Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Students can Download 8th Tamil Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

மதிப்பீடு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது …………………
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை
Answer:
இ) நடுவுநிலைமை

Question 2.
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் …………….
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்
Answer:
ஆ) கல்லாதவர்

Question 3.
‘வல்லுருவம்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) வல் + உருவம்
ஆ) வன்மை + உருவம்
இ) வல்ல + உருவம்
ஈ) வல்லு + உருவம்
Answer:
ஆ) வன்மை + உருவம்

Question 4.
நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) நெடுநேர்
ஆ) நெடுத்தேர்
இ) நெடுந்தேர்
ஈ) நெடுமைதேர்
Answer:
இ) நெடுந்தேர்

Question 5.
‘வருமுன்னர்’ – எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ……………….
அ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
இ) உவமை அணி

குறுவினா

Question 1.
சான்றோர்க்கு அழகாவது எது?
Answer:
தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

Question 2.
பழியின்றி வாழும் வழியாக திருக்குறள் கூறுவது யாது?
Answer:
தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 3.
‘புலித் தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?
Answer:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக

Question 1.
தக்கார் தகவிலரெ என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
Answer:
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

Question 2.
தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.
Answer:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க
இடங்கண்ட பின்அல் லது.

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ……………
புலியின்தோல் ……… மேய்ந் தற்று.

2. விலங்கொடு …………. அனையர் ……………….
கற்றாரோடு ஏனை யவர்.
Answer:
1. பெற்றம், போர்த்து
2. மக்கள், இலங்குநூல்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Question 1.
யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.
Answer:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

படங்களுக்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 1
1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 2
2. கடல்ஓடா கால்வல் நெடுந்நேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. திருவள்ளுவர் …………………. ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
2. திருக்குறளில் உள்ள முப்பால் ………………….
3. அறத்துப்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
4. பொருட்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
5. இன்பத்துப்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
6. நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே ………………… அழகாகும்.
7. புலித்தோல் போர்த்திய பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது மனத்தை அடக்க இயலாதவரின் வலிய ………………….
8. வளைவுடன் இருப்பினும் ………………. கொம்பு இனிமையைத் தரும்.
9. நேராக இருந்தாலும் ……………… கொடியதாக இருக்கும்.
10. அவரவர் தமக்குரிய இடங்களிலேயே ……………….. செயல்பட முடியும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்
Answer:
1. இரண்டாயிரம்
2. அறம், பொருள், இன்பம்
3. நான்கு
4. மூன்று
5. இரண்டு
6. சான்றோர்க்கு
7. தவக்கோலம்
8. யாழின்
9. அம்பு
10. சிறப்பாகச்

விடையளி

Question 1.
புகழாலும் பழியாலும் அறியப்படுவதாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

Question 2.
பசுத்தோல் போர்த்திய புலி – விளக்குக.
Answer:
மனத்தை அடக்கி ஆளும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலமானது, புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்தது போன்றது.

Question 3.
அம்பு, யாழின் கொம்பு – இவற்றால் அறியப்படுவது யாது?
Answer:
(i) அம்பு நேராக இருந்தாலும் கொடியதாக இருக்கும். யாழின் கொம்பு வளைவுடன் இருந்தாலும் இனிமையைத் தரும்.
(ii) அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல் வகையில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 4.
கல்லாதவர் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை .

Question 5.
விலங்கொடு மக்கள் அனையர் – விளக்குக.
Answer:
கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

Question 6.
யாருடைய வாழ்க்கை , நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழியும்?
Answer:
பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும்.

Question 7.
செயலைத் தொடங்குதல் பற்றிக் குறள் கூறுவது யாது?
Answer:
பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; 30 இகழவும் கூடாது.

Question 8.
தேர், கப்பல் மூலம் வள்ளுவர் கூறும் கருத்து யாது?
Answer:
(i) வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேரினால் கடலில் ஓட இயலாது.
(ii) கடலில் ஓடும் கப்பலினால் தரையில் ஓட இயலாது.
(iii) அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 3
திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல்; ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

நடுவுநிலைமை

1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.*

தெளிவுரை : நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.

2. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

தெளிவுரை : தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவு நிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.
அணி : உவமை அணி.

கூடா ஒழுக்கம்

3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

தெளிவுரை : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
அணி : இல்பொருள் உவமை அணி.

4. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.*

தெளிவுரை : நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல் வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கல்லாமை

5. உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.

தெளிவுரை : கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை .

6. விலங்கொடு மக்களை அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.*

தெளிவுரை : கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

குற்றங்கடிதல்

7. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

தெளிவுரை : பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்து விடும்.
அணி : உவமை அணி.

8. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.*

தெளிவுரை : தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

இடனறிதல்

9. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

தெளிவுரை : பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.

10. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.

தெளிவுரை : வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர்
தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.
அணி : பிறிது மொழிதல் அணி.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Students can Download 8th Tamil Chapter 2.1 ஓடை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Question 1.
மலை, அருவி, ஓடை, மரங்கள். வயல்கள் இடம் பெறுமாறு ஓர் இயற்கைக் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பள்ளிக்குச் சென்று கல்வி ……………… சிறப்பு
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
Answer:
அ) பயிலுதல்

Question 2.
செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
Answer:
ஆ) ஓடை

Question 3.
‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
Answer:
இ) நன்மை + செய்

Question 4.
‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + உழைப்பு
ஈ) நீள் + உழைப்பு
Answer:
ஈ) நீள் + உழைப்பு

Question 5.
சீருக்கு +ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) சீருக்கு ஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இ) சீர்க்கேற்ப
ஈ) சீருகேற்ப
Answer:
ஆ) சீருக்கேற்ப

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Question 6.
ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) ஓடைஆட
ஆ) ஓடையாட
இ) ஓடையோட
ஈ) ஓடைவாட
Answer:
ஆ) ஓடையாட

குறுவினா

Question 1.
ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
Answer:
ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்ற ஒலி எழுப்பியபடி ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்.

Question 2.
ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்?
Answer:
ஓடை எழுப்பும் ஒலிக்கு சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழங்கும் முழவையொலியை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
Answer:
(i) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
(ii) அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
(iii) கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
(iv) குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
(v) நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது

சிந்தனை வினா

Question 1.
வள்ளைப்பாட்டு என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
Answer:
(i) ஏற்றப்பாடல் – ஏற்றத்தின் மூலம் நீர் இறைக்கும்போது பாடப்படும்.
(ii) ஏர்ப்பாடல் – வயலில் மாடுகளைப் பூட்டி ஏர் உழும்போது பாடப்படும்.
(iii) நடவுப் பாடல் – வயலில் நாற்று நடும்போது பாடப்படும்.
(iv) களை எடுப்புப் பாடல் – பயிர்களின் இடையே உள்ள வேண்டாத புல் பூண்டுகளைக் களைந்து எடுக்கும்போது பாடப்படும்.

(v) அறுவடைப் பாடல் – நெல் முற்றியவுடன் அறுவடை செய்யும் போது பாடப்படும்.

(vi) போராடிப் பாடல் – நெற்கதிர்களை உதிர்த்து எடுப்பதற்கு போரடிப்பார்கள். அப்போது பாடப்படும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

இவையனைத்தும் உழவர்கள் பாடும் பாடல்கள் ஆகும். இதேபோல் மீனவர் பாடல், வண்டிக்காரன் பாடல், சுண்ணாம்பு இடிப்போர் பாடல், படகுக்காரன் பாடல், உப்பளத் தொழிலாளர் பாடல் எனப் பல வகையான தொழில் பாடல்கள் உள்ளன.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
2. ஈரம் – இரக்கம்
3. முழவு – இசைக்கருவி
4. நன்செய் – நிறைந்த நீர் வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
5. புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
6. வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்
7. பயிலுதல் – படித்தல்
8. நாணம் – வெட்கம்
9. செஞ்சொல் – திருந்திய சொல்

நிரப்புக

1. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் ………………………………..
2. வாணிதாசனின் இயற்பெயர் ……………………….
3. வாணிதாசனின் சிறப்புப் பெயர்கள் ………………………………..
4. வாணிதாசனுக்குப் பிரெஞ்சு அரசு ……………………… விருது வழங்கியுள்ளது.
5. பாடப்பகுதியில் உள்ள ‘ஓடை’ என்னும் பாடல் ……………………. என்னும் நூலில் உள்ளது.
6. ஓடையில் ஆட …………………. தூண்டும்.
7. கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாய்வது ……………………
8. ஓடை நன்செய், புன்செய் நிலங்களுக்கு …………………………. தந்து பயிர்களைச் செழிக்க செய்கிறது.
9. ஓடை இடையறாது ஓடித் தன் ……………………. கொடையாகத் தருகிறது.
10. ஓடை நாட்டு மக்களின் ………………….. போக்குகிறது.
Answer:
1. கவிஞர் வாணிதாசன்.
2. அரங்கசாமி என்கிற எத்திராசலு
3. கவிஞரேறு, பாவலர்மணி.
4. செவாலியர்
5. தொடுவானம்
6. உள்ளம்
7. ஓடை
8. நீர்வளம்
9. உழைப்பைக்
10. வறுமையைப்

குறுவினாக்கள்:

Question 1.
வாணிதாசன் அறிந்த மொழிகள் யாவை?
Answer:
வாணிதாசன் அறிந்த மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு.

Question 2.
வாணிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்.

Question 3.
ஓடையின் அழகைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது?
Answer:
சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்? என்று வாணிதாசன் ஓடையின் அழகைப் பற்றிக் கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

Question 4.
ஓடையைப் பார்த்ததும் தன் மனநிலை எவ்வாறு உள்ளது என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
நீரோடையைப் பார்த்ததும் நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறது. கற்களில் உருண்டும் தவழ்ந்ததும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறது என்று கவிஞர் கூறுகிறார்.

Question 5.
ஓடையின் பயன்கள் யாவை?
Answer:
நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

Question 6.
ஓடையின் கொடையைப் பற்றி வாணிதாசன் கூறுவது யாது?
Answer:
நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

சிறுவினா

Question 1.
கவிஞர் வாணிதாசன் குறிப்பு எழுதுக.
Answer:
ஆசிரியர் பெயர் : வாணிதாசன்
இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு
இவர் பாரதிதாசனின் மாணவர் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்.
அறிந்த மொழிகள் : தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு
சிறப்புப்பெயர் : கவிஞரேறு, பாவலர்மணி
பெற்று விருது : பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியது
இயற்றிய நூல்கள் : தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை

ஆசிரியர் குறிப்பு
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப் பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களுள் சிலவாகும்.

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

பாடலின் பொருள்
நீரோடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்லும் ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்கிறதே! சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவதற்கு இந்த ஓடை எந்தப் பள்ளியில் படித்ததோ? நூல்களால் வருணித்துச் சொல்ல முடியாத இதன் அழகுக்கு இணையாக யாரால் எழுத முடியும்?

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.1 ஓடை 1

நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Students can Download 8th Tamil Chapter 1.2 தமிழ்மொழி மரபு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 1.
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
Answer:
(எ.கா) காகம் கரையும்.
(i) ஆந்தை : அலறும்
(ii) கிளி : பேசும்
(iii) குயில் : கூவும்
(iv) புறா : குனுகும்
(v) மயில் : அகவும்
(vi) குருவி : கீச்சிடும்
(vii) கோழி : கொக்கரிக்கும்
(viii) சேவல் : கூவும்
(ix) வண்டு : முரலும்
(x) கூகை : குழறும்

Question 2.
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.
Answer:
(i) நிலம் – பூமி, தரை, புவி
(ii) நீர் – புனல், தண்ணீர்
(iii) தீ – அனல், நெருப்பு, கனல்
(iv) காற்று – வளி, கால்
(v) வானம் – ஆகாயம், விண்

Question 3.
ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பறவைகள் ………… பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
Answer:
ஆ) விசும்பில்

Question 2.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………… –
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
Answer:
அ) மரபு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
‘இருதிணை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
Answer:
அ) இரண்டு + திணை

Question 4.
‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
Answer:
ஆ) ஐந்து + பால்

குறுவினா

Question 1.
உலகம் எவற்றால் ஆனது?
Answer:
உலகம் ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகியவற்றால் ஆனது.

Question 2.
செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
Answer:
செய்யுளில் திணை, பால், வேறுபாடறிந்து மரபான சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும். மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்.

சிந்தனை வினா

Question 1.
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
(i) உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் இருதிணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறியுள்ளது தமிழ்மொழி. இது இம்மொழியின் மரபு.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

(ii) நம் முன்னோர் ஒழுக்கத்தின் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துள்ளனர்.

(iii) உயர்திணைக்குரிய பால்களாக ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவற்றையும் அஃறிணைக்குரிய பால்களாக ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றையும் வகைப்படுத்திப் பயன்படுத்தியுள்ளனர்.

(iv) இம்மரபினை மாற்றாமல் பயன்படுத்தினால் மட்டுமே பொருள் மாறாமல் இருக்கும். இதனையறிந்த நம் முன்னோர் மரபு மாறாமல் பின்பற்றியுள்ளனர்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. விசும்பு – வானம்
2. மயக்கம் – கலவை
3. இருதிணை – உயர்திணை, அஃறிணை
4. வழாஅமை – தவறாமை
5. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. மரபு – வழக்கம்
7. திரிதல் – மாறுபடுதல்
8. செய்யுள் – பாட்டு
9. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)

நிரப்புக :

1. தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
2. நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
3. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
4. தொல்காப்பிய அதிகாரங்கள் ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
5. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க கண்டுபிடித்தது மொழி.

விடையளி :

Question 1.
தொல்காப்பியம் – குறிப்பு எழுதுக.
Answer:
(i) தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம்.

(ii) இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.

Question 2.
அளபெடை என்பது யாது?
Answer:
(i) அளபெடை – நீண்டு ஒலித்தல்.

(ii) சில எழுத்துகள் அவற்றுக்கு உரிய மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்கும். அதனை அளபெடை என்பர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
உயிரளபெடை என்றால் என்ன?
Answer:
(i) உயிரெழுத்துகள் நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர். அளபெடுத்ததற்கு அடையாளமாக உயிர்மெய் நெடிலுக்குப் பக்கத்தில் அதன் இன எழுத்து எழுதப்படும்.

(ii) (எ.கா.) வழாஅமை ழா – ழ் + ஆ; ‘ஆ’ – இன எழுத்து ‘அ)

Question 4.
புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் இளமைப் பெயர்களை எழுதுக.
Answer:
(i) புலி – பறழ்
(ii) சிங்கம் – குருளை
(iii) யானை – கன்று
(iv) பசு – கன்று
(V) கரடி – குட்டி

Question 5.
புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் ஒலிமரபினை எழுதுக.
Answer:
(i) புலி – உறுமும்
(ii) சிங்கம் – முழங்கும்
(iii) யானை – பிளிறும்
(iv) பசு – கதறும்
(v) கரடி – கத்தும்

Question 6.
நிலம், நீர், தீ, வளி, விசும்பு’ என்று தொடங்கும் நூற்பாக்களின் மூலம் தொல்காப்பியம் கூறுவனவற்றை எழுதுக.
Answer:
(i) இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும்.

(ii) உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபாகும். திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம்முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும்.

(iii) இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும். தமிழ்மொழிச் சொற்களை வழங்குதலில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

நூல் வெளி

தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்

இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும். உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.

திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Students can Download 8th Tamil Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 1.
‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
இப்பாடலை இசையுடன் பாடி பழக வேண்டும்.

Question 2.
படித்துச் சுவைக்க.
Answer:
செந்தமிழ் அந்தாதி

செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே
எழில்மகவே எந்தம் உயிர்.
உயிரும் நீ மெய்யும் நீ ஓங்கும் அறமாம்
பயிரும் நீ இன்பம் நீ அன்புத் தருவும்நீ
வீரம் நீ காதல் நீ ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ யாவும் நீ யே! – து. அரங்கன்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ………
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
Answer:
அ) வைப்பு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 2.
‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
Answer:
ஆ) என்று + என்றும்

Question 3.
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
Answer:
இ) வானம் + அளந்தது

Question 4.
அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்……………….
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
Answer:
இ) அறிந்ததனைத்தும்

Question 5.
வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………..
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
Answer:
இ) வானமறிந்த

தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

மோனைச் சொற்கள் :

வாழ்க – வாழிய
வான மளந்தது – வண்மொழி
எங்கள் – என்றென்றும்
வாழ்க – வாழ்க
வானம் – வளர்மொழி

குறுவினா

Question 1.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
Answer:
தமிழ் புகழ் கொண்டு வாழுமிடம் : ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்டு வாழ்கிறது.

Question 2.
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
Answer:
தமிழின் வளர்ச்சி : தமிழ் மொழி, வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சிறுவினா

Question 1.
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:
தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகள்:

(i) தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்கிறது.

(ii) ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான மொழி.

(iii) ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்ட மொழி.

(iv) எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழும்.

(v) எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும். அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படையும்.

(vi) பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிரவேண்டும்.

(vii) வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழியைப் பாரதியார், என்றென்றும் வாழ்க ! வாழ்க! என்று வாழ்த்துகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சிந்தனை வினா

Question 1.
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
Answer:
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் :

(i) தமிழ் மொழி, தமிழ் பேசும் பலருடைய தாய்மொழி. திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழி. எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது.

(ii) தமிழ், அறிவியல், மருத்துவம், கணிதம் எனப் பலவற்றையும் கூறுகிறது. தமிழர்
வானியல் அறிவிலும் சிறந்து விளங்கியுள்ளனர். வான் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்கள் தமிழில் உள்ளன. ஞாயிறு, திங்கள், விண்மீன் மற்றும் வானில் வலம் வரும் கோள்கள் பற்றியும் ஆராய்ந்து கூறியுள்ளனர் தமிழர்.

(iii) இலக்கிய வளம், இலக்கணவளம், சொல்வளம் என எல்லா வளங்களையும் தமிழ்மொழி பெற்றுள்ளதால் பாரதியார் தமிழ்மொழியை வண்மொழி என்று அழைக்கிறார்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. நிரந்தரம் – காலம் முழுமையும்
2. வைப்பு – நிலப்பகுதி
3. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
4. வண்மொழி – வளமிக்க மொழி
5. இசை – புகழ்
6. தொல்லை – பழமை , துன்பம்

நிரப்புக :

1. தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
2. பாரதியார் நடத்திய இதழ்கள் இந்தியா, விஜயா.
3. பாரதியாரின் உரைநடை நூல்கள் சந்திரிகையின் கதை, தராசு.
4. மொழி மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.

விடையளி :

Question 1.
சுப்பிரமணிய பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
Answer:
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் போன்றவை பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் ஆகும்.

Question 2.
தமிழ்நாடு எவ்வகைத் துன்பங்கள் நீங்கி ஒளிர வேண்டும்?
Answer:
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 3.
பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?
Answer:
பாரதிதாசன், பாரதியாரைப் புகழ்ந்தமை :

(i) சிந்துக்குத் தந்தை
(ii) செந்தமிழ்த் தேனீ
(iii) புதிய அறம் பாட வந்த அறிஞன்
(iv) மறம் பாட வந்த மறவன்.

Question 4.
பாரதியார் இயற்றியவைகளாக நும் பாடப் பகுதியில் குறிப்பிடப்பட்டவை எவை?
Answer:
(i) சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்கள்.
(ii) வசன கவிதைகள்
(iii) சீட்டுக்கவிகள் ஆகியவையாகும்.

Question 5.
தமிழ்மொழி, எதனால் சிறப்படைய வேண்டும் என்று பாரதியார் கூறுகிறார்?
Answer:
தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்ந்து, எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருளை நீக்கும். அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படையும்.

Question 6.
தமிழ்மொழி எவற்றை அறிந்து வளரும் என்று பாரதியார் கூறுகிறார்?
Answer:
தமிழ்மொழி வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் என்று பாரதியார் கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

ஆசிரியர் குறிப்பு

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி.சுப்பிரமணிய பாரதியார். இந்தியா, விஜயா, முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். கவிதைகள் மட்டுமின்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைக! பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!