ஒளி பெற்று வளம.

Question 15.
இவ்வலகு எத்தகைய பெருமையை உடையது?
Answer:
நேற்று உயிருடன் இருந்தவன், இன்று இல்லை என்னும் நிலையாமைப் பெருமையை உடையது இவ்வுலகம்.

Question 16.
கோடியும் அல்ல பல. – கருதுபவர் எவர்?
Answer:
வாழ்வின் தன்மையை ஒரு வேளையாயினும் சிந்திக்காதவர், ஒரு கோடியினும் அதிகமாக எண்ணுவர்.

Question 17.
நோதல் இலன் – எவன்?
Answer:
பொருள்களிடமிருந்து பற்றுதலை நீக்கியவனாக எவனொருவன் இருக்கிறானோ, அவன் அந்தப் பொருள்களால் துன்பம் அடைவது இல்லை.

Question 18.
பற்றை விட என்ன செய்ய வேண்டும்?
Answer:
பற்றை விட்டு அகல்வதற்குப் பற்று இல்லாத (இறை)வனைப் பற்றி நிற்க வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 19.
இன்பம் எப்பொழுது இடைவிடாது பெருகும்?
Answer:
பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்துபோனால், இன்பம் என்பது இடைவிடாது பெருகும்.

Question 20.
பேரா இயற்கை பெற வழியாது?
Answer:
எக்காலத்திலும் நிறைவு செய்யமுடியாத இயல்புடைய ஆசை என்பதனை விட்டொழித்தால், நிலையான இன்பத்தைப் பெற முடியும்.

Question 21.
விரைந்து கெடுபவன் யார்?
Answer:
மற்றவருடன் ஒத்துப் போகாதவனும், தன் வலிமையை அறியாதவனும், தன்னைப் பெரிதாக நினைப்பவனும் விரைந்துக் கெடுபவனாவான்.

Question 22.
இல்லாகித் தோன்றாக் கெடுபவன் யார்?
Answer:
தன்னிடம் உள்ள பொருள் முதலானவற்றின் அளவை அறிந்து வாழாதவன், வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்றிருப்பதுபோல் காட்சி தந்து, தோற்றம் இல்லாமல் கெட்டு அழிவான

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 23.
எவருக்கு அருவினை என்பது இல்லையாம்?
Answer:
உரிய கருவிகளுடன், தக்க காலம் அறிந்து செயலைச் செய்பவனுக்கு, செயதற்கு அரிய செயல் என்று எதுவும் இல்லையாம்.

Question 24.
எவரால் ஞாலத்தையும் பெறமுடியும்?
Answer:
உரிய காலத்தில், பொருத்தமான இடத்தில் செயலைச் செய்யும் ஆற்றலைப் பெற்றவனால், ஞாலத்தையும் பெறமுடியும்.

Question 25.
காலம் கருதி இருப்பவர் – எவர்?
Answer:
உலகத்தை வெல்லக் கருதுபவர், மனம் கலங்காமல் அதற்கு உரிய காலத்திற்காகக் காத்திருப்பர்.

Question 26.
அரிய செயலை எப்போது செய்து முடிக்கவேண்டும்?
Answer:
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்த்தால், படிப்பதற்கு அரிய செயலை, அப்போதே செய்து முடிக்க வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 27.
திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் பாவை?
Answer:
உலகப்பொதுமறை, பொய்யாமொழி வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்கள், திருக்குறளுக்கு ழங்கப்பெறுகின்றன.

Question 28.
மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?
Answer:
நோயாளி, மருத்துவர் பாத்து, மருந்தாளுநர்.

சிறுவினாக்கள்

Question 1.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:

  • இக்குறட்பாவில் வேற்றுமை அணி பயின்று வந்துள்ளது.
  • இரு பொருள்களின் ஒற்றுமையை முதலில் கூறிப் பின்னர் அவற்றின் வேற்றுமையைக் கூறுவது வே றுமை அணி. தீயினால் சுட்ட புண்ணும், நாவினால் சுட்ட வடுவும் சுடுதலால், ஒற்றுமை உடையன. புண் ஆறும்; வடு ஆறாது என்பது வேற்றுமை. எனவே, வேற்றுமை அணி பயின்று வந்துள்ளது.

Question 2.
புகழுக்குரிய குணங்களாக நீவிர் கருதுவன யாவை? புகழின் பெருமையைப் பொதுமறைவழி நின்று கூறுக.
Answer:
உலகநடை அறிந்து, அடக்கத்தோடு பிறருக்கு உதவி செய்து வாழ்வதே, புகழுக்குரிய குணங்கள் ஆகும்.

இணையற்ற இந்த உலகத்தில், உயர்ந்த புகழே அல்லாமல், உயர்ந்து ஒப்பற்று நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை .

எனவே, வாழ்ந்தால் புகழ் தரும் பண்புகளுடன் வாழ வேண்டும். இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே நல்லது. ஏனெனில், பழி இல்லாமல் வாழ்பவரே வாழ்பவராவார். புகழ்பெற இயலாமல் வாழ்பவர், வாழாதவரேயாவார் எனப் புகழின் பெருமையைப் பொதுமறை விளக்குகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 3.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் – இக்குறட்பாவை அலகிட்டு வாய்பாடு கூறுக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள் - 1

Question 4.
சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணிமைப் பொருத்தி எழுதுக.
Answer:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

செய்யுளில் முன்னர்வந்த சொல், மீண்டும் மீண்டும் அதே பொருளில் பல முறை வருமானால், அது சொற்பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.

இக்குறளில் வலி’ என்னும் சொல், வலிமை’ என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, இச்செய்யுளில் சொற்பொருள் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 5.
விரும்பியதை அடைவது எப்படி? குறள்வழி விளக்குக.
Answer:
செய்ய முடிந்த தவத்தை முயன்று பார்த்தால், விரும்பியதை விரும்பியபடி பெறமுடியும். பொன்னை நெருப்பில் இட்டுச் சுடும்போது, அது மாசு நீங்க ஓரிவிடுவதுபோலத் தவத்தை மேற்கொண்டு வருந்தினால், ஞானம் என்னும் அறிவு ஒளி பெறலாம்.

உரிய காலத்தில், பொருத்தமான இடத்தில் தங்க செயலை மேற்கொண்டால், உலகத்தையே பெறக் கருதினாலும் கிடைத்துவிடும் எனக் குறத வழிகாட்டுகிறது.

கூடுதல் வினாக்கள்

Question 6.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:

  • இதில் உவமை அணி பயின்றுள்ளது. உவமானம் ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைய, இடையில் உவமை உருபைக் கொடுத்துக் கூறுவது உவமை அணியாகும்.
  • மருந்தாகித் தப்பா மரம் – உவமானம்; செல்வம் பெருந்தகையான்கண் படின் – உவமேயம்.
  • அற்று – உவமை உருபு. எனவே, உவமையணி பயின்றுள்ளது.

Question 7.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:

  • இதில் உவமை அணி பயின்றுள்ளது.
  • வமானம், உவமேயம், உவமை உருபு ஆகியவற்றைப் பெற்றிருப்பது உவமை அணி.
  • சுடச்சுடரும் பொன் – உவமானம்; துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு ஒளிவிடும் – உவமேயம்; போல் – உவம உருபு. எனவே, உவமையணி பயின்றுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 8.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. – இக்குறளில் பயிலும் அணியைச் சுட்டி விளக்குக.
Answer:

  • இக்குறளில் சொற்பொருள் பின்வரு நிலையணி பயின்றுள்ளது.
  • ஒருசொல் அதே பொருளில், பலமுறை இடம்பெறுவது, சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
  • ‘பற்று’ என்னும் சொல், ‘பிடித்தல்’ என்னும் பொருளில் பலமுறை இடம்பெற்றதால், சொற்பொருள் பின்வரு நிலையணியாயிற்று.

Question 9.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். – இக்குறளில் பயின்று வரும் அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
இக்குறளில் பிறிது மொழிதல் அணி பயின்றுள்ளது. கூறக்கருதிய பொருளை நேரே கூறாமல், பிறிது ஒன்றைக் கூறி, அதன்மூலம் விளக்குவது. அதாவது, உவமானத்தைக் கூறி, உவமேயத்தைப் பெற வைப்பது, பிறிது மொழிதலணியாகும்.

“இலேசான மயிலிறகேயானாலும், அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் வலிமையான அச்சும் முறிந்துவிடும்” என்னும் உவமையைக் கூறி, “வலிமை இல்லாதவராயினும் பலர் ஒன்று சேர்ந்தால், வலிமை பொருந்தியவனையும் அழித்திட இயலும்” என்னும் பொருளைப் பெறவைத்தமையால், பிறிது மொழிதலணியாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 10.
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.- அலகிட்டு வாய்பாடு கூறுக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள் - 2

Question 11.
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது – அலகிட்டு வாய்பாடு கூறுக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள் - 3

Question 12.
திருக்குறள் குறித்து நீ அறிவன யாவை? ]
Answer:

  • தமிழ் இலக்கியங்களுள் வாழ்வியலுக்கு வழிகாட்டும் நூல் திருக்குறள்.
  • இது, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; 1330 குறள் வெண்பாக்களால் ஆகியது.
  • உலக மக்கள் அனைவருக்கும், எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துகளை உள்ளடக்கியது.
  • அலகப் பொதுமறை’ எனப் போற்றப்படுவது. குறள் வெண்பாக்களால் ஆகியதால், ‘குறள்’ எனவும், திரு என்னும் அடைமொழி பெற்றுத் ‘திருக்குறள்’ எனவும் வழங்கப்பெறுவது.

Question 13.
திருக்குறளுக்குள்ள உரைகள் பற்றி எழுதுக.
Answer:
பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள், தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர் என்னும் பத்துப் பேருடைய பழைய உரைகள் உள்ளன.

இன்றளவும், காலத்திற்கு ஏற்பப் பலர் உரை எழுதி வருகின்றனர். உலகமொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளின் சிறப்பை விளக்கிப் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு, ‘திருவள்ளுவமாலை’ என வழங்கப் பெறுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 14.
திருவள்ளுவர் குறித்து அறிவன யாவை?
Answer:
திருக்குறளை இயற்றியவர் குறித்த வரலாற்றுச் செய்திகள் எதுவும் தெளிவாகக் கிடைக்கவில்லை.

எனினும், தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப் பெறுகிறார்.

Question 15.
திருக்குறள் அதிகாரங்கள், இயல்கள் குறித்து எழுதுக.
Answer:

  • திருக்குறள் அறத்துப்பால் (38 அதிகாரங்கள்), பொருட்பால் (70 அதிகாரங்கள்), இன்பத்துப்பால் (25 அதிகாரங்கள்) என்னும் முப்பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும் கொண்டது.
  • அறத்துப்பால் – பாயிரவியல் (4), இல்லறவியல் (20), துறவறவியல் (13), ஊழியல் (1) என்னும் நான்கு இயல்களைக் கொண்டுள்ளது.
  • பொருட்பால் – அரசியல் (25), அமைச்சியல் (32), ஒழிபியல் (13) என்னும் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது.
  • இன்பத்துப்பால் : களவியல் (7), கற்பியல் (18) என்னும் இரண்டு இயல்களைக் கொண்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 16.
மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?
Answer:

  • மருந்து : முன்னர் உண்டது செரித்ததை அறிந்து உண்டால், மருந்து என ஒன்று உடலுக்குத் தேவையில்லை.
  • மருத்துவர் : நோயையும் அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து, நோயாளியன் வயதையும் நோயின் அளவையும் மருத்துவம் செய்தற்குரிய காலத்தையும் ஆராய்ந்து, மருத்துவர் செயல்பட வேண்டும்.
  • மருத்துவம் : நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தாளுநர் என்னும் நான்கு வகைகள் அடங்கும்.

நெடுவினா

Question 1.
கொடையில் சிறந்து விளங்க வள்ளுவம் கூறும் வழிகளை ஒப்புரவறிதல் அதிகாரம்வழி நிறுவுக.
Answer:

  • உலகியல்பு அறிந்து, கைம்மாறு கருதாமல், கண்ணோட்டத்துடன் பிறர்க்கு உதவி வாழ்தலே ஒப்புரவறிதலாகும்.
  • ஒப்புரவு அறிந்தவர், தம் கைப்பொருளைப் பிறர் நலனுக்குத் தேவையுள்ளபோது செலவழிப்பவராக இருப்பர். விடாமுயற்சி செய்து பொருள் ஈட்டும் செயல்களாம், தகுதியானவர்க்குக் கொடுத்து உதவுவதற்கே ஆகும். *
  • உலகநடை அறிந்து, உயர்ந்தவர் அனைவரோடும் ஒத்துப்போகிறவனே உயிர் வாழ்பவனாவான்.
  • பொருட்செல்வமானது, பெருந்தன்மை பொருந்தி வனிடம் சென்று சேருமானால், அது தன் உறுப்புகளால் மருந்தாகப் பயன்படும் மரம், ஊர் நடுவில் பழுத்து உள்ளதற்குச் சமமாகும் என, வள்ளுவர் கூறுகிறார்.
  • இவற்றால் ஒப்புரவு அறிந்தவரே, கொடையால் சிறந்து விளங்க முடியும் என்பதனைத் தெளியலாம்.

Question 2.
‘அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும்’ – இக்கூற்றை முப்பால்வழி விளக்குக.
Answer:
ஒருவர் மனம், மொழி, செயல்களால் அடங்கி இருப்பதே அடக்கமாகும். அந்த அடக்கமுடைமை ஒருவனை வாழ்வில் எவ்வெவ் வாறு உயர்த்தும் என்பதை முப்பால்வழிக் காண்போம்.

தன் தகுதிக்கென ஆன் தேன் கூறிய நேர்வழி மாறாது, ஒருவன் அடக்கமாக இருப்பானாயின், அவன் உயர்வானது, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரிதாக விளங்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

அடக்கம் என்பதில் புலன் அடக்கம் முக்கியம். அவ்வகையில் எதனை அடக்கிக் காக்கவில்லையானாலும், நாவை மட்டுமாவது அடக்கிக் காக்க வேண்டும்.

அப்படி நாவை அடக்கிக் காக்கவில்லையானால், பேசும் சொற்களில் குற்றம் ஏற்பட்டு, சிக்கலுக்கு உள்ளாகித் துன்பப்படுவர்.

நாவைன் அடக்க வேண்டும்? தீயினால் சுட்ட புண், உடலில் வடுவாகக் கிடந்தாலும், உள்ளத்துள் ஆடும். நாவினால் கூறும் சுடுசொல் புண்ணாகும் வகையில் சுடாது. ஆனால், வடுவாகவே உள்ளத்தில் நிலைத்திருந்து ஊறு செய்யும்.
எனவே, ஒருவர் வாழ்வில் பழிபாவமின்றி உயர்வு பெற, அடக்கம் இன்றியமையாதது என்பதை முப்பால் தெளிவுபடுத்துகிறது.

இலக்கணக்குறிப்பு

அடங்கியான், அறிவான், வாழ்வான், வாழ்வாரே, நீங்கியான், வியந்தான், கருதுபவர் – வினையாலணையும் பெயர்கள்
தோற்றம், நோதல், வாழ்க்கை – தொழிற்பெயர்கள்
மலையினும் – உயர்வு சிறப்பும்மை
யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்
நா காக்க (நாவைக் காக்க), நாச்செற்று (நாவினைச் செற்று), அவா நீப்பின் (அவாவை நீப்பின்) – இரண்டாம் வேற்றுமைத்தொகைகள்
சுடச்சுடரும் (சுடுவதால் சுடரும்) – மூன்றாம் வேற்றுமைத்தொகை
நெருநல் உளன் (நேற்றைக்கு உளன்), இன்று இல்லை – நான்காம் வேற்றுமைத்தொகைகள்

வினைவலி, தன்வலி, மாற்றான்வலி, துணைவலி – ஆறாம் வேற்றுமைத்தொகைகள்
காக்க, தோன்றுக, பற்றுக – வியங்கோள் வினைமுற்றுகள்
சோகாப்பர் – பலர்பால் வினைமுற்று
சொல்லிழுக்கு (சொல்லால் உண்டாகும் இழுக்கு) – மூன்றன் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
காவாக்கால், பொன்றாது, இடையறாது, கலங்காது – எதிர்மறை வினையெச்சங்கள்
சுட்ட புண், சுட்ட வடு, தந்த பொருள் – இறந்தகாலப் பெயரெச்சங்கள்
ஆறும் – உடன்பாட்டு ஒன்றன்பால் வினைமுற்று

புணர்ச்சி விதிகள்

1. தாளாற்றி – தாள் + ஆற்றி.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தாளாற்றி).

2. பொருளெல்லாம் – பொருள் + எல்லாம்.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பொருளெல்லாம்).

3. அச்சிறும் – அச்சு + இறும்.
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (அச்ச் + இரும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அச்சிறும்.)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Question 1.
படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள் - 4
அ) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ‘ ஈண்டு முயலப் படும்.
ஆ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
இ) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
Answer:
இ) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.

Question 2.
துன்பப்படுபவர் ……….
அ) தீக்காயம் பட்டவர்
ஆ) தீயினால் சுட்டவர்
இ) பொருளைக் காக்காதவர்
ஈ) நாவைக் காக்காதவர்
Answer:
ஈ) நாவைக் காக்காதவர்

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
Answer:
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தாற்றப்பட்
டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
அ) ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்.
ஆ) நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு.
இ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
Answer:
ஆ) நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 4.
கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
Answer:
பூக்களுக்கும் முட்களுக்கும் இடையில்
புழங்குகிறது யோசனை
பாசத்துக்கும் நியாயத்துக்கும் நடுவில்
நசுங்குகிறது அறம்
இன்பத்துக்கும் பேராசைக்கும் நடக்கும்
போராட்டத்தில் வெடிக்கின்றன
வெளியில் குண்டுகளும்
வீட்டில் சண்டைகளும்
ஆசை அறுத்தல் எளிதல்ல!
முயன்று பார்க்கலாம் வா!

அ) அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்
ஆ) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.
இ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.
Answer:
இ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.

Question 5.
ஒப்புரவு என்பதன் பொருள்……
அ) அடக்கமுடையது
ஆ) பண்புடையது
இ) ஊருக்கு உதவுவது
ஈ) செல்வமுடையது
Answer:
இ) ஊருக்கு உதவுவது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 6.
பொருத்துக.
அ) வாழ்பவன் – i) காத்திருப்பவன்
ஆ) வாழாதவன் – ii) மருந்தாகும் மரமானவன் !
இ) தோன்றுபவன் – iii) ஒத்ததறிபவன்
ஈ) வெல்ல நினைப்பவன் – iv) புகழ் தரும் பண்புனவன்
உ) பெரும் பண்புடையவன் – V) இசையொழிந்த வல் ,
– vi) வீழ்பவன்
Answer:
அ – iii, ஆ – V, இ – iv, ஈ – i,

Question 7.
இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
அ) சுடச்சுடரும் – மூன்றாம் வேற்றுமைத்தொகை
ஆ) சுடச்சுடரும் பொன் – எதிர்காலம் பெயரெச்சத் தொடர்
இ) சுடச்சுட – அடுக்கத்தொடர்

Question 8.
விரைந்து கெடுபவன் யார்?
அ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.
ஆ) பிறருடன் ஒத்துப் பாகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
இ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
ஈ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.
Answer:
ஈ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 9.
வேளாண்மை செய்தற் பொருட்டு – பொருள் கூறுக.
Answer:
விடை உதவி செய்வதற்கே ஆகும்.

Question 10.
பற்று தங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது
அ) பற்றுகள் பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும்
ஆ) பற்றுகள் அகலும் – பொருள்களின் துன்பம் அகலும்
இ) பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்
ஈ) பொருள்களின் இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும்
Answer:
இ) பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்

Question 11.
அருவினை – புணர்ச்சிவிதி கூறுக.
Answer:
அருவினை – அருமை + வினை – “ஈறுபோதல்” (அருவினை)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்

Question 12.
சொல்லிழுக்குப் படுபவர் ……………….
அ) அடக்கமில்லாதவர்
ஆ) தீயினால் சுட்டவர்
இ) நாவைக் காக்காதவர்
ஈ) பொருளைக் காக்காதவர்
Answer:
இ) நாவைக் காக்காதவர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 1.
மயங்கொலி எழுத்துகள் (ண, ந, ன, ல, ழ, ள, ர, ற) அமைந்த சொற்களைத் திரட்டி, பொருள் வேறுபாடு அறிந்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவச் செல்வங்களே,
இன்று உங்களுக்கு மயங்கொலி எழுத்துகள் அமைந்த சொற்களையும், அதன் பொருள் வேறுபாட்டினையும் கற்பிக்கப் போகிறேன்.

ராமு : ணகர னகர வேறுபாடுகளை விளக்குங்கள் ஐயா.
அண்ணம் – மேல்வாய்
அன்னம் – உணவு / சோறு ட
பக்கத்தில் வரும் ண – இதை டண்ணகரம் என்று அழைப்பதுண்டு. அன்னத்தில், ற – பக்கத்தில் வரும் ன – இதை றன்னகரம் என்று அழைப்பதுண்டு.

சோமு : ஐயா இதன் பயன்பாடுகள் பற்றிக் கூறுங்கள் ஐயா. இதன் பயன்பாடுகள் : ட – ணவும், ற – பக்கத்தில் ன வும் வரும் எனப்புரிந்தால் எழுத்துப்பிழைகள் மிகக் குறையும்.

மன்றம் – அவை
மண்ட பம் – மக்கள் கூடுமிடம்
குன்று – சிறிய மலை
குன்று – உருண்டை (வடிவம்)

இவை போன்று வேறுபாடு கண்டு பிழைகளைக் களையலாம்.

ராமு : இன்னுமொரு விளக்கம் தேவை. ல-ழ வேறுபாடுகள் பற்றியும் விளக்கம் தேவை ஐயா.
ல-ழ வேறுபாடு
கலை நுட்பம் / அறிவு
கழை – மூங்கில்
மலை – குன்று
மழை – வான்மழை
தலை – உடல் உறுப்பு
தழை – வளர் / இலை
விலை – மதிப்பு
விழை – விருப்பம்

இவ்வாறான மயங்கொலிச் சொற்களை பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம் பிழை தவிர்க்க லாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

ராமு : மிக்க நன்றி ஐயா, தெளிவாகப் புரிந்து கொண்டேன் ஐயா.
ர-ள மயங்கொலிச் சொற்களுக்கு எ.கா. தாருங்கள் ஐயா.
ர – ற வேறுபாடு
மரம் – தாவரம்
மறம் – வீரம்
அரம் – கருவி
அறம் – தருமம்
இவ்வாறான மயங்கொலிச் சொற்களைப் பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம் பிழை தவிர்க்கலாம்.

சோமு : ஐயா, கடைசியாக லகர னகர வேறுபாட்டையும் கூறுங்கள் ஐயா.
ல ள வேறுபாடு
கோல- அறிவு/ நுட்பம்
களை – பயிரின் நடுவே வளர்வது / ஆடை களைதல்
கோல் – குச்சி
கோள் – செவ்வாய் (கோள்)
வலம் – வலப்புறம்
வளம் – செழிப்பு
இவ்வாறான மயங்கொலிச் சொற்களைப் பேசுவது மற்றும் எழுதுவதன் மூலம் பிழை தவிர்க்கலாம் மாணவர்களே.
மாணவர்களே மற்றொரு வகுப்பில் சந்திக்கலாம்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
பிழையான தொடரைக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
Answer:
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

Question 2.
பேச்சுத் தமிழில் அமைந்த தொடரை தேர்க!
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
Answer:
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.

Question 3.
முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் – இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும் .
Answer:
முடிந்தால் தரலாம் :
முடிந்தால் – கொடுக்கும் எண்ணம் (இயன்றால்)
ஒரு பொருளைக் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம் என்ற பொருளைத் தருகின்றது.
உன்னிடம் உள்ள பொருளைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ முடிந்தால் தரலாம்.

முடித்தால் தரலாம் :
முடித்தால் – செயல் முடிந்த பின்
தரப்பட்டுள்ள வேலையை முடித்து விட்டேன் என்றால் தரலாம் என்ற பொருளைத் தருகின்றது.
வீட்டின் திறவுகோலை வேலைகளை முடித்தால் தரலாம்.

Question 4.
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
Answer:
(i) எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள / ழ, ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.

(ii) இவ்வெழுத்துக்கள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். எழுதும் போது தொடக்கத்தில் சில காலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.

(iii) வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும், எனவே நிதானமாக எழுதுவது நல்லது.

(iv) கெ, கே, கொ, கோ போன்ற கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் எவ்வாறு திரியும்
அ) இயல்பாகப் புணரும்
ஆ) லகரம் டகரமாகும்
இ) லகரம் னகரமாகும்
ஈ) லகரம் றகரமாகும்
Answer:
ஈ) லகரம் றகரமாகும்

Question 2.
வேற்றுமைப் புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் எவ்வாறு திரியும்
அ) ளகரம் லகரமாகும்
ஆ) ளகரம் னகரமாகும்
இ) ளகரம் டகரமாகும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Question 3.
எழுதும்போது வரும் பிழைகளை ……………….. வகையாகக் கொள்ளலாம்.
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
Answer:
ஆ) 4

Question 4.
உயிரெழுத்துகள்
அ) 10
ஆ) 12
இ) 30
ஈ) 18
Answer:
ஆ) 12

Question 5.
உயிரெழுத்துகளின் வகை
அ) 2
ஆ) 4
இ) 12
ஈ) 18
Answer:
அ) 2

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 6.
மெய்எழுத்துகள்
அ) 3
ஆ) 18
இ) 12
ஈ) 30
Answer:
ஆ) 18

Question 7.
மெய்எழுத்துகளின் வகை
அ) 3
ஆ) 12
இ) 18
ஈ) 30
Answer:
அ) 3

Question 8.
உயிர் மெய்யெழுதுக்கள்
அ) 18
ஆ) 126
இ) 216
ஈ) 247
Answer:
இ) 216

Question 9.
உயிர் மெய்க்குறில்
அ) 90
ஆ) 126
இ) 247
ஈ) 216
Answer:
அ) 90

Question 10.
உயிர் மெய் நெடில்
அ) 90
ஆ) 126
இ) 247
ஈ) 216
Answer:
ஆ) 126

Question 11.
தமிழ் எழுத்துகள் மொத்தம்
அ) 90
ஆ) 246
இ) 216
ஈ) 247
Answer:
ஈ) 247

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 12.
ந, ண, ன, ற, ர, ல,ள,ழ – இவ்வெட்டு எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வரும் எழுத்து
அ) ர
ஆ) ல
இ) ந
ஈ) ற
Answer:
இ) ந

Question 13.
சொல்லின் இறுதியில் வராத எழுத்தைக் கண்டறிக.
அ) ர
ஆ) ல
இ) ந
ஈ) ற
Answer:
இ) ந

Question 14.
……….. சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.
அ) வடமொழியில்
ஆ) தமிழில்
இ) ஆங்கிலத்தில்
ஈ) இந்தியில்
Answer:
ஆ) தமிழில்

Question 15.
க்ரீடம், ப்ரியா – என்பவை …………. மொழிச் சொற்கள்.
அ) வட
ஆ) அரபு
இ) தமிழில்
ஈ) தெலுங்கு
Answer:
அ) வட

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 16.
தமிழ்ச் சொல் ………… மெய்யோடு முடியாது.
அ) வல்லின
ஆ) மெல்லின
இ) இடையின
ஈ) உயிர்
Answer:
அ) வல்லின

Question 17.
ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் ………….. என்னும் வரிசையே வரும்.
அ) க, ச, ப
ஆ) ன, ண, ந
இ) ர, ற
ஈ) ப. ம.ய
Answer:
அ) க, ச, ப

Question 18.
சரியான கூற்றினைக் கண்டறிக.
i) வல்லின மெய்கள் ஈறொற்றாய் வாரா
ii) ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை
iii) க், ச், த்,ப, ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும்

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, iii – சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 19.
சொல்லின் முதலில் வராத எழுத்துகள்
அ) ட, ற
ஆ) த, ந
இ) ப, ம
ஈ) க, ச
Answer:
அ) ட, ற

Question 20.
ஆய்த எழுத்து சொல்லின் ……………. வரும்.
அ) முதலில்
ஆ) இடையில்
இ) கடைசியில்
ஈ) ஈற்றில்
Answer:
இ) கடைசியில்

Question 21.
மெல்லின எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வராதவை
அ) ங, ஞ
ஆ) ங, ம
இ) ண, ன
ஈ) ந, ம
Answer:
ஈ) ந, ம

Question 22.
………. என்னும் எழுத்துகளுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று/கள் விகுதி/வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும்.
அ) ய், ர், ல், ழ், ள்
ஆ) ற், ட்
இ) ங. ஞ, ண, ர. ம
ஈ) க், ச்ட், த், ப்
Answer:
அ) ய், ர், ல், ழ், ள்

Question 23.
………….. ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும்.
i) ய
ii) ர
iii) ழ

அ) மூன்றும் சரி
ஆ) மூன்றும் தவறு
இ) i, iii – சரி
ஈ) i, ii – சரி
Answer:
அ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 24.
தனிக்குறிலை அடுத்து ……………. ஒற்றுகள் வாரா.
அ) க, ச
ஆ) ர, ழ
இ) த, ப
ஈ) க, ப
Answer:
ஆ) ர, ழ

Question 25.
லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம்வரின் லகரம் ……… திரிவதுண்டு.
அ) னகரமாய்த்
ஆ) ணகரமாய்த்
இ) டகரமாய்த்
ஈ) மகரமாய்த்
Answer:
அ) னகரமாய்த்

Question 26.
ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம்வரின் ளகரம் ………… திரிவதுண்டு.
அ) னகரமாய்த்
ஆ) ணகரமாய்த்
இ) டகரமாய்த்
ஈ) றகரமாய்த்
Answer:
இ) டகரமாய்த்

Question 27.
ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம்வரின் ளகரம் ………. திரிவதுண்டு.
அ) னகரமாய்த்
ஆ) ணகரமாய்த்
இ) டகரமாய்த்
ஈ) றகரமாய்த்
Answer:
ஆ) ணகரமாய்த்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 28.
சரியானவற்றைக் கண்டறிக.
i) இயக்குநர்
ii) இயக்குனர்
iii) உறுப்பினர்i
v) வீட்டினர்

அ) – சரி
ஆ) ii, iii – சரி
இ) iv – சரி
ஈ) ii – மட்டும் தவறு
Answer:
ஈ) ii – மட்டும் தவறு

குறுவினா

Question 1.
எழுதும்போது ஏற்படும் பிழைகளை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
Answer:

  • எழுத்துப்பிழை.
  • சொற்பொருட்பிழை.
  • சொற்றொடர்ப் பிழை.
  • பொதுவான பிழைகள் சில என வகைப்படுத்தலாம்.

Question 2.
எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் யாது
Answer:

  1. ஏல்லா இடங்களிலும் பேச்சுத்தமிழை எழுத முடியாது.
  2. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப்பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம்.

Question 3.
எந்நான்கை உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம் என்று தமிழ்நடைக் கையேடு குறிப்பிடுகிறது?
Answer:
ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் சேர்ந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம் என்கிறது தமிழ் நடைக் கையேடு.

Question 4.
சொல்லில் ஆய்த எழுத்தின் நிலை குறித்தெழுதுக.
Answer:

  1. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  2. தனிச்சொல்லாயின் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும்.
    சான்று: அஃது, எஃகு, கஃசு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 5.
தனிக்குறிலையடுத்து ரகரம் வரின் எவ்வாறு எழுத வேண்டும்?
Answer:
தனிக்குறிலையடுத்து ரகரம் வரின் அதனைத் தமிழ் இயல்புக்கேற்பத் திருத்தி எழுத வேண்டும்.
சான்று: நிர்வாகம் – நிருவாகம்; கர்மம் – கருமம்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்
வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஒருவர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட்டார். அவர்
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் 1
உடனே ‘அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி’ என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் மறுத்துத் தமிழிலேயே வறினார்.

அவரது : மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். ‘சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்பது அவர் கூறியதற்குப் பொருள். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.

‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூ ரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர். தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், : சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.

திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் -சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன, புராண நூல்களை வசனமாகி எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவமாக மாற்றினார். தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு ‘நாவலர்’ பட்டம் வழங்கியது. பெர்சிவல் பாதிரியார்
விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.

வினாக்கள்:
1. ‘எல்லி’ என்பதன் பொருள் என்ன?
2. ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம்?
3. ஆழி, கால் பொருள் தருக.
4. ஆறுமுக நாவலர் எவ்வாறு புகழப்பட்டார்? அவர் அறிந்திருந்த மொழிகள் யாவை?
5. பெற்றவர் – இலக்கணக்குறிப்புத் தருக.
6. விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
7. ஆறுமுக நாவலரின் இயற்பெயர் என்ன? “நாவலர்’ என்ற பட்டத்தை யார் வழங்கினார்?
8. ‘வந்திருந்தார்’ இரு பொருள்படும்படி வாக்கியம் அமைக்க.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்
Answer:
1. சூரியன்.
2. 24 நிமிடம்.
3. ஆழி – மோதிரம், கடல்.
கால் – உடல் உறுப்பு, காற்று.
4. ‘வசனநடை கைவந்த வள்ளலார்’ எனப் புகழப்பட்டார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும்
மும்மொழிப் புலமை பெற்றவர்.
5. பெற்றவர் – வினையாலணையும் பெயர்.
6. பெர்சிவல் பாதிரியார்.

7. இயற்பெயர் – ஆறுமுகம்.
நாவலர் பட்டம் – திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியதாகும்.

8. வந்திருந்தார் : உடல் நலம் சரியில்லாத என் தந்தையைக் காண என் மாமா நீண்ட நாள் கழித்து வந்தார்.
வந்து இருந்தார் : பொதுக்கூட்டம் காண பல மைல் தூரம் நடந்த குமரன் கால் வலியால் வந்து இருந்தார்.

தமிழாக்கம் தருக

1. Learning is a treasure that will follow its owner everywhere. (Chinese Proverb).
கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

2. A new language is a new life. (Persian Proverb).
புதிய மொழி புதிய வாழ்க்கை.

3. If you want people to understand you, speak their language. (African Proverb).
பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு.

4. Knowledge of languages is the doorway to wisdom. (Roger Bacon).
மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்.

5. The limits of my language are the limits of my world. (Willgenstin).
என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை.

இலக்கிய நயம் பாராட்டுக

முச்சங்கங் கூட்டி
முது புலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!  – கண்ண தாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

முன்னுரை :
இப்பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

திரண்ட கருத்து :
தமிழன்னையானவள், மூன்று சங்கங்கள் அமைய காரணமானவள். முச்சங்கங்களிலும் நல்ல அனுபவமும் நல்ல அறிவும் கொண்ட புவர்களை ஒன்றாகக் கூட்டியவள். அச்சங்கத்திற்குள் அளவிடமுடியாத பொருள்களைக் கூட்டி நீ உன்னுடைய சொற்களை அதிகரித்து அதே நேரத்தில் சுவை மிக்க கவிதைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடிவருமாறு புதுமைகள் எல்லாம் அமைந்த பெருமகளே! தமிழன்னையே!

தொடை நயம் :
மோனை :
காட்டுக்கு யானை
பாட்டுக்கு மோனை
முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.

சான்று:
முச்சங்கங்
ச்சங்கத்
சொற்சங்க
ற்புதங்க
முதுபுலவர்
ளப்பரிய
சுவைமிகுந்த
மைத்த

எதுகை :
மதுரைக்கு வைகை
செய்யுளுக்கு எதுகை

முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.
சான்று:
முச்சங்க
சொற்சங்க
ச்சங்க
ற்புதங்க

இயைபு : கடைசி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு ஆகும்.
சான்று:
பெருமாட்டி
கவிகூட்டி
பொருள்கூட்டி
தமைக்கூட்டி

அணி நயம் :
அணியற்ற பாக்கள்
பிணியுள்ள வணிதை
தமிழ் மொழியானது சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என்று இயல்பான வார்த்தைகளால் இப்பாடல் அமைந்துள்ளதால் இயல்பு நவிற்சியணி இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

சந்த நயம் :
சந்தம் தமிழுக்குச் சொந்தம்
ஏற்ற கருவியுடன் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல்.

சுவை நயம் :
நா உணரும் சுவை ஆறு
மனம் உணரும் சுவை எட்டு
என்ற வகையில் இப்பாடலில் சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி பெருமிதச் சுவை மிகுந்துள்ளது.

முடிவுரை:
கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும் மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும்

உள்ளனர் ; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே ; மொழியால் வளர்பவரும் மக்களே.

– மொழி வரலாறு (மு. வரதராசனார்)

வினாக்கள் :
1. மக்கள் படைத்துக் காத்துவரும் அரிய கலை எது? அது ஆற்றும் செயல் யாது?
2. தாயின் முதல் விருப்பம் என்ன?
3. மொழி வளர்ச்சி எதனோடு தொடர்புடையது?
4. மொழியை வளர்ப்பவரும், மொழியால் வளர்பவரும் யார்?
5. மொழி வளர்ச்சி எதனைப் பொறுத்தது?

உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

தாமரை இலை நீர் போல, கிணற்றுத் தவளை போல, எலியும் பூனையும் போல, அச்சாணி இல்லாத தேர் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல.

Question 1.
தாமரை இலை நீர் போல – பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்.
Answer:
இவ்வுலக ஆசைகளின் மீது தாமரை இலை நீர் போல பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும்.

Question 2.
கிணற்றுத் தவளை போல – வெளி உலகம் தெரியாத நிலை.
Answer:
இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

Question 3.
எலியும் பூனையும் போல – எதிரிகளாக.
Answer:
ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

Question 4.
அச்சாணி இல்லாத தேர் போல – சரியான வழிகாட்டி.
Answer:
நாட்டை வழி நடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.

Question 5.
உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படையாக, தெளிவாக.
Answer:
தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது.

பயிற்சி

1. பசுமரத்தாணி போல – எளிதாக
2. மடைதிறந்த வெள்ளம் போல – வேகமாக
3. அடியற்ற மரம் போல – வலுவிழந்து
4. கல்மேல் எழுத்து போல – அழியாமல்
5. நகமும் சதையும் போல – இணை பிரியாமை
6. அடுத்தது காட்டும் பளிங்கு போல – வெளிப்படுத்த
7. இலவு காத்த கிளி போல – ஏமாற்றம்
8. அலை ஓய்ந்த கடல் போல – அமைதி
9. இஞ்சி தின்ற குரங்கு போல – விழித்தல்
10. கயிறற்ற பட்டம் போல – தவித்தல், வேதனை

ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.

Question 1.
தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள்.
எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய் மொழியே துணை நிற்கும் – இதனை வலியுறுத்தி பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. தாய்மொழிக் கல்வியின் தேவை
தாய்மொழிச் சிந்தனை – அறிஞர்களின் பார்வை – கற்கும் திறன் – பயன் – இன்றைய நிலை.
Answer:
முன்னுரை :
“தாய்மொழி கண் போன்றது
பிறமொழி கண்ணாடி போன்றது”

நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே. மொழி ஒரு கருவி. மனிதன் மொழியால்தான் வாழ்கின்றான். மொழியால்தான் கருத்துப் பரிமாற்றமும் செய்கின்றான். தனது எண்ணத்தை வெளியிடுவதற்கும் சிந்தனையாற்றலைப் பெருக்கவும் துணையாக இருக்கும் தாய்மொழி வழிக் கல்வியின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

தாய்மொழிக் கல்வியின் தேவை :
மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழிதான். கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்க பட வேண்டும். மனிதனின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே, மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது. சிந்திக்கின்ற மொழியிலே பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி சிந்தனையைக் கூட்டுகின்றது. நுணுக்கங்களையும் அறிவியல் படைப்புகளையும் உருவாக்க மனிதர்களைத் தயார்ப்படுத்துகின்றது.

தாய்மொழிச் சிந்தனை :
தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கின்றது. எத்தனை மொழிகள் கற்றாலும் எந்த மொழியைக் கற்றாலும் ஒருவனின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான். தாய்மொழியால் சிந்தனை பெருகும். மனிதர்களின் மனவெழுச்சி வாழ்விற்கு அடிப்படை. அத்தகைய மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே கொடுக்க இயலும். தாய்மொழியில் சிந்திப்பதால் உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களைக் கொண்டு உணர்த்த முடியும்.

அறிஞர்கள் பார்வை :
உலகில் வாழ்ந்த பல அறிஞர்கள் தாய்மொழிக்கல்வியின் அவசியத்தைக் கூறியிருக்கின்றார்கள். காந்தியடிகள் கூறும் போது ஜெகதீஷ் சந்திர போஸ், பி.சி. இராய் முதலியோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், தாய்மொழி மூலம் நமக்குக் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள் என்கிறார். சாகித் ஹுசைன் (1938-ஆம் ஆண்டு) குழு தாய்மொழியில் கற்றுக்கொடுத்தலை வலியுறுத்துகிறது, டி.எஸ். கோத்தாரி குழுவும் (1964) தேசியக்கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வியை வலியுறுத்தியது.

கற்கும் திறன் :
தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை. தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தைத் தெளிவாகவும் முழுமையாகவும் ஆழமாகவும் தெரிவிக்க முடியும். கற்கும் திறன் அதிகரிப்பது தாய்மொழி வழியாகவே, தாய்மொழி வழியாகக் கற்கும் போது சிந்தனைத்திறன் அதிகமாகும்.

தாய்மொழிக் கல்வியின் பயன் :
“கருவில் உள்ள குழந்தை ஏழு மாதத்திலேயே மூளை முதிர்ச்சிப் பெற்று ஒலிகளைக் கேட்கிறது” என்கின்றனர். மருத்துவ அறிஞர்கள், குழந்தை வளரும் சூழல் மொழித்தாக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது. அக்குழந்தைகள் தாய்மொழி வழியாகக் கற்கும் சூழல் ஏற்பட்டால் மிகச் சிறந்த அறிஞர்களாக, மேதைகளாக அக்குழந்தைகள் வளரும். குழந்தைகள் தாய்மொழி வழியாகக் கல்விக் கற்றால் தரமான கல்வியைப் பெறுவார்கள்.

இன்றைய நிலை :
இன்று தாய்மொழி வழியில் கல்விச் கற்பதைக் கௌரவக் குறைச்சலாகவும், கேவலமாகவும் நினைக்கின்றனர். தாய்மொழியில் கல்விக் கற்றவர்களைத் தரம் குறைந்தவர்களாகப் பார்ப்பது சமூகத்தில் நிலவி வரும் அவலங்களுள் ஒன்றாகும். தாய்மொழியில் கல்விக் கற்போருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

முடிவுரை :
மொழி என்பது ஒரு தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமன்று. ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணர்ந்தாலே தாய்மொழியை அழிவிலிருந்து காக்கலாம்.

மொழியோடு விளையாடு

எண்ணங்களை எழுத்தாக்குக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் 2

அந்தாதித் தொடரால் கவித்துவமாக்குக.

குழந்தையைக் கொஞ்சும் தாயின் குரல்
தாயின் குரலில் உயிரின் ஒலி
உயிரின் ஒலியே தாயின் அரவணைப்பு
அரவணைக்கும் அவளையே அகத்தில் எண்ணுவோமே!

குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.

எ.கா. கவிஞர்; ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம் – கவிமணி.

1. தமிழறிஞர் : முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.
2. தாய்மொழி : ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.
3. சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்
4. முன்னெழுத்து அரசன் : பின்னெழுத்து தமிழ் மாதம்
Answer:
1. மறைமலை அடிகள்
2. தமிழ் ஒளி
3. புதுமைப்பித்தன்
4. கோதை

(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம்

நிற்க அதற்குத் தக

கீழ்க்காணும் செயல்பாடுகளைச் சரி/தவறு எனப் பிரித்து, சரியெனில் காரணமும் தவறு எனில் மாற்றுவதற்குரிய செயலையும் குறிப்பிடுக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் 3
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.5 தமிழாய் எழுதுவோம் 4

படிப்போம் – பயன்படுத்துவோம் (நூலகம்)

1. Subscription – உறுப்பினர் கட்டணம்
2. Fiction – புனைவு
3. Biography – வாழ்க்கை வரலாறு
4. Archive – ஆவணம்
5. Manuscript – கையெழுத்துப்பிரதி
6. Bibliography – நூல் நிரல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 1.
பாரதியின் வாழ்வினைக் காலக்கோடாக உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 2
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 3

Question 2.
காலத்தை வென்ற மகாகவியான பாரதிக்குக் கற்பனைக்கடிதம் ஒன்றினை எழுதுக.
Answer:

தூத்துக்குடி,
18 ஜுலை 2019.

முறுக்கிய மீசையும், முறைத்த பார்வையும், முண்டாசுக் கட்டுக்கும் சொந்தகாரனே, செந்தமிழின் எழுச்சியே வணக்கம்.

உனது பொன் எழுத்துகளால் தமிழ் அன்னைக்கு வைரக்கிரீடம் சூட்டி மகிழ்ந்தாய்.

ஆனால், கடைசிவரை சாதாரண தலைப்பாகையினை நீ அணிந்திருந்தாய் என எத்தனைப் பேருக்குத் தெரியும்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று பாடினாயே பாரதி. இன்றைய பாலியல் 12 வன்கொடுமையை முன்னரே சாடினாயே பாரதி.

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கைப் பெற்றுவிட்டபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சுதந்திரத்தின் மேன்மையை மக்களின் மனதில் கொடியேற்றி வைத்தவன் நீ.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

தமிழில் ஓர் எழுத்துதான் ஆய்த எழுத்து. ஆனால் மற்ற 246 எழுத்துகளையும் ஆயுதமாக்கி வெள்ளையனை விரட்ட விடுதலைக் கவிகளைப் பாடி வேங்கையென விரட்டியவன் நீ.

என் உள்ளமெனும் பெருங்கோவிலில் வீற்றிருக்கிறாய். என்றொரு நாளாவது உன்னோடு ஒரே மேடையில் கவிபாட நான் விரும்புகின்றேன்.

நீவிர் சம்மதித்தால் வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு அன்று நாம் இருவரும் “தமிழே! உனக்குத் தலைவணங்குகிறோம்” என்ற தலைப்பில் ஒரு கவிதையை பொதிகை தொலைக்காட்சியில் பாடுவோம். உன் பதிலை உடன் எதிர்பார்க்கும் அன்பு நண்பன்.

இப்படிக்கு,
பாரதிநேசன்.

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
Answer:
மொழிப்பற்று :
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, ‘நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண் மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண் டும் என்கிறார்.

சமூகப்பற்று :
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் : 9 பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

Question 2.
“சொல்லோவியங்கள்” (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 7
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 8
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 5
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு 6

நன்றியுரை

“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று”

என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு மாலை வணக்கம்.

எப்பொழுதெல்லாம் நம் பேனா தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நீ வாழ்வில் தலை நிமிர்வாய் என்றபடி தன் பேனாவைத் தலைகுனிய வைத்து இந்த அவையில் தலை நிமிர்ந்து இருக்கும் தமிழாசிரியருக்கு நன்றி. இவர் சொல்லோவியங்கள் என்ற கவிதை நூலை அழகுபட செதுக்கியுள்ளார்.

சூர்யா – இளமைத்தமிழே இவர் செலுத்தியதை வர்ணம் தீட்டி குடமுழுக்கு விழா செய்து நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நூலை வெளியிட்டு வாழ்த்துறை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி. இவ்வுலகில் பிறந்து இறந்து எந்தவித அறிமுகமும் இல்லாமல் செல்கின்றனர். அதற்கு மாறாக பிறையைத் தலையிலே சூடிய சிவனைப் போல் இவ்விழாவிற்கு வருகைத்தந்து நூல் அறிமுகவுரை தந்த ஐயா பிறைசூடனுக்கு நன்றி.

எந்த ஒரு செயலும் இன்றே தொடங்க இறையருள் தேவை அதோடு செல்வமும் தேவை என்பதற்கு ஏற்ப செல்வத்தின் நாயகனாம் தொழிலதிபர் அண்ணாமலை அவர்களின் கரங்களால் முதல் பிரதியைப் பெற்று துவங்கி வைத்தமைக்கு நன்றி, இவ்விழா நடைபெற முழு காரணமாக விளங்கிய தலைமை ஆசிரியர், ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள், ஏனைய உறவுகளுக்கு விழாக்குழு மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! வணக்கம்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியார் விரும்புகிறார்
அ) ஆலயம்
ஆ) தொழிற்சாலை
இ) பள்ளிக்கூடம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) பள்ளிக்கூடம்

Question 2.
பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்
அ) இளசைமணி
ஆ) ரா.அ. பத்மநாபன்
இ) கி. ராஜநாராயணன்
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்
Answer:
ஆ) ரா.அ. பத்மநாபன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 3.
கருத்து 1 : ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றார் பாரதி.
கருத்து 2 : பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் பாப்பாப்பாட்டைப் பதிப்பித்தவர்.
அ) இரண்டு கருத்தும் தவறு
ஆ) இரண்டு கருத்தும் சரி
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு
Answer:
அ) இரண்டு கருத்தும் தவறு

Question 4.
சரியானதைத் தேர்க.
அ) முரசுப்பாட்டு – குந்திகேசவர்
ஆ) நெல்லைத் தென்றல் – வ.உ.சிதம்பரனார்
இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்
ஈ) வம்சமணி தீபிகை – சு. நெல்லையப்பர்
Answer:
இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்

Question 5.
சரியானதைத் தேர்க.
அ) கவிகேசரி சாமி தீட்சிதர் – பாரதி கடிதங்கள்
ஆ) இளசைமணி – சூரியோதயம்
இ) கண்ணன்பாட்டு – ரா.அ. பத்மநாபன்
ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்
Answer:
ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்

Question 6.
பொருந்தாததைத் தேர்க.
அ) இளசை மணி – வம்சமணி தீபிகை நூலின் மறுமதிப்பு
ஆ) வம்சமணி தீபிகை – கவிகேசரி சாமி தீட்சிதர்
இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்
ஈ) பாரதி வாழ்த்து – பரலி சு. நெல்லையப்பர்
Answer:
இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 7.
பொருத்துக.
அ) வம்சமணி தீபிகை – 1. சு. நெல்லையப்பர்
ஆ) பாரதி கடிதங்கள் – 2. ரா.சு. பத்மநாபன்
இ) நெல்லைத் தென்றல் – 3. கவிகேசரி சாமி தீட்சிதர்

அ) 1, 2, 3
ஆ) 3, 2, 1
இ) 2, 3, 1
ஈ) 1, 3, 2
Answer:
ஆ) 3, 2, 1

Question 8.
பொருத்துக.
அ) தமிழ் அழகியல் – 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ – 2. தி.சு. நடராசன்
இ) கிடை – 3. சிற்பி. பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி – 4. கி. ராஜநாராயணன்

அ) 4, 3, 2, 1
ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஈ) 2, 3, 4, 1

Question 9.
பாரதி நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய இடம், நாள்
அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915
ஆ) நெல்லை , 14 ஜீலை 1914
இ) கடலூர், 18 ஆகஸ்ட் 1914
ஈ) காரைக்கால், 19 ஜீலை 1915
Answer:
அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915

Question 10.
நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார் பாரதி?
அ) சிவன்
ஆ) முருகன்
இ) பராசக்தி
ஈ) துர்க்கை
Answer:
இ) பராசக்தி

Question 11.
நெல்லையப்பர் எதனைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறினார்?
அ) பெற்றோரைக் காப்பதை
ஆ) விடுதலைக்குப் போராடுவதை
இ) தமிழ் வளர்ப்பதை
ஈ) சமூக இழிவை களைவதை
Answer:
இ) தமிழ் வளர்ப்பதை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 12.
‘தம்பி-உள்ளமே உலகம்’ என்று யார் யாருக்குக் கூறியது?
அ) அறிஞர் அண்ணா , கலைஞருக்கு
ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு
இ) மு.வ., இளைஞர்களுக்கு
ஈ) திரு.வி.க., தமிழர்களுக்கு
Answer:
ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு

Question 13.
உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ-என்பதில் ‘உனக்கு’ என்பது யாரை எதைக் குறிக்கிறது?
அ) தமிழை
ஆ) நெல்லையப்பரை
இ) குயிலை
ஈ) இளைஞர்களை
Answer:
ஆ) நெல்லையப்பரை

Question 14.
பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது-என்று கடிதம் எழுதியவர்
அ) நெல்லையப்பர்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஆ) பாரதியார்

Question 15.
நெல்லையப்பரைப் பாரதி ………….. என்று கூவு என்கிறார்.
அ) வாழ்க வாழ்க
ஆ) தொழில்கள் தொழில்கள்
இ) மனிதர்கள் மனிதர்கள்
ஈ) வெல்க வெல்க
Answer:
ஆ) தொழில்கள் தொழில்கள்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 16.
ஓருயிரின் இரண்டு தலைகள் என்பன
அ) ஆணும் பெண்ணும்
ஆ) அறிவும் அழகும்
இ) வாழ்வும் தாழ்வும்
ஈ) பிறப்பும் இறப்பும்
Answer:
அ) ஆணும் பெண்ணும்

Question 17.
தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் ……………… லாம் பயிற்சிப் பெற்று வளர வேண்டும் என்கிறார் பாரதி.
அ) நவீன கலைகள்
ஆ) விளையாட்டு
இ) பாரம்பரிய கலைகள்
ஈ) அறிவியல் கல்வி
Answer:
அ) நவீன கலைகள்

Question 18.
வம்சமணி தீபிகை என்னும் நூலை எழுதியவர் ………… வெளியிட்ட ஆண்டு …………….
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
ஆ) முத்து சாமி தீட்சிதர், 1879
இ) இளசைமணி, 2008
ஈ) சீனி விசுவநாதன், 2004
Answer:
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879

Question 19.
வம்சமணி தீபிகை என்னும் நூல் யாரைப் பற்றியது?
அ) சோழ மன்னர்களின் பரம்பரை வரலாறு
ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
இ) ஆங்கில ஆட்சியாளரின் அடக்குமுறைகளைக் கூறுவது
ஈ) பாரதியின் வாழ்ககை வரலாற்றைக் கூறுவது
Answer:
ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 20.
வம்சமணி தீபிகை நூலின் பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசை கொண்டு .6.8.1919இல் ஆட்சி செய்த வெங்கடேசர எட்டப்பருக்குக் கடிதம் எழுதியவர் ………..
அ) பாரதியார்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசைமணி
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்
Answer:
அ) பாரதியார்

Question 21.
வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக வெளியிட்டவர் …………… ஆண்டு ……………
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
ஆ) பாரதியார், 1919
இ) இளசைமணி, 2008
ஈ) சீனி. விசுவநாதன், 1921
Answer:
இ) இளசைமணி, 2008

Question 22.
பாரதி தனது பதினைந்து வயதில் எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதத்தில் வேண்டப்படும் செய்தி
அ) ஆங்கில அரசை அகற்ற வேண்டி
ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி
இ) தன் நண்பன் கல்வி கற்க உதவி வேண்டி
ஈ) எட்டயப்புரத்தில் கவியரங்கம் நடத்த வசதி வேண்டி
Answer:
ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி

Question 23.
பாரதியின் கடைசிக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது?
அ) எட்டயபுரம் அரசருக்கு
ஆ) நெல்லையப்பருக்கு
இ) குத்திகேசவருக்கு
ஈ) சீனி. விசுவநாதனுக்கு
Answer:
இ) குத்திகேசவருக்கு

Question 24.
சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரயாக இருந்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) பாரதிதாசன்
ஈ) சீனி. விசுவநாதன்
Answer:
அ) நெல்லையப்பர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 25.
பாரதி நடத்திய இதழ்களில் துணையாசிரியாராக இருந்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer:
அ) நெல்லையப்பர்

Question 26.
பாரதியின் பல்வேறு பாட்டுகளை (கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு உள்ளிட்டவை) பதிப்பித்தவர்
அ) நெல்லையப்பர்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer:
அ) நெல்லையப்பர்

Question 27.
நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) நெல்லையப்பர்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்
Answer:
ஆ) நெல்லையப்பர்

Question 28.
வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்
Answer:
ஈ) நெல்லையப்பர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Question 29.
லோகோபகரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்
அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்
Answer:
ஈ) நெல்லையப்பர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 3.6 பகுபத உறுப்புகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

சிறுவினாக்கள்

Question 1.
பகுபத உறுப்பிலக்கணம் கூறுக. அ. வருகின்றாள் ஆ. வாழ்வான் இ. காண்பிப்பார் ஈ. பிரிந்த
Answer:
அ. வருகின்றாள் – வா (வரு) + கின்று + ஆள்
வா – பகுதி, ‘வரு’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை,
ஆள் – படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதி.

ஆ. வாழ்வான் – வாழ் + வ் + ஆன்
வாழ் – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

இ) காண்பிப்பார் – காண்பி + ப் + ப் + ஆர்
காண்பி – (பிறவினைப்) பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை,
ஆர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

ஈ. பிரிந்த – பிரி + த் (ந்) + த் + அ
பிரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘பகுதி’ என்பதனை விளக்குக.
Answer:

  • சொல்லின் முதலில் நிற்கும் உறுப்பு; முதல்நிலை ; பகுதி; அடிச்சொல்; வேர்ச்சொல்.
  • பகுதி, ஏவல் வினையாக அமையும். மேலும் பிரிக்க இயலாது.
  • எ – டு: செய், உண், கல், படி, நட, ஓடு, தா, பாடு, எழுது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 3.
‘விகுதி’ என்பதனை விளக்குக.
Answer:

  • சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பு; இறுதிநிலை; விகுதி.
  • வினைமுற்றுச் சொல் விகுதி. இடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை ), பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்), எண் (ஒருமை, பன்மை), திணை (உயர்திணை, அஃறிணை) என்பவற்றை உணர்த்தும்.
  • எச்சம், தொழிற்பெயர், ஏவல், வியங்கோள் – அவ்வவற்றிற்கு உரிய விகுதி பெறும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 1

Question 4.
இடைநிலை என்பதை விளக்குக.
Answer:
இடைநிலை என்பது, சொல்லின் இடையில் நிற்கும்; காலம் காட்டும்; சில, எதிர்மறைப் பொருள் உணர்த்தும்.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 5.
சந்தி என்பதனை விளக்குக.
Answer:

  • ‘சந்தி’ என்பது பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றுவது.
  • பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். (புணர்ச்சியில் திரிதலும் கெடுதலும் – விகாரமாகும்).
  • த், ப், க் என்னும் மெய்களும் ய், வ் உடம்படு மெய்களுமாகும்.
  • இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையிலும் சில சொற்களில் இடம்பெறும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 3

Question 6.
சாரியை என்பதனை விளக்குக.
Answer:
இடைநிலையையும் விகுதியையும் பொருந்தச் (இயையச்) செய்வது, ‘சரிய’ என்னும் உறுப்பு. அ, அன், கு என்பவை சாரியையாக வரும். பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் உயிர்மெய் எழுத்தும் சாரியை எனப்படும்.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 4

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 7.
விகாரம் என்பது யாது?
Answer:
பகுபத உறுப்புகள் புணரும்போது ஏற்படும் எழுத்துகளின் வடிவமாற்றம் (திரிதல், கெடுதல், குறுகல்) விகாரம் எனப்படும்.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 5

பலவுள் தெரிக

Question 1.
பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
அ) பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்
ஆ) பகுதி இடைநிலை, சாரியை
இ) பகுதி, சந்தி, விகாரம்
ஈ) பகுதி, விகுதி
Answer:
ஈ) பகுதி, விகுதி, இடைநிலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
இலக்கண வகையில் சொற்கள், ……………… வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
இ) நான்கு

Question 3.
பகுபத உறுப்புகள் மொத்தம் ………………..
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
இ) ஆறு

Question 4.
பகுபதத்தில் அடிப்படை உறுப்புகள் …………………
அ) மூன்று
ஆ) ஆறு
இ) நான்கு
ஈ) இரண்டு
Answer:
ஈ) இரண்டு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 5.
பகுபதத்தில் ‘பகுதி’ என்பது, சொல்லின் ……………… அமையும்.
அ) இடையில்
ஆ) முதலில்
இ) இறுதியில்
ஈ) எங்கும் இல்லை
Answer:
ஆ) முதலில்

Question 6.
பகுதி என்பது, …………….. வரும்.
அ) பெயர்ச்சொல்லாக
அ) இடைச்சொல்லாக
இ) ஏவல்வினையாக
ஈ) உரிச்சொல்லாக
Answer:
இ) ஏவல்வினையாக

Question 7.
திணை, பால், எண், இடம் காட்டும் உறுப்பு………………
அ) பகுதி
ஆ) சந்தி
இ) விகுதி
ஈ) இடைநிலை
Answer:
இ) விகுதி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 8.
ஏவல்வினையாக அமையும் உறுப்பு…………….
அ) விகுதி
ஆ) இடைநிலை
இ) சந்தி
ஈ) பகுதி
Answer:
ஈ) பகுதி

Question 9.
காலம் காட்டும் விறுப்பு, …………. பகுபதத்தில் வரும்.
அ ) பெயர்
ஆ) இடை
இ) உரி
ஈ) வினை
Answer:
வரனை

Question 10.
எதிர்மலலப் பொருளைத் தரும் உறுப்பு ……………..
அ) வையர் இடைநிலை
ஆ) காலம் காட்டும் இடைநிலை
இ) எதிர்மறை இடைநிலை
ஈ) எதுவும் இல்லை
Answer:
இ) எதிர்மறை இடைநிலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 11.
பொருத்துக.
1. ப்வ் – அ. நிகழ்கால இடைநிலை
2. த், ட், ற், இன் – ஆ. எதிர்மறை இடைநிலை
3. கிறு, கின்று, ஆநின்று – இ. பெயரிடைநிலை
4. ஆ, அல், இல் – ஈ. இறந்தகால இடைநிலை
– உ. எதிர்கால இடைநிலை
Answer:
1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

Question 12.
இவற்றில் இறந்தகால இடைநிலை பெற்ற சொல்…………………
அ) பெறுவாள்
ஆ) நடக்கிற
இ) பாடினாள்
ஈ) உண்ண
Answer:
இ) பாடினாள்

Question 13.
இவற்றில் நிகழ்கால இடைநிலை பெற்ற சொல்…………..
அ) ஆடுவாள்
ஆ) ஆடியது
இ) செல்லும்
ஈ) பாடுகிறது
Answer:
ஈ) பாடுகிறது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 14.
கொடுப்பாள் – இதில் இடம்பெற்றுள்ளது …………….. இடைநிலை.
அ) இறந்தகால
ஆ) நிகழ்கால
இ) எதிர்கால
ஈ) எதிர்மறை
Answer:
இ) எதிர்கால

Question 15.
தவறான விடையைத் தெரிவு செய்க.
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்
அ) திரு + புகழ் – திருப்புகழ்
ஆ) கவிதை + பேழை – கவிதைப்பேழை
இ) காவடி + சிந்து – காவடிச்சிந்து
ஈ) இந்த + பாடல் இப்பாடல்
Answer:
ஈ) இந்த + பாடல் – இப்பாடல்

Question 16.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) பகுதி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ) சாரியை
1) திணை, பால் காட்டும்
2) பொருள் இல்லை
3) முதனிலை எனப்படும்
4) காலம் பணர்த்தும்
i) அ – 1, ஆ – 2, இ – 4, ஈ – 3
ii) 1, ஆ – 3, இ – 2, ஈ – 4
iii) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
iv) அ- 3, ஆ – 2, இ – 1, ஈ – 4
Answer:
iii) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 4

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

இலக்கணதி தேர்ச்சிகொள்

Question 1.
பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பகுபத உறுப்புகள் ஆறு. அவை : பகுதி. விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

Question 2.
காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
த், ட், ற், இன் – என்னும் இடைநலைகள், இறந்தகாலம் காட்டும்.
எ – கா : செய்தான் – செய்த் + ஆன்; உண்டாள் – உண் + ட் + ஆள்
கற்றார் – எல் ) + ற் + ஆர்; வணங்கினேன் – வணங்கு + இன் + ஏன்
கிறு, கின்று, ஆதின்று – நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்.
எ – கா : உண்கமான் – உண் + கிறு + ஆன், உண்கின்றன – உண் + கின்று + அன் + அ,
செய்யா நின்றான் – செய் + ஆநின்று + ஆன்
ப், வ் எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்.
எ – கா : படிப்பான் – படி + ப் + ப் + ஆன் வருவான் – வா (வரு) + வ் + ஆன்

Question 3.
பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்வெவ்விடங்களில் அமையும்?
Answer:

  • சந்தி : பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும். சிறுபான்மை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் அமையும்.
  • சாரியை : இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் அமையும். சிறுபான்மை பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 4.
விகுதிகள், எவற்றை உணர்த்தும்?
Answer:
விகுதிகள், திணை (உயர்திணை, அஃறிணை), பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்), எண் (ஒருமை, பன்மை), இடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை ) ஆகியவற்றை உணர்த்தும்.

Question 5.
பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 6

Question 6.
பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்க.
அ) அன் – வந்தனன்
ஆ) இன் – முறிந்தது
இ) கு – காண்குவன்
ஈ) இன் சென்றன
Answer:
ஆ) இன் – முறிந்தது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 7.
பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 7

Question 8.
வேர்ச்சொல், எதிர்மறை இடைநிலை, விகுதி ஆகியவற்றைச் சேர்த்துச் சொற்களை உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 8

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

‘தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்’ என்று போற்றப்படும் சி.வை.தாமோதரனார் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்து, தம் இருபதாவது வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலை உரை டன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். 1868ஆம் ஆண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும், பின்னர்க் கலித்தொகை, இறையனார் அகப்பொருள், வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களையும் செம்மையாகப் பதிப்பித்துப் புகழ்கொண்டார். அத்துடன் நில்லாது, கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். ஆறாம் வாசகப் புத்தகம் முதலிய பள்ளிப்பாட நூல்களையும் எழுதினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

அவருடைய தமிழ்ப்பணியைக் கண்ட பெர்சிவல் பாதிரியார், அவரைத் தாம் நடத்திய ‘தினவர்த்தமானி’ என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார். அவ்வமயம் அவர் ஆங்கிலேயர் பலருக்கும் தமிழ் கற்றுத் தந்தார். அரசாங்கத்தாரால், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். பிறகு, பி. எல். தேர்விலும் தேர்ச்சி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதிக் கடமையாற்றினார்.

Question 1.
மாநிலக் கல்லூரி – புணர்ச்சிவிதி கூறுக.
Answer:
மாநிலக்கல்லூரி – மாநிலம் + கல்லூரி
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்” (மாநில + கல்லூரி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (மாநிலக்கல்லூரி)

Question 2.
ஆசிரியராக்கினார் – இதன் பகுதி…………..
அ) ஆசு ஆ) ஆசிரி
இ) ஆசிரியராக்கு
ஈ) ஆசி
Answer:
இ) ஆசிரியராக்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 3.
சிறுசிறு தொடர்களாக மாற்றி எழுதுக.
Answer:
தாமோதரனார், நீதிநெறி விளக்கம் என்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டுக் கலித்தொகை வீராசாழியம் உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்துக் கட்டளைக் கலித்துறை, நட்சத்திரமாலை, சூளாமணி கனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
தாமோதரனார், நீதிநெறி விளக்கம் என்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். தாமோதரனார், கலித்தொகை, வீரசோழியம் உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தார்.

தாமோதரனார், கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமானி கவசம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

Question 4.
பெரும்புகழ் – இலக்கணக்குறிப்புத் தருக.
Answer:
பண்புத்தொகை.

Question 5.
கல்லூரி, உயர்நீதிமன்றம், வரலாறு, பணி ஆகியவற்றிற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொற்களை எழுதுக.
Answer:
கல்லூரி – College, உயர்நீதிமன்றம் – High court. வரலாறு – History, பணி – Work, Job

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. தாமோதரனார், கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
வினா : தாமோதரனார், எக்கால்களை எழுதியுள்ளார்?

2. தாமோதரனார், எந்தப் பாதி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதிக் கடமையாற்றினார்.
வினா : தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும், எவ்வாறு கருதிக் கடமையாற்றினார்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

Question 1.
குமரனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் குமரனது வீடு.
Answer:
குமரனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகை தாருங்கள். என் வீட்டிற்குப் பக்கத்து வீடுதான் குமரனது வீடு.

Question 2.
அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவேப் பெண்களும் அரசு பணியை பெறவேண்டும்.
Answer:
அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப் பணியைப் பெற வேண்டும்.

Question 3.
கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவர்.
Answer:
கல்வி கேள்விகளில் சிறந்தவர், நன்மை தீமைகளைப் புரிந்து பேசுவர்.

Question 4.
தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
Answer:
தமிழர், ஆற்றுத் தண்ணீரைத் தேக்கிச் சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

Question 5.
சான்றோர் மிகுந்தப் பொறுப்புடன் சிறப்பான சேவைப் புரிந்து கொள்கையை நிலைநாட்ட செய்தனர்.
Answer:
சான்றோர், மிகுந்த பொறுப்புடன் சிறப்பான சேவை புரிந்து, கொள்கையை நிலைநாட்டச் செய்தனர்.

தமிழாக்கம் தருக

1. Education is the most powerful weapon, which you can use to change the world.
Answer:
கல்வி என்பது அதிக ஆற்றல் வாய்ந்த கருவி என்பதனைக் கொண்டு, நீ உலகையே மாற்றலாம்.

2. Looking at beauty in the world is the first step of purifying the mind.
Answer:
உலகில் காணப்படும் அழகை நோக்குவதே, மனத்தைத் தூய்மை செய்வதற்கு முதல் படியாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

3. Culture does not make people; People make culture.
Answer:
பண்பாடு என்பது மக்களை உருவாக்குவதில்லை; மக்களே பண்பாட்டை உருவாக்குகிறார்கள்.

4. People without the knowledge of their past history and culture is like a tree without roots.
Answer:
கடந்தகால வரலாற்றையும் நாகரிகத்தையும் பற்றிய அறிவைப் பெறாத மக்கள், வேர் இல்லாத மரத்திற்கு ஒப்பாவர்.

5. A nation’s culture resides in the hearts and in the soul of its people.
Answer:
ஒரு தேசத்தின் பண்பாடு என்பது, அத் தேசமக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது.

கீழ்க்காணும் செய்தியைப் படித்து அறிவிப்புப் பதாகை ஒன்றை உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 9

அறிவிப்புப் பதாகை உருவாக்கம்
தமிழ்ப் பகை கட்டுக் கருத்தரங்கு
பங்கு பெற வருக!

இடம் : பாரதி கலைக்கூட அரங்கு (மதுரை) (தெப்பக்குளம் அருகில்)
நாள் : ஜனவரி – 13,
தலைப்பு : ‘பண்பாநாகணல் வாழும் தமிழர்’
உரையாற்றுபவர் : கவிஞர் அன்பரசி (சமூக ஆர்வலர்)
கலந்துரையாடலும் நடைபெறும்.
ஆர்வலர்களே! மாணவாகளே! கலந்து கொள்ளத் திரண்டுவருக!

ஒருங்கிணைப்பாளர் :
இனியன்
(சிறகுகள் அமைப்பு)

மொழியோடு விளையாடு

கட்டுரை எழுதுக.

பண்பாட்டைப் பாதுகாப்போம்! பகுத்தறிவு போற்றுவோம்’ – என்னும் பொருள்பட ஒருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
பண்பாடாவது யாது ? :
நெடுங்காலம் தொடர்ந்து வாழ்ந்த வாழ்க்கை முறையில் உருவான சிறந்த பண்புகளை உள்ளடக்கிய நெறிமுறைகளைப் பண்பாடு என்று கூறுவர். குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்கள் நடத்தும் வாழ்க்கை நெறிமுறை, உறைவிட அமைப்பு, இறைவழிபாடு, ஆடல் பாடல் சார்ந்த கலை, சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்வுநிலை, உணவு உடை தொடர்பானவை அனைத்தையும் உள்ளடக்கியதைப் பண்பாடு எனக் கூறுவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

முன்னோர் வகுத்தளித்த நெறிகள் :
நமக்கென முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ள பாரம்பரிய நன்னெறிப் பண்புகளை, அவர்களது வழிவந்த சந்ததியினர் என்கிற முறையில் நாமும் பின்பற்றி வருகிறோம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’, ‘வறியார்க்கு ஒன்று ஈதல்’ என்னும் பல்வேறு பண்பாட்டு நெறிகளை நம் முன்னோர் நமக்கு வகுத்தளித்துள்ளனர். அந்த வகையில் கூடி வாழ்தல், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல், பிறர் துன்பம் கண்டு வருந்தி, அத் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளுதல், உற்றுழி உதவுதல், இல்லாதார்க்கு ஈதல் என்கிற எத்தனையோ பண்புகள் நம்மிடையே காணப்படுகின்றன.

பண்பாடு கெடாமல் வாழ்க :
பண்படுத்தப்பட்ட நிலம்தான் நல்ல விளைவைக் கொடுக்கும். நல்ல விளைபொருளைப் பெறுவதற்கு நிலத்தைப் பலமுறை உழுது பண்படுத்தி, நீர் தேங்க வழிவகுத்துக் கொள்வதுபோல, நம் நல வாழ்வுக்குத் தேவையான பல நெறிமுறைகளை முன்னோர் வாழ்விலிருந்து அறிந்து கொள்கிறோம். உலகின் எண்ணற்ற இனம் சார்ந்த மக்கள், பலவேறு குழுக்களாக வாழ்கிறார்கள்.

அவ்வக் குழுக்களுக்கும் சில பண்பாட்டுப் பழக்கங்கள் உண்டு. ஒரு குழுவின் பண்பாடு, மற்றொரு குழுவுக்குப் பிடிக்காமல் போகலாம்; பிடித்தும் இருக்கலாம். எனினும், அவற்றிலிருந்து நல்லனவற்றை ஏற்று, நம் பண்பாடும் பாக்க வழக்கங்களும் கெடாமல் வாழப் பழகுதல் வேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

நம் வாழ்க்கைமுறை :
மேற்கத்திய வாழ்வில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை கிடையாது. வயது வந்த பிள்ளைகள் பிரிந்து சென்று, தனிவாழ்வை நடத்துகின்றனர். நம் நாட்டுக் கூட்டுக்குடும்ப வாழ்க்கை, முதியவர்க்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக அமைந்தது. உணவும் உடைகளும் நம் தட்பவெப் நிலைக்கு ஏற்ப, உடலுக்கு ஊறு செய்யாதவை. பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நெறிமுறைான் உணவு உடை பழக்கம் என எல்லாம் எல்லாராலும் போற்றப்படுபவை.

பண்பாடே பாதுகாப்பு :
எனவே, புதியதான நாகரிகத்தையும் பண்பாட்டையும் தேடி அலைவோர், சிறிது சிந்தித்துப் பார்த்து, அதன் நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, ஏற்றதை மேற்கொள்வதே நல்ல வாழ்வைத் தரும். நமது பண்பாடும், நாகரிகமும் தொன்மை மிக்கவை. அவை பல ஆயிரம் ஆண்டுகள் பண்பட்டுத் தேர்ந்து வளர்ந்தவை.

அவற்றை நாமும் தொடர்ந்து கடைப்பிடிப்பது நமது நல வாழ்வுக்கு வழிவகுக்கும். நம் சந்ததியினருக்கு நல்ல வாழ்வுக்குரிய நெறியைக் காட்டும். எனவே பண்பாட்டைப் பாதுகாப்போம்; பகுத்தறிவைப் போற்றுவோம்.

உடன்பட்டும் மறுத்தும் பேசுக 1. ஆங்கிலேயர் வருகை | உடன்படல் / மறுத்தல்

ஆங்கிலேயர் வருகை (உடன் மடல்)
ஆங்கிலேயர் வருகையால் இந்தியா முழுவதும் இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. தொலைத்தொடர்பு வசதி, அவர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டின் மிகப்பெரிய அலுவலகக் கட்டடங்கள், அவர்கள் கட்டுமானத்தால் ஆனவையேயாகும். மேலும், நமது தொழில்துறையை மேம்படுத்தியதும் அவர்களே. அவர்களின் காலம், வார்ச்சிப் படிநிலையின் விடியற்காலம் எனலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

ஆங்கிலேயர் வருகை (மறுத்தல்)
ஆங்கிலேயர், இந்தியாவில் இரயில் பாதைகளைத் துறைமுகங்களோடு இணைத்து, அதன் வழியாக நமது அரிய செல்வங்களையும் உற்பத்திப் பொருள்களையும் பிரிட்டனுக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் வாழ்வ மேம்படுத்திக் கொள்வதற்காகவே. தொலைத்தொடர்பு வசதிகளையும் பெரிய கட்டடங்களையும் உருவாக்கினர்; இந்தியர்களுக்காகச் செய்து கொடுக்கவில்லை. அவர்களின் ஆட்சிமுறைத் தேவைகளுக்காகவே செய்துகொண்டனர். எனவே, ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்த காலம், நம்மை நாமே தொலைத்திருந்த இருண்டகாலம் எனலாம்.

2. தொழில் நுட்பத்தால் விளைந்தது வளர்ச்சியே / தளர்ச்சியே

தொழில் நுட்பத்தால் விளைந்தது வளர்ச்சியே!
தொழில் நுட்பம் வளர்ந்ததால், மின்விசைக் கருவிகள் கிடைத்தன. ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தேவையான நீரைப் பெற முடிந்தது. எண்ணற்ற தொழில்கள் பெருகித் தொழிற்சாலைகள் வளர்ந்தன. போக்குவரத்து வசதிகள் பெருகியுள்ளன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். நிலத்தை உழவும், களை எடுக்கவும், அறுவடை செய்யவும் புதிய புதிய கருவிகள் கிடைத்துள்ளன.

தொழில் நுட்பத்தால் விளைந்தது தளர்ச்சியே !

தொழில்நுட்பம் பெருகியதால் சிற்றூர்கள் அழிந்தன. பேரூர்கள் பெருகின. தொழிற்பேட்டைகள் வளர்ந்தன. எரிபொருளுக்காகக் காடுகளை அழித்தனர். ஆழத் துளையிட்டு நீரை எடுத்ததால், பூமித்தாய் ஈரப்பசையை இழந்துவிட்டாள்.

இந்த மண்ணுலகம் மனிதனுக்குமட்டும் சொந்தமானதன்று. மனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றிய எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றின் கதி என்ன? அவை இல்லாமல் மனிதன்மட்டும் தனித்து வாழ முடியுமா? காற்றுமாசு, நீர்மாசு, நிலமாசு எனச் சுற்றுச்சூழல் மாசுபடத் தொழில்நுட்பப் பெருக்கம்தானே காரணம்? அதனால் உலக உயிரின வீழ்ச்சிக்கு அடிப்படையே தொழில்நுட்ப வளர்ச்சிதான் என்பதை நிறுவ, எத்தனையோ சான்றுகளைத் தரலாம்.

3. தற்போதைய உணவுமுறை நல்வாழ்வை வளர்க்கிறது / குறைக்கிறது

தற்போதைய உணவுமுறை நல்வாழ்வை வளர்க்கிறது.

உயிர் வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாதது. இன்றைய நிலையில் விரைவாகச் செயல்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. எனவே, உணவுக்காகச் செலவிடும் நேரத்தைச் சுருக்கமாகச் செலவிட எண்ணுகின்றனர்.

சிற்றுண்டி உணவு வகைகளைத் தயாரிக்க ஆகும் கால தாமத்ததைத் தவிர்க்கக் கடைகளில் வாங்கிக் கொள்வது எளிதாக உள்ளது. எனவே, விரைவு உணவகங்கள் பெருகியுள்ளன. பயணம் செய்யும்போது உண்பதற்கெனப் பல உணவு வகைகள் கிடைக்கின்றன உழைப்பு பெருகவும், விரைந்து செயல்படவும், நம் வாழ்வை எளிமையாக்கவும் இன்றைய உணவுப் பழக்கம் சிறப்பானதாக உள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

தற்போதைய உணவுமுறை நல்வாழ்வைக் குறைக்கிறது.
உயிர் வாழ்க்கைக்கு மட்டுமல்ல. நோயற்ற வாழ்வுக்கும் உணவு இன்றியமையாததாகிறது. நம் வீட்டில் சமைக்கும் உணவில் சத்துப் பொருள்கள் சரிவிகிதத்தில் இடம்பெறுகின்றன. விரைவு உணவகங்களில் விற்கப்படும் உணவு வகைகளில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்ற வேதிப்பொருள்கள், முதுமைக் காலத்தில் நோய் செய்யும்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் கையாளுவதற்கு வசதியாக இருந்தாலும், அவற்றில் கலந்துள்ள வேதிப்பொருள்கள் உடலுக்கு ஊறுவிளைக்கும். எனவே, இன்றைய நிலையில் கடைப்பிடிக்கப்படும் உணவுமுறை, நல்வாழ்வை வளர்ப்பதாக இல்லை; குறைப்பதாகவே உள்ளது.

4. தமிழர்கள் பண்பாட்டைத் தக்கவைத்திருக்கிறார்கள் | தள்ளி வைத்திருக்கிறார்கள்

தமிழர்கள் பண்பாட்டைத் தக்கவைத்திருக்கிறார்கள் :

தமிழர்களின் பண்பாடு தொன்மையானது; பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது; உடை, உணவு, பழக்கவழக்கம், மரத்க்கைமுறை ஆகியவற்றில் வெளிப்படுவது. இன்றளவும் தமிழர் தம் பண்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முன்னோர் கடைப்பிடித்த நெறிமுறைகளை இன்றளயை இடைவிடாமல் தொடர்ந்துகொண்டுதான் வருகிறார்கள்.

வேலை, தொழில் எனப் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியநிலை ஏற்பட்டாலும், மொழியையும் பண்பாட்டையும் மறவாமல் கடைப்பிடித்துக் கொண்டுதானே வருகிறார்கள். இந்த வகையில் தமிழர்கள் பண்பாட்டைத் தக்கவைத்திருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

தமிழர்கள் பண்பாட்டைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் :

பண்கொட்டுப் பழமையும் பாரம்பரியப் பெருமையும் கொண்ட தமிழ்மக்கள், இன்று அவற்றைக் கடைப்ப டிக்கின்றனரா? கேள்விக்குறியாகவே உள்ளது. முதலில் தங்களைப் பெற்றவர்களை ‘அம்மா’ என்றும் ‘அப்பா என்றும் அழைக்கிறார்களா? தாய்மொழியைக் கற்கின்றனரா? பிழை இன்றிப் பேசவும் எழுதவும் செய்கின்றனரா? இல்லையே! தமிழைக் கெடுத்து ஆங்கிலக் கலவையோடுதானே பேசுகின்றனர் ! அதுமட்டுமா? உணவுமுறை, உடை மற்றும் பழக்க வழக்கங்களைக்கூட மாற்றிக்கொண்டுள்ளதைக் காண்கிறோம் அல்லவா? நம் முன்னோர் கொண்டாடிய பொங்கல், தீபாவளி முதலான விழாக்களை, நம் முன்னோர் கொண்டாடியபடி கொண்டாடுகிறோமா? எங்கோ சிலர் பின்பற்றுகின்றனர். பெரும்பான்மையினராகிய தமிழர், பெயரளவில் தமிழராக வாழ்கின்றனர். தங்கள் பண்பாட்டைத் தள்ளிவைத்து, அன்னிய மோகத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள் - 10

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 பகுபத உறுப்புகள்

கலைச்சொல் அறிவோம்

இனக்குழு – Ethnic Group
முன்னொட்டு – Prefix
புவிச்சூழல் – Eare EMironment
பின்னொட்டு – Suffix
வேர்ச்சொல் அகராதி – Raohord Dictionary
பண்பாட்டுக்கூறுகள் – Cultural Elements

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 1.
வேற்றுமை அணி பயின்று வரும் இரு பாடல்களை விளக்கத்துடன் எழுதி வருக.
Answer:
பாடல் : 1

அங்கண் விசும்பின் அகனிலாப் பாறிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமருத்து
தெய்வர் ஒரு மாசுறின். – நாலடியார்

இப்பாடலில், திங்களுக்கும் சான்றோருக்கும் முதலில் ஒப்புமைக்கூறி பின்னர் வேறுபடுத்தப்பட்டுள்ளது.

அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும். விளக்கம்:
திங்கள் தேயும், சான்றோன் தேயார் (மனநிலை மாறார்) என்பதேயாகும்.

பாடல் : 2

அணி இலக்கணம் :
இருபொருட்களுக்கு இடையே ஒப்புமையைக் கூறி அவற்றுள் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்ததாகக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.
சான்று :
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு – குறட்பா

பொருத்தம்:
தீயினால் உண்டான புண் உள் ஆறிவிடும்.
நாவினால் உண்டான புண் உள்ளத்தில் ஆறாத வடுவாக இருக்கும்.

Question 2.
‘தன்னேர் இலாத தமிழ்’ என்னும் தலைப்பில் சொற்போரில் பங்கேற்பதற்கான ஐந்து நிமிட உரை உருவாக்குக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பழமையும், பெருமையும் கொண்டது. இலக்கண, இலக்கியங்கள், சிறுகாப்பியம், பெருங்காப்பியம், தொகை, பாட்டு, ஆற்றுப்படை என எண்ணிலடங்கா நூல்கள் உருவாகி தமிழின் சிறப்பை உலகே தொழும் வகையில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

முதல் இடை கடைச்சங்கம் கொண்டது. தன்னிகரில்லா தன்மொழியாக விளங்கியது. தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது, பிறமொழி உதவி இல்லாமல், இடர்ப்பாடுகள் இல்லாமல் இயங்கும் ஆற்றல் கொண்டது.

திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் கொண்ட என் தமிழின் உதவியில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இயங்க முடியாது. இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டு தனக்கு நிகர் இல்லாத மொழியாய் விளங்குகிறது.

நன்றி! வணக்கம்!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடிமோனை, அடி எதுகை
ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை
ஈ) சீர் எதுகை, அடியோனை
Answer:
இ) அடி எதுகை, சீர் மோனை

சிறுவினா

Question 1.
‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள் :
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.

கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அகஇருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்பதாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

இலக்கணக் குறிப்பு
வெங்கதிர் – பண்புத்தொகை
உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
இலாத – இடைக்குறை

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ் 2

புணர்ச்சி விதி

1. ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

  • ‘உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்’ என்ற விதிப்படி, ஆங்க் + அவற்றுள் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = க ) ஆங்கவற்றுள் என்று புணர்ந்தது.

2. தனியாழி = தனி + ஆழி

  • ‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற விதிப்படி, தனி + ய் + ஆழி என்றானது,
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ய் + ஆ = யா) ‘தனியாழி’ என்று புணர்ந்தது.

3. வெங்கதிர் = வெம்மை + கதிர்

  • ‘ஈறுபோதல்’ என்ற விதிப்படி ‘மை’ கெட்டு வெம் + கதிர் என்றானது.
  • ‘முன்னின்ற மெய் திரிதல்’ என்ற விதிப்படி (‘ம்’ ‘ங்’ – ஆகத் திரிந்து) வெங்கதிர்’ என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்
அ) முத்துவீரியம்
ஆ) வீரசோழியம்
இ) மாறவைங்காரம்
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
இ) மாறவைங்காரம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 2.
கீழ்க்காண்பவற்றுள் ‘வினையாலணையும் பெயர்’ எது?
அ) உயர்ந்தோர்
ஆ) வந்தான்
இ) நடப்பான்
ஈ) உயர்ந்து
Answer:
அ) உயர்ந்தோர்

Question 3.
‘ஈறுபோதல்’, ‘முன்னின்ற மெய்திரிதல்’ எச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதி?
அ) கருங்குயில்
ஆ) வெங்கதிர்
இ) நெடுந்தேர்
ஈ) ழுதுமாம்
Answer:
ஆ) வெங்கதிர்

Question 4.
‘விளங்கி’ – இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு
அ) விள + ங் + இ
ஆ) விளங்கு + க் + இ
இ) வி + ளங்கு + இ
ஈ) விளங்கு + இ
Answer:
ஈ) விளங்கு + இ

Question 5.
கருத்து 1 : மக்களின் அறியாமையை அகற்றுவது தமிழ்மொழியாகும்.
கருத்து 2 : புற இருளைப் போக்க கதிரவன் உதவும்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) கருத்து 1 சரி 2 தவறு
இ) கருத்து 1 தவறு 2 சரி
ஈ) இரண்டு கருத்தும் தவறு
Answer:
அ) இரண்டு கருத்தும் சரி

Question 6.
கருத்து 1 : ‘தொன்னூல் விளக்கம்’ அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்.
கருத்து 2 : ‘குவலயானந்தம்’ என்னும் நூல் முழுமையான இலக்கண நூல்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) இரண்டு கருத்தும் தவறு
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்
Answer:
ஆ) இரண்டு கருத்தும் தவறு

Question 7.
சரியானதைத் தேர்க.
அ) வீரசோழியம் – நாவல்
ஆ) முத்து வீரியம் – சிறுகதை
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்
ஈ) மாறனலங்காரம் – பொருளிலக்கணம்
Answer:
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) வந்து – பெயரெச்சம்
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
இ) இலாத – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) வெங்கதிர் – வினைத்தொகை
Answer:
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்

Question 9.
பொருந்தாததைக் தேர்க.
அ) தமிழ்மொழி – பொதிகை மலை
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்
இ) தண்டியலங்காரம் – தண்டி
ஈ) காவியதர்சம் – வடமொழி இலக்கணம்
Answer:
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்

Question 10.
பொருத்துக.
அ) வெங்கதிர் – 1. இடைக்குறை
ஆ) இலாத – 2. வினையெச்சம்
இ) வந்து – 3. வினையாலணையும் பெயர்
ஈ) உயர்ந்தோர் – 4. பண்புத்தொகை
அ) 4, 2, 3, 1
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 3, 1, 4
Answer:
இ) 4, 1, 2, 3

Question 11.
தமிழ் தோன்றிய மலை
அ) குடகு
ஆ) பொதிகை
இ) இமயமலை
ஈ) விந்தியமலை
Answer:
ஆ) பொதிகை

Question 12.
தன்னேர் இலாத தமிழ் பாடப்பகுதியல் இடம்பெற்றுள்ள பாடல்
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
ஆ) இறையனார்களவியல் உரை மேற்கோள் பாடல்
இ) நம்பியகப்பொருள் உரை மேற்கோள் பாடல்
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை உரை மேற்கோள் பாடல்
Answer:
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 13.
இருளைப் போக்கும் இரண்டு
அ) கதிரவன், நிலவு
ஆ) கதிரவன், தமிழ்
இ) அறிவு, தமிழ்
ஈ) அறிவு, ஞானம்
Answer:
ஆ) கதிரவன், தமிழ்

Question 14.
மின்னலைப் போன்று ஒளிர்வது
அ) கதிரவன்
ஆ) தமிழ்
இ) தமிழ்
ஈ) வானம்
Answer:
அ) கதிரவன்

Question 15.
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூலைக் கண்டறிக.
அ) வீரசோழியம்
ஆ) இலக்கணவிளக்கம்
இ) முத்து வீரியம்
ஈ) குவலயானந்தம்
Answer:
ஈ) குவலயானந்தம்

Question 16.
தண்டியலங்காரம் ……………. இலக்கணத்தைக் கூறும் நூல்.
அ) எழுத்து
ஆ) சொல்
இ) பொருள்
ஈ) அணி
Answer:
ஈ) அணி

Question 17.
‘ஓங்கலிடை வந்து’ என்று தொடங்கும் பாடல் தண்டியலங்காரத்தின் ………….. பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அ) பொருளணியியல்
ஆ) பொதுவியல்
இ) சொல்லணியியல்
ஈ) ஒழிபியல்
Answer:
அ) பொருளணியியல்

Question 18.
காவியதர்சம் என்பது
அ) வடமொழி இலக்கண நூல்
ஆ) புராண நூல்
இ) வரலாற்று நூல்
ஈ) மலையாள இலக்கிய நூல்
Answer:
அ) வடமொழி இலக்கண நூல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 19.
காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) வீரசோழியம்
ஈ) முத்துவீரியம்
Answer:
அ) தண்டியலங்காரம்

Question 20.
தண்டியலங்காரத்தின் ஆசிரியர்
அ) தண்டி
ஆ) ஐயரினாதர்
இ) சமணமுனிவர்
ஈ) பவணந்தி
Answer:
அ) தண்டி

Question 21.
தண்டி …………. ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
அ) கி.பி. 11
ஆ) கி.பி. 12
இ) கி.பி. 13
ஈ) கி.பி. 14
Answer:
ஆ) கி.பி. 12

Question 22.
தண்டியலங்காரம் …………… பெரும் பிரிவுகளை உடையது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

குறுவினா

Question 1.
தண்டியலங்காரம் – நூல், நூலாசிரியர் சிறுகுறிப்பு தருக.
Answer:
அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்று தண்டியலங்காரமாகும். எழுதியவர் தண்டி ஆவார். இவரது காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. தண்டியலங்காரம் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

ஆசிரியர் : தண்டி
காலம் : 12ஆம் நூற்றாண்டு
தழுவல் நூல் : காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலை தழுவி எழுதப்பட்டது.
மூன்று பிரிவுகள் : பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல்.

Question 2.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
Answer:
தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.

Question 3.
அணியிலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல்கள் யாவை?
Answer:
அணி இலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் ஆகும்.

Question 4.
தண்டியலங்காரத்தின் மூன்று பெரும் பிரிவுகள் யாவை?
Answer:
பொதுவியல், மாறனலங்காரம், சொல்லணியியல்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 5.
ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது தமிழே – விளக்குக.
Answer:
பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது தமிழே ஆகும்.

Question 6.
புற இருளைப் போக்குவது எது?
Answer:
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை போக்குவது கதிரவனாகும்.

சிறுவினா

Question 1.
தன்னேர் இலாத தமிழின் சிறப்புக் குறித்துத் தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல் உணர்த்தும் செய்தி யாது?
Answer:
(i) இந்நில உலகில் வாழும் மக்கள் அனைவராலும் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை போக்குவது கதிரவன்.

(ii) குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றி, சான்றோர்களால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதும் எதனோடும் ஒப்பிட்டுக் கூற முடியாததுமானது தமிழ்மொழி.

(iii) புற இருளைப் போக்கும் கதிரவனைப்போல அக இருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்று தண்டியலங்கார உணர மேற்கோள் பாடல் உணர்த்துகின்றது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

Question 2.
பொருள் வேற்றுமையணியைச் சான்று தந்து விளக்குக.
Answer:
அணி இலக்கணம் :
செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

சான்று :
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.

அணிப்பொருத்தம் :
கதிரவனும், தமிழ்மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக்கூறி, அவற்றுள் தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமையணி ஆகும்

கதிரவன் புற இருளை அகற்றும்;
தமிழ்மொழி அக இருளை அகற்றும்.

விளக்கம் :
கதிரவன்
எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் : கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும்.

தமிழ்:
குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றிய தமிழ்மொழி மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றும் அத்தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இல்லை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 1.
கவிஞர் பாரதிதாசனின் அழகின்சிரிப்பு – குன்றம் – ஒளியும் குன்றும் பாடலில் இடம்பெற்றுள்ள நடைச்சிறப்பினைத் தொகுத்து உரையாக வழங்குக.
Answer:
ஒளியும் குன்றும்
அருவிகள் வைரத்தொங்கல்
அடர்கொடிப் பச்சைப்பட்டே
குருவிகள் தங்கக் கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை
எருதின்மேல் பாயும் வேங்கை
நிலவுமேல் எழுந்த மின்னல்
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தகடுகள் பாரடா நீ – பாரதிதாசன்

இயற்கை வருணனையைப் பாரதிதாசன் செம்மைப் படுத்துவதில் வல்லவர்.
இப்பாடலில், வானுயிர்ந்த மலையின் அழகை தனக்கே உரித்தான நடையில் உருவகப்படுத்துகிறார்.

  • மலையினின்று விழும் வெண்மையான அருவிகள் மலையாகிய பெண்ணின் காதில் அணிந்திருக்கும் வைரத்தாலான தொங்கலாக உள்ளது.
  • மலையில் அடர்த்தியாகப் படாந்திருக்கும் பசுமையான கொடிகள் அப்பெண் உடுத்தியிருக்கும் பச்சைப் பட்டாடையாகக் காணப்படுகிறது.
  • மலையில் காணப்படும் குருவிகள் சூரிய ஒளியின் காரணமாகக் தங்கக் கட்டிகளாகக் காணப்படுன்றன.
  • பூத்திருக்கும் பூக்கள் நவமணிகள் ஆகக் காட்சியளிக்கின்றன.
  • எருதின் மேல் பாயும் வேங்கைக் காட்சிகள், முன்வைக்கப்படுகிறது.
  • நிலவின் மேல் ஓடுகின்ற மின்னலின் வரிகள் விழுந்து கிடக்கும் சருகுகள் ஒளியின் பிரகாசத்தால் தங்கத்தகடுகளாகக் காட்சியளிக்கின்றன.

Question 2.
தமிழின் சொல்வளத்தை வெளிப்படுத்தும்படியாக யானை / மலர் குறித்த பல சொற்களை அகராதியில் கண்டு பட்டியலிடுக.
Answer:
யானை : வேழம், களிறு, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், கரி, தும்பி, ஆனை, களபம், கயமுனி, கைம்மலை, குஞ்சரம், வல்விலங்கு, துங்கல், வாரணம், கடகம், துடியடி, கடகம்.

மலர் : அரும்பு, போது, நளை, முகிழ், புஷ்பம், நறுவி, மெகெகுள், செம்மலர், பொதும்பர், அலர், மகரந்தம், பொம்மல், வீதி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
Answer:
இ) தொல்காப்பியம்

Question 2.
கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் சரி
ஈ) கருத்து 1 சரி 2 தவறு
Answer:
இ) இரண்டு கருத்தும் சரி

Question 3.
பொருத்துக.
அ) தமிழ் அழகியல் – 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ – 2. தி. சு. நடராசன்
இ) கிடை – 3. சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி – 4. கி. ராஜநாராயணன்

அ) 4, 3, 2,1
ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஈ) 2, 3, 4, 1

குறுவினா

Question 1.
நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.
Answer:

  • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
  • மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

Question 2.
“படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக” – இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.
Answer:
ஓசை நயமிக்கச் சொற்கள் :
படாஅம் ஈத்த, கெடாஅ நல்லிசை, கடாஅயானை, நல்லிசை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

இலக்கணக் குறிப்புகள் :
படாஅம், கெடாஅ, கடாஅ – செய்யுளிசையளபெடைகள்
ஈத்த – பெயரெச்சம்
நல்லிசை – பண்புத்தொகை

Question 3.
விடியல், வனப்பு – இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.
Answer:
பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.

சிறுவினா

Question 1.
சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.
Answer:

  • எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
  • சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
  • இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தடு தானை மூவிருங் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

சான்று : ‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை கடாஅ யானைக்’ – இவ்வரிகள் ஒலிக்கோலத்தின் பண்பை உணர்த்துகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

நெடுவினா

Question 1.
கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.
Answer:
கவிதையின் நடையைக் கட்டமைப்பன:
பாட்டு அல்லது நடை அழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை.

கவிதை – நடையியல்:
மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்து சக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. நடைபெற்றியலும் (கிளவியாக்கம் – 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஒலிக்கோலங்கள்:
தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதையே, அந்தப் பனுவலின் – பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

சான்று: “கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே”

இப்பாடலில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள் பிற மெல்லின் இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருகிறது. இதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறியலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை
கடாஅ யானைக் கலிமான் பேக (புறம் – 145)

இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. ஒலிக்கோலம் சங்கப்பாடல்களின் ஒரு முக்கியப்பண்பு.

சொற்புலம் :
சொல்வளம் என்பது ஒருபொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல், பலதுறை, பலசூழல், பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும், உணர்வும், தெளிவும் கொண்டதாய் : 2 வருதலும், எனப் பலவாறு செழிப்பான தளத்தில் சொற்கள் விளைச்சல் கண்டிருப்பதைக் குறிக்கும். சான்றாக, முல்லைக்கலியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகின்ற சொற்கள் உள்ளன. சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளம். சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.

தொகைநிலை :
சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு இது. இதனைத் தொகைநிலை என்று தொல்காப்பிய எச்சவியல் பேசுகிறது. தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட ஒரு : வடிவமைப்பு.
அது வாக்கிய அமைப்பில் ஒரு சொல் போலவே நடைபெறும்.
சான்று: வைகுறுவிடியல், கவினுறு வனப்பு, தீநீர் என்பன.

தொடரியல் போக்குகள் :
ஒலிக்கோலமும், சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் ஏறியும் இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.

கவிதை மறுதலைத்தொடர் :
தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள், அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவது மரபு. இது சங்கப்பாடல்களில் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.
சான்று: பேரெயின் முறுவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச்சடங்கு பாடல்

“இடுகவொன்றோ, சுடுகவொன்றோ
படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே” (புறம் – 239)

இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வோர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடும் முடிகின்றன. இப்படி 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வதுபோல, : – (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ – புதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

இறுதியாக :
நடையியல் என்பது வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய நடை அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். மேலும் : வ சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவ மிக்க சமூக – பண்பாட்டுத்தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாகக் கொண்டுவிட்டது. எனவே, கவிதையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் சங்க இலக்கியங்களில் பரவிக் காணப்படுகின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
செய்யுளை ஓர் உள்ளமைப்பாகக் கூறும் நூல்
அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) யாப்பருங்கலக்காரிகை
ஈ) தண்டியலங்காரம்
Answer:
ஆ) தொல்காப்பியம்

Question 2.
காளைகளில் பல இனங்களைக் காட்டும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) முல்லைக்கலி
இ) புறநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
Answer:
ஆ) முல்லைக்கலி

Question 3.
பாடலின் தளத்தைப் பாத்திகட்டி வரப்புயர்த்தும் பணியைச் செய்வது
அ) தொடரியல் வடிவம்
ஆ) ஒலிக்கோலம்
இ) சொற்றொடர் நிலை
ஈ) சொற்புலம்
Answer:
அ) தொடரியல் வடிவம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 4.
கருத்து 1 : சொல்லில்தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடக்கின்றன.
கருத்து 2 : தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம்.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) கருத்து 1 சரி, 2 தவறு
ஈ) இரண்டு கருத்தும் சரி
Answer:
ஈ) இரண்டு கருத்தும் சரி

Question 5.
கருத்து 1 : முல்லைக்கலியில் எருதுகளின் பல இனங்களைக் காட்டும் சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
கருத்து 2 : சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் இருக்கிறது.
அ) கருத்து 1 தவறு
ஆ) கருத்து 1 சரி, 2 தவறு
இ) கருத்து இரண்டும் சரி
ஈ) கருத்து 1 தவறு, 2 சரி
Answer:
இ) கருத்து இரண்டும் சரி

Question 6.
கருத்து : தொன்மையான மொழி சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.
விளக்கம் : மொழித்தோன்ற அடிப்படையாக இருப்பது ஒலியே. ஒலியை வெவ்வேறு வடிவங்களில் உச்சரிக்கும் போது மொழித் தோன்றுகிறது.
அ) கருத்து சரி விளக்கம் தவறு
ஆ) கருத்தும் விளக்கமும் சரி
இ) கருத்து தவறு விளக்கமும் தவறு
ஈ) கருத்து தவறு விளக்கம் சரி
Answer:
ஆ) கருத்தும் விளக்கமும் சரி

Question 7.
பொருத்தமானதைக் கண்டறிக.
அ) பாவகை – ஐந்து
ஆ) வஞ்சி – வெண்பா நடைத்தே
இ) பனிநீர் – தொகை மொழி
ஈ) காமர் வனப்பு தொடரியல் போக்கு
Answer:
இ) பனிநீர் – தொகை மொழி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 8.
பொருத்தமானதைக் கண்டறிக.
அ) கடாஅ யானைக் கலிமான் பேக – முல்லைக்கலி
ஆ) புணரின் புணராது பொருளே – தொல்காப்பியம்
இ) இவன் தந்தை தந்தை – நற்றிணை
ஈ) யாமும் பாரியும் உளமே – புறநானூறு
Answer:
ஈ) யாமும் பாரியும் உளமே – புறநானூறு

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) கன்னி விடியல் – தொகை மொழி
ஆ) பொய்படு சொல் – மறித்தாக்கம்
இ) சங்கப்பாடல்கள் – மறுதலைத் தொடர்
ஈ) கி.ராஜநாராயணன் – கிடை
Answer:
ஆ) பொய்படு சொல் – மறித்தாக்கம்

Question 10.
தமிழ்மொழியின் நடை அழகியல் என்னும் கட்டுரையின் ஆசிரியர்
அ) தி.சு. நடராசன்
ஆ) ஔவை நடராசன்
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) தமிழண்ண ல்
Answer:
அ) தி.சு. நடராசன்

Question 11.
………….. இழுமெனும் மொழியால் விழுமியது பயக்கும் வகையின் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.
அ) தமிழில்
ஆ) ஆங்கிலத்தில்
இ) தெலுங்கில்
ஈ) வடமொழியில்
Answer:
அ) தமிழில்

Question 12.
மலரும் மணமும் போல கவிதையுடன் இரண்டறக் கலந்திருப்பது
அ) தமிழர்களின் அழகுணர்வு
ஆ) தலைவன் தலைவியின் அன்புணர்வு
இ) வள்ளலின் வள்ளன்மையுணர்வு
ஈ) பக்தர்களின் தெய்வ உணர்வு
Answer:
அ) தமிழர்களின் அழகுணர்வு

Question 13.
அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாகத் தோற்றம் தருவது
அ) புராணம்
ஆ) சங்க இலக்கியம்
இ) கல்வெட்டு
ஈ) நாணயம்
Answer:
ஆ) சங்க இலக்கியம்

Question 14.
அழகு என்ப து ……………. செய்தி.
அ) மனிதரின்
ஆ) பேரண்டத்தின்
இ) காதலரின்
ஈ) கடவுளரின்
Answer:
ஆ) பேரண்டத்தின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 15.
அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருவது
அ) தொல்காப்பியம்
ஆ) சங்க இலக்கியம்
இ) புராணம்
ஈ) மனிதநடத்தை
Answer:
அ) தொல்காப்பியம்

Question 16.
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணம்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தொன்னூல் விளக்கம்
ஈ) தண்டியலங்காரம்
Answer:
அ) தொல்காப்பியம்

Question 17.
இலக்கியத்தின் ………………. பற்றித் தமிழ் இலக்கிய மரபில் அழுத்தமான கருத்து உண்டு.
அ) நயம்
ஆ) பயன்
இ) நிலை
ஈ) ஈடுபாடு
Answer:
ஆ) பயன்

Question 18.
இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறிவியல் சார்ந்த கருத்துநிலைகள் கலை உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்று கூறும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) இலக்கண விளக்கம்
ஈ) தொன்னூல் விளக்கம்
Answer:
அ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 19.
சங்க இலக்கியம் பாடற்பொருள்களாக வடிவமைத்துள்ளவை
i) அகத்திணைச் சார்ந்த செய்திகள்
ii) புறத்திணைச் சார்ந்த செய்திகள்

அ) i – சரி
ஆ) ii – தவறு
இ) இரண்டும் சரி
ஈ) i – சரி ; ii – தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Question 20.
அகன் ஐந்திணைகளைப் பேசுவது
அ) நன்னூல்
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Answer:
இ) தொல்காப்பியம்

Question 21.
பா வகைகள் ஆசிரியம் முதற்கொண்டு
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஓன்று
ஈ) இரண்டு
Answer:
ஆ) நான்கு

Question 22.
அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப-என்று பாவகைகளோடு அறவியல் கருத்துகளை இணைத்துச்சொல்வது
அ) சங்க இலக்கியம்
ஆ) பரிபாடல்
இ) தொல்காப்பியம்
ஈ) அகத்தியம்
Answer:
இ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 23.
பாட்டு அல்லது கவிதையின் நடையியல் கூறுகளில் முக்கியமானவை
i) ஒலிக்கோலங்கள்
ii) சொற்களின் புலம்
iii) தொடரியல் போக்குகள்
அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) இரண்டு மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

Question 24.
கவிதையின் ……………. நடை .
அ) இயங்காற்றல்தான்
ஆ) அழகுதான்
இ) பார்வைதான்
ஈ) இயல்புதான்
Answer:
அ) இயங்காற்றல்தான்

Question 25.
‘நடைபெற்றியலும்’ என்பது தொல்காப்பியத்தின் ……….. வரும் சொற்றொடர்.
அ) கிளவியாக்கத்தில்
ஆ) மொழியாக்கத்தில்
இ) எழுத்து அதிகாரத்தில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கிளவியாக்கத்தில்

Question 26.
ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி-என்று குறிப்பிடும் நூல்
அ) கலித்தொகை
ஆ) தொல்காப்பியம்
இ) பரிபாடல்
ஈ) குறவஞ்சி
Answer:
ஆ) தொல்காப்பியம்

Question 27.
‘கடந்தடுதானை மூவிருங்கூடி’-என்று தொடங்கும் பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) புறநானூறு

Question 28.
‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅயானைக் கலிமான் பேக’ என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 29.
‘புணரின் புணராது பொருளே; பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே!’ என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) புறநானூறு
ஆ) நற்றிணை
இ) அகநானூறு
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) நற்றிணை

Question 30.
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை-என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) புறநானூறு
ஆ) நற்றினை
இ) அகநானூறு
ஈ) கலித்தொகை
அ) புறநானூறு
Answer:
அ) புறநானூறு

Question 31.
…………… கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
அ) குறிஞ்சிக்
ஆ) முல்லைக்
இ) மருதக்
ஈ) பாலைக்
Answer:
ஆ) முல்லைக்

Question 32.
‘கிடை’ என்னும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்களைச் சொல்லி அழைப்பவர்
அ) இந்திரா பார்த்தசாரதி
ஆ) கி. ராஜநாராயணன்
இ) ஜெயகாந்தன்
ஈ) ஜெயமோகன்
Answer:
ஆ) கி. ராஜநாராயணன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 33.
தொகைநிலை, தொகைமொழி பற்றிப் பேசும் தொல்காப்பியத்தின் இயல்
அ) எச்சவியல்
ஆ) இடையியல்
இ) உவமையியல்
ஈ) எழுத்தியல்
Answer:
அ) எச்சவியல்

Question 34.
‘நீர்படு பசுங்கலம்’ என்னும் அடிகளுக்குரிய நூல்
அ) புறநானூறு
ஆ) அகநானூறு
இ) நற்றிணை
ஈ) பரிபாடல்
Answer:
இ) நற்றிணை

Question 35.
நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச் சடங்கு, சர்ச்சைக்கு உள்ளானது பற்றிப் பாடியவர்
அ) பேரெயின் முறுவலார்
ஆ) வெள்ளைக்குடி நாகனார்
இ) நரிவெரூஉத்தலையார்
ஈ) கோவூர்கிழார்
Answer:
அ) பேரெயின் முறுவலார்

Question 36.
இடுக வொன்றோ, சுடுக வொன்றோ, படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே-என்ற புறநானூறு அடிகளில் குறிப்பிடப்படும் மன்னர்
அ) அறிவுடைநம்பி
ஆ) நம்பி நெடுஞ்செழியன்
இ) செங்குட்டுவன்
ஈ) கிள்ளிவளவன்
Answer:
ஆ) நம்பி நெடுஞ்செழியன்

Question 37.
‘தொடியுடைய தோள் மணந்தனன்’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர்
அ) பேரெயின் முறுவலார்
ஆ) பொன்முடியார்
இ) கோவூர்கிழார்
ஈ) வெள்ளைக்குடி நாகனார்
Answer:
அ) பேரெயின் முறுவலார்

Question 38.
பேரெயின் முறுவலாரின் புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ள பண்புகள்
அ) 16
ஆ) 18
இ) 15
ஈ) 14
Answer:
ஆ) 18

Question 39.
தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் ……………. முதன்மை ஆதாரம்.
அ) சங்க இலக்கியமே
ஆ) சங்கம் மருவிய இலக்கியமே
இ) நீதி இலக்கியமே
ஈ) காப்பியமே
Answer:
அ) சங்க இலக்கியமே

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 40.
தமிழ் அழகியல் என்னும் நூலின் ஆசிரியர்
அ) தி.சு. நடராசன்
ஆ) ஔவை நடராசன்
இ) தமிழண்ண ல்
ஈ) வல்லிக்கண்ணன்
Answer:
அ) தி.சு. நடராசன்

Question 41.
…………. கலையைத் தமிழக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி. சு. நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
அ) திரைக்
ஆ) திறனாய்வுக்
இ) மொழிபெயர்ப்புக்
ஈ) பேச்சுக்
Answer:
ஆ) திறனாய்வுக்

Question 42.
தி.சு. நடராசன் …………. ஆகப் பணிபுரிந்தார்.
அ) மாவட்ட ஆட்சியர்
ஆ) போராசிரியர்
இ) வழக்குரைஞர்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) போராசிரியர்

குறுவினா

Question 1.
இலக்கியம் எவற்றைத் தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டியுள்ளது?
Answer:
மனித நாக்குகளின் ஈரம்பட்டுக் கிடக்கும் மொழியானது, பேசுபவன், கேட்பவன் ஆகியோருடைய தனிப்பட்ட சூழல்கள் பேசும் போதும், கேட்கும் போதும் தனிச்சூழல்களைத் தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டும்.

Question 2.
மொழியின் சிறப்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?
Answer:
உவமம், உருவகம், எச்சம், குறிப்பு , உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவையாகும்.

Question 3.
தமிழ் இலக்கியத்தின் பயன்களாகக் கட்டுரையாசிரியர் கூறுவன யாவை?
Answer:
அறம், பொருள், இன்பம் அல்லது வேறு ஏதோ ஓர் உயர்ந்த குறிக்கோளை உணர்த்துவனவாக தமிழ் இலக்கியத்தின் பயன்கள் இருக்க வேண்டும்.

Question 4.
‘கலை முழுமை’ பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுவது யாது?
Answer:
‘கலை முழுமை’, என்பது இலக்கியத்திற்கான நோக்கம் அல்லது அறிவியல் சார்ந்த கருத்துநிலைகள், கலை உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

Question 5.
தமிழ் அழகியலின் நெடும்பரப்புகளென ஆசிரியர் எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer:
சமூக பண்பாட்டு மரபிற்கேற்பவே, கலை படைப்பை, அழகியல் நெறியை, பண்பாட்டின் இலச்சினையாகச் சித்தரிப்பதற்குத் தமிழ்மரபு முன்வந்திருக்கிறது; முன் மொழிந்திருக்கிறது. இதுவே தமிழ் அழகியலின் நெடும்பரப்பு ஆகும்.

Question 6.
பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றனவை எவை?
Answer:
ஒலிக்கோலம், சொற்புலம், சொற்றொடர் நிலை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 7.
பண்டைய கவிஞர்களுக்கு இயல்பாக இருந்த உணர்வு எது?
Answer:
கவிப்பொருளை அமைக்கின்ற விதத்தில் உணர்ச்சிகளைப் பாய்ச்சும் விதத்தில் தீங்கவிகளைச் செவியாரப் பருகச்செய்து கற்போர் இதயம் கனியும் வண்ணம் படைக்கும் அழவியல் உணர்வு, பண்டைக் கவிஞர்களுக்கு இயல்பாக இருந்தது.

Question 8.
இலக்கியத்தனம் என்பது யாது?
Answer:

  • இலக்கியம் என்ற மொழிசார்கலை, மொழியின் தனித்துவமான பண்புகளை இயன்ற மட்டும் தனக்குரியதாக்கிக் கொள்கிறது.
  • இலக்கியத்திற்கு ஒரு சிறப்புத்தன்மையைத் தந்துவிடுகிறது. இத்தகைய தன்மைதான் கவித்தனம் அல்லது இலக்கியத்தனம் என்று பேசப்படுகிறது.

Question 9.
மொழியின் வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?
Answer:
உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி.

Question 10.
‘லட்சியம்’ பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுவது எது?
Answer:
அகன் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்தினைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் ‘லட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுகிறது.

Question 11.
எந்த தொன்மையான மொழியும் எவற்றிலிருந்து தொடங்குகிறது?
Answer:
எந்த தொன்மையான மொழியும் சமிக்கையிலிருந்தும் இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 12.
ஒலிப்பின்னல் என்பது யாது?
Answer:

  • மொழிசார்ந்த கவிதையும் இசையோடும் இசைக்கருவியோடும்தான் பிறக்கிறது.
  • ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
  • இதனையே அந்தப் பனுவலின் பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

Question 13.
சொல்லில் புதைந்து கிடப்பன யாவை?
Answer:

  • சொல்லில்தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடக்கின்றன.
  • கலையும் பண்பாடும் வரலாறும் அரசியலும் பொதிந்து கிடக்கின்றன.

Question 14.
தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சொல்வளத்திற்கான சான்றுகளைத் தருக.
Answer:

  1. முல்லைக் கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
  2. கி. ராஜநாராயணன் ‘கிடை’ என்னும் குறுநாவலில் ஆடுகளில் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார்.

Question 15.
சொல்வளம் என்பது யாது?
Answer:

  1. சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.
  2. ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் கவவுக்கை நெகிழாமல் முயங்கிக் கிடப்பதையும் குறிக்கும்.

Question 16.
தொடரியில் வடிவம் செய்யும் பணிகள் யாவை?
Answer:
ஒலிக்கோலமும் சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் 11 போகின்றன என்றால், பாத்திகட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Question 17.
தி. சு. நடராசன் தமிழ்ப் போராசிரியராகப் பணியாற்றிய பல்கலைக்கழகங்களைக் கூறுக.
Answer:

  • மதுலை காமராசர் பல்கலைக்கழகம்.
  • போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகம்.
  • திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

Question 18.
தி.சு. நடராசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள்.

சிறுவினா

Question 1.
தி.சு. நடராசன் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் : தி.சு. நடராசன்
சிறப்பு : திறனாய்வுக்கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.
பதவி : மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநேல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
படைப்புகள் : கவிதையெனும் மொழி, தமிழ் அழகியல், தமிழ் பண்பாட்டு வெளிகள், திறனாய்வுக்கலை.

Question 2.
சங்கப்பாடல்கள் பலவற்றுள் அமைந்துள்ள மறுதலைத் தொடரியல் போக்குக்குச் சான்று தந்து விளக்குக.
Answer:
தமிழ் மொழியில் உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு உள்ளிட்ட இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு. ஆனால் சங்கப்பாடல்கள் பலவற்றில் இந்நிலை மாறி வருகிறது. இதனைக் கவிதை மறுதலைத் தொடர் என்பர்.

சிறப்பாக முடியும் பாடல்களின் இறுதியில்தான் இந்தத் தொடரியல் பிறழ்வுநிலை பெரிதும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாகப் பேரெயின் முறுவலார், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச் சடங்கில் முரண்பாடான கருத்து உருவாகியுள்ளதை

இடுக வொன்றோ, சுடுகவொன்றோ;
படுவழிப் படுக, இப்புகழ் வெய்யோன் தலையே! (புறம் : 239)

என்ற இப்பாடலில் இடம் பெற்றுள்ள இறுதி அடி ஓர் எளிமையான தொடரியல் பிறழ்வோடு அமைந்திருக்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

‘தொடியடைய தோள் மணந்தனன்’ எனத் தொடங்கும் இப்பாடலில் தொடர்ந்து வரும் 20 அடிகளில் தொடர்கள் வரிசையாகவும் நேர்படவும் செல்வதைக் காணலாம். ஒவ்வோர் அடியிலும் தனித்தனியே வினைமுற்றுகளோடு தன்னிறைவோடு 18 பண்புகளை வரிசைப்படுத்தித் தொகுத்துக் : ல கூறும் புலவர் இறுதியில் நெடுஞ்செழியனுடைய உடலைப் புதைத்தால் புதை ; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறார். இது சங்கப் பாடலின் மறுதலைத் தொடரியல் போக்குக்குத் தகுந்த சான்றாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 1.1 இளந்தமிழே! Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 1.1 இளந்தமிழே!

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 1.
தமிழ்மொழிப் பாடத்தில் மொழி வாழ்த்துப் பாடல் இடம் பெறுவதன் நோக்கம் குறித்த கருத்துகளைத் தொகுத்துக் கலந்துரையாடல் நிகழ்த்துக.
Answer:
வேதன் : எனக்கு மொழி வாழ்த்து வைப்பு முறையைப் பற்றிய ஒரு விளக்கம் தேவை.

மதன் : சொல்லுங்க! மொழி வாழ்த்து வைப்பு முறையில் என்ன விளக்கம் வேண்டும்?

வேதன் : இப்போதெல்லாம் இறைவாழ்த்து இருந்த இடத்தில் மொழி வாழ்த்து வைக்கப்படுகிறதே, அதுதான்.

மதன் : அது இடமாற்றம் இல்லை . ஒதுக்கப்படுவதும் இல்லை .

வேதன் : நேற்று போல் இன்று இல்லை என்கிறீர்களா?

மதன் : அதாவது, ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்விருப்பதெய்வங்களைவணங்கிவிட்டுத் தொடங்குவதுதான் வழக்கம்.

வேதன் : தற்போது புத்தகங்களில் அப்படி இல்லையே.

மதன் : வணங்குவது வேறு, இடம் பெறவில்லை என்பது வேறு. இது மொழிப்புத்தகம். எனவே, மொழியைத் தெய்வமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

வேதன் : மொழி தெய்வத்தை எவ்வாறு வணங்கலாம்?

மதன் : மொழி தெய்வத்தைப் பல புலவர்கள் பலவாறு போற்றியுள்ளனர். பாரதிதாசன் தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் – என்பார்.

வேதன் : அப்போ, மொழிப்பாடங்களில் மொழிக் கடவு(ளை)ள் வாழ்த்தை வைப்பது சரிதானா?

மதன் : நிச்சயமாக, மொழி வளம், மொழி சிறக்க, மொழி தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதால் மொழி வாழ்த்தினை இடம் பெறச் செய்வது சாலச்சிறந்தது.

வேதன் : நன்றி மதன்.

மதன் : நன்றி வேதன், மீண்டும் சந்திப்போம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களைத் தந்தது

அ) க மட்டும் சரி
ஆ) க, உ இரண்டும் சரி
இ) ந மட்டும் சரி
ஈ) க, ங இரண்டும் சரி
Answer:
ஈ) க, ங இரண்டும் சரி

குறுவினா

Question 1.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?
Answer:
செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.

சிறுவினா

Question 1.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answer:

  • கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
  • ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
  • கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 2.
பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே! 1
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே! 2

நெடுவினா

Question 1.
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார்.

  • செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
  • உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாய்க் காணப்படுகிறது.
  • இக்காட்சியெல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
  • பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
  • தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய்.
  • பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.
  • உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா.
  • கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
  • குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.

இலக்கணக் குறிப்பு

செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம் – பண்புத்தொகைகள்
முத்து முத்தாய் – அடுக்குத்தொடர்
சிவந்து – வினையெச்சம்
வியர்வை வெள்ளம் – உருவகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே! 3
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே! 4

புணர்ச்சி விதி

1. செம்பரிதி = செம்மை + பரிதி
ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + பரிதி என்பது செம்பரிதி எனப் புணர்ந்தது.

2. வானமெல்லாம் = வானம் + எல்லாம்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ம் + எ = மெ) வானெமல்லாம் எனப் புணர்ந்தது.

3. உன்னையல்லால் = உன்னை + அல்லால்

  • இஈஐ வழி யவ்வும் என்ற விதிப்படி, உன்னை + ய் + அல்லால் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ய் + அ = ய) உன்னையல்லால் எனப் புணர்ந்தது.

4. செந்தமிழே = செம்மை + தமிழே

  • ஈறுபோதல் என்ற விதிப்படி, மை கெட்டு செம் + தமிழே என்றானது.
  • முன்னின்ற மெய் திரிதல் என்ற விதிப்படி, (ம் திரிந்து ந் தோன்றி), செந்தமிழே எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?
அ) குற்றால மலை
ஆ) விந்திய மலை
இ) இமய மலை
ஈ) சாமிமலை
Answer:
அ) குற்றால மலை

Question 2.
சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?
அ) அக்கினி
ஆ) ஒளிப்பறவை
இ) அக்கினிசாட்சி
ஈ) சூரியநிழல்
Answer:
இ) அக்கினிசாட்சி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 3.
‘சாய்ப்பான்’ என்பதன் சரியான பகுபத பிரிப்பு முறை
அ) சாய்ப்பு + ஆன்
ஆ) சாய் + ப் + ஆன்
இ) சாய் + ப் + ப் + அன்
ஈ) சாய் + ப் + ப் + ஆன்
Answer:
ஈ) சாய் + ப் + ப் + ஆன்

Question 4.
கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?
அ) ஒரு கிராமத்தின் கதை
ஆ) ஒரு கிராமமே அழுதது
இ) ஒரு கிராமத்தின் நதி
ஈ) ஒரு புளியமரத்தின் கதை
Answer:
இ) ஒரு கிராமத்தின் நதி

Question 5.
‘செந்தமிழ்’ – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?
அ) ஈறுபோதல், இனமிகல்
ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
இ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
ஈ) ஈறுபோதல்
Answer:
ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

Question 6.
‘வியர்வை வெள்ளம்’ – இலக்கணக் குறிப்புத் தருக.
ஆ) உவமையாகுபெயர்
ஆ) கருவியாகு பெயர்
இ) உருவகம்
ஈ) உவமைத்தொகை
Answer:
இ) உருவகம்

Question 7.
இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்?
ஆ) சூரிய காந்தி
ஆ) சூரிய பார்வை
இ) ஒளிப்பூ
ஈ) சூரிய நிழல்
Answer:
ஈ) சூரிய நிழல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 8.
கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்த்தாய்.
கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டும் கருத்தும் தவறு
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு
Answer:
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

Question 9.
‘இளந்தமிழே’ என்னும் பாடல் நூலின் ஆசிரியர்
அ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஆ) பெருந்தேவனார்
இ) தமிழண்ண ல்
ஈ) மு. வரதராசனார்
Answer:
அ) சிற்பி பாலசுப்பிரமணியம்

Question 10.
பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள்
அ) கோப்பெருந்தேவி
ஆ) வேண்மாள்
இ) தமிழன்னை
ஈ) ஒளவையார்
Answer:
இ) தமிழன்னை

Question 11.
…………… முதலான வள்ளல்களை ஈன்று தந்தவள் தமிழன்னை .
அ) சடையப்ப வள்ளல்
ஆ) சீதக்காதி
இ) பாரி
ஈ) நெடுங்கிள்ளி
Answer:
இ) பாரி

Question 12.
எம்மருமைச் செந்தமிழே! உன்னையல்லால் ஏற்றதுணை வேறுண்டோ – என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) திரு.வி.க
Answer:
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்

Question 13.
‘இளந்தமிழே’ என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) கலி விருத்தம்
ஈ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Answer:
ஈ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 14.
பொருத்திக் காட்டுக.
i) செம்பரிதி – உருவகம்
ii) முத்து முத்தாய் – வினையெச்சம்
iii) சிவந்து – அடுக்குத்தொடர்
iv) வியர்வைவெள்ளம் – பண்புத்தொகை
அ) 4321
ஆ) 3412
இ) 2143
ஈ) 3214
Answer:
அ) 4321

Question 15.
செம்பரிதி – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதியைக் கண்டறிக.
அ) ஈறுபோதல்
ஆ) இனமிகல்
இ) ஆதிநீடல்
ஈ) முன்நின்ற மெய்திரிதல்
Answer:
அ) ஈறுபோதல்

Question 16.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – என்ற விதிக்குப் பொருத்தமான சொல்லைக் கண்டறிக.
அ) உன்னையல்லால்
ஆ) வானமெல்லாம்
இ) செந்தமிழே
ஈ) செம்பரிதி
Answer:
ஆ) வானமெல்லாம்

Question 17.
‘இளந்தமிழே’ என்னும் கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
அ) சூரிய நிழல்
ஆ) ஒரு கிராமத்து நதி
இ) ஒளிப்பறவை
ஈ) நிலவுப்பூ
Answer:
ஈ) நிலவுப்பூ

Question 18.
சிற்பியின் பன்முகங்களில் பொருந்தாததைக் கூறுக.
அ) கவிஞர்
ஆ) ஓவியர்
இ) பேராசிரியர்
ஈ) மொழிபெயர்ப்பாளர்
Answer:
ஈ) மொழிபெயர்ப்பாளர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 19.
சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தமிழ்
ஈ) காமராசர்
Answer:
அ) பாரதியார்

Question 20.
சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்?
அ) மூன்று
ஆ) இரு
இ) நான்கு
ஈ) பல
Answer:
ஆ) இரு

Question 21.
சிற்பி பாலசுப்பிரமணியன் சாகித்திய அகாதெமியின் …………….. இருக்கிறார்.
அ) தலைவராக
ஆ) செயலாளராக
இ) பொருளாளராக
ஈ) உறுப்பினராக
Answer:
ஈ) உறுப்பினராக

குறுவினா

Question 1.
தொழிலாளர்களின் கைகள் எதனைப் போலச் சிவந்துள்ளதாகக் கவிஞர் சிற்பி கூறுகிறார் ?
Answer:
மாலையில் மறையும் கதிரவனின் கதிரொளி போல தொழிலாளரின் கைகள் சிவந்துள்ளதாகக் கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 2.
தமிழ்மொழியின் பழமைநலம் எவை?
Answer:

  1. தமிழ்மொழி பாண்டியர்களின் அவையிலே தன்னிகரற்ற செம்மொழியாய் ஆட்சி செய்தது.
  2. பாரி போன்ற வள்ளல்கள் பலரை தமிழ் மண்ணிற்குத் தந்த பழமை நலம் கொண்ட மொழி.

Question 3.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசை என்ன ?
Answer:
‘தமிழ் பல புதிய உள்ளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்’, என்பதே கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசை ஆகும்.

Question 4.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூற்களில் சிலவற்றை எழுதுக.
Answer:
ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி.

Question 5.
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முகங்களைக் குறிப்பிடுக.
Answer:
கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்.

Question 6.
சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
Answer:
இலக்கியச் சிந்தனைகள், மலையாளக்கவிதை, அலையும் சுவரும்.

Question 7.
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் எம்மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன?
Answer:
ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 8.
சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்?
Answer:

  1. சாகித்திய அகாதெமி விருதைப் சிற்பி பாலசுப்பிரமணியன் இரு முறை பெற்றுள்ளார் .
  2. மொழிபெயர்ப்புக்காகவும், ‘ஒரு கிராமத்து நதி’ என்னும் கவிதை நூலிற்காகவும் சாகித்திய அகாதெமி விருதைப் சிற்பி பாலசுப்பிரமணியம் பெற்றுள்ளார்.

சிறுவினா

Question 1.
குளிர் பொதிகைத் தென்தமிழ் ஏன் சீறி வர வேண்டும் எனச் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்?
Answer:

  • உள்ளத்தில் பொங்கிவரும் உணர்வுகளை உணர்ச்சி மிகு கவிதையாக எழுத முத்தமிழே உதவி செய்கின்றது.
  • பாண்டியமன்னர்கள் அமைத்த சங்கத்திலே, தன்னிகரற்ற செம்மொழியாய் இருந்து ஆட்சிச் செய்தது.
  • பாரி போன்ற வள்ளல்கள் பலரை இத்தமிழ் மண்ணிற்குத் தந்தது.
  • அன்றிருந்த தமிழர் நலமும் தமிழ்நாட்டுப் பொதுமை நலமும் மீண்டும் பிறப்பதற்கு நீ குயில் போலக் கூவி வர வேண்டும்.
  • இன்று தமிழர்களைச் சூழ்ந்திருக்கும் அடிமைத்தனமும், அறியாமையும் அகன்றிட அவர்கள் சிறைப்பட்டிருக்கும் கூட்டினை உடைத்திட நீயும் சிங்கம் போலச் சீறி புறப்பட்டு வர வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே!

Question 2.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : பாலசுப்பிரமணியம். சிறப்புப்
பெயர் : சிற்பி (எழுத்துகளைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்).
பெற்றோர் : சி. பொன்னுசாமி – கண்டியம்மாள்.
ஊர் : ஆத்துப்பொள்ளாச்சி, கோவை.
பணி : பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் . சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்.
விருது : “ஒரு கிராமத்து நதி” எனும் கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது.
படைப்புகள் : ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், பூஜ்யங்களின் சங்கிலி.