Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 3.5 வாடிவாசல் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 3.5 வாடிவாசல்
நெடுவினா
Question 1.
வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக. (அல்லது) ‘வாடிவாசல்’ என்னும் குறும் புதினம் தமிழர் பண்பாட்டின் அடையாளத்தைப் புலப்படுத்துவதை நிறுவுக.
Answer:
ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு :
வாடிவாசல் நிகழ்வில், மனிதன் இரத்தம் சிந்தலாம்; உயிரை விடலாம். ஆனால், காளையின் உடலில் ஒருதுளி இரத்தம்கூட வெளிப்படக் கூடாது. இறுதியில் மனிதனோ, காளையோ வென்று செம்மாந்து நிமிர்ந்து நிற்க நேரிடும். மனிதன் தன் வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டாகக் கருதும் போக்கு, ஜல்லிக்கட்டில் நிலவுகிறது.
கறுப்புப் பிசாசு வருது :
வாடிவாசல் வேலி அடைப்பின்மீது வேடிக்கை பார்க்க உட்கார்ந்திருந்தவர்கள், திடீரெனக் கத்தினார்கள். வாடிபுரம் காளை வருது டோய்; கறுப்புப் பிசாசுடா. அவர்கள் காலில் திகில் வெளிப்பட்டது. காளை, அவிழ்த்து விடப்பட்டது. அது ஒரு முக்காரமிட்டது. அது விட்ட மூச்சில் தரைமண் பறந்தது. காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்டு, உருமா, இரண்டு பவுன் தங்கம் எல்லாம், அங்கிருந்தவர்கள் கண்களில் பட்டன.
ஆசைக்கு உலை வைத்த காளை :
தன் லங்கோட்டைச் சரிசெய்து கொண்ட பிச்சி, பருதவனை உஷார் படுத்திவிட்டுக் காளை பிடிக்க ஆயத்தமானான். பிடிக்கப் புறப்பட்டவனுக்காகச் சர் பரிதாபப் பட்டனர். பார்வையாளராக அமர்ந்திருந்த ஜமீன்தார், தம் பார்வையிலேயே பிச்சியை ஊக்கப்படுத்தினார்.
கேலி பேசியவர்களைக் கண்டித்தார்.
காளை, திட்டிவாசலில் தலைநிமிர்ந்து நின்றது. மண் சிதறக் காளை ஒருமுறை மூச்சுவிட்டு, மீண்டும் தரையை மோந்தது. எதிரில் நின்ற பிச்சிக்குத் தன் தந்தையின் ஆசைக்கும் உயிருக்கும் உலை வைத்த அடையாளமாகக் காளையின் கொடியில் ரத்தம் தெரிந்தது.
காளையை அடக்கத் திட்டமிடல்:
டுர்ரீ எனக் குரல் கொதித்த மருதன், காளையின் வாலைத் தொட்டுவிட்டு ஒதுங்கினான். மருதன்மீது பாயக் காளை திரும்பியது. பிச்சி, காளைமீது சடக்கெனப் பாய்ந்து, திமிலில் இடக்கை போட்டு நெஞ்சோடு இறுக்கி அணைத்து உடலைக் காளையின் கழுத்தோடு ஒட்டி, வலக்கையால் காளையின் கொம்பைப் பற்றிக்கொண்டான். பிச்சியின் எதிர்பாராத பாய்ச்சல், காளைக்குப் பாதகமாகி விட்டது. ஆனாலும், மிருக சுபாவத்துடன் சமாளித்த பிச்சியைக் கீழே தள்ள முயன்று, தவ்வி ஆள் உயரம் குதித்தது. பிச்சியின் பிடி இறுகியது.
நீயா நாணா போராட்டம் :
ஆள் உயரத்திற்கு எம்பித் தவ்வி இரண்டாவது முறையும் காளை பிச்சியைக் கீழே தள்ள முயன்றது. பிச்சு தன் கால்களைத் தரையில் பதிக்க முயன்றான். காளை துள்ளியது. காளை களைத்துப் போனதால், மூன்றாம் முறை தவ்வ இயலவில்லை. பிச்சியைக் காளை உருட்டித் தள்ளிக் கிழித்திருக்க வேண்டும். ஆனால், “கிழக்கத்தியான், வென்றுட்டான்டா…’ என்றது கூட்டம்.
பிச்சி பெற்ற வெற்றி :
காளையின் நெற்றித்திட்டில் பிச்சி கைபோட்டு, உருமால் பட்டையை இழுத்து மெடல், சங்கிலி பட்டுத்துணியை வாயில் கவ்வியபடி, தரையில் கால்பதித்து அழுத்தி, மார்பில் அழுத்தம் கொடுத்துக் காளையை எதிர்ப்பக்கம் தள்ளிவிட்டு ஒதுங்கினான். “உசிலனூர் அம்பிலியின் பேரைக் காப்பாத்திட்டேடா! நீ புலிக்குப் பொறந்தவன்டா” என்று பாராட்ட, பிச்சியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
பண்பாடு உயிர்ப்பு :
அடங்காத காளையை அடக்க, எவ்வாறு திட்டமிட வேண்டும்? காளையை எப்படிப் பற்றிப் பிடிக்க வேண்டும்? பிடி தளர்த்தாமல் இறுதி வரை ஏன் போராட வேண்டும்? என்பனவற்றை எல்லாம், வாடிவாசல் கதையால் அறியமுடிகிறது. போட்டியில் கலந்துகொள்ளும்போது மற்றவர் போற்றுவதையும் தூற்றுவதையும் காதில் வாங்காமல் கருமமே கண்ணாகச் செயல்பட வேண்டும் என்பதை எல்லாமும் அறியமுடிகிறது.
தமிழர் பண்பாட்டில், காளையை அடக்குவதை மனிதன் விளையாட்டாக நினைக்கிறான். காளைக்கு அது விளையாட்டு இல்லை. பண்பாட்டின் உயிர்ப்பில் இந்தத் தெளிவு மிகமிக அவசியம் என்பதும் தெளிவாகிறது.
கற்பவை கற்றபின்
நீங்கள் கண்டுகளித்த ஏறு தழுவுதல் நிகழ்வின் காட்சிகளை வகுப்பில் நேர்முக வருணனை செய்து காட்டுக.
Asnwer:
இன்னும் சிறிது நேரத்தில் காளைவிடும் விழா தொடங்க இருக்கிறது. விழிப்பாக இருங்கள். உள்ளே காளைகள் வரிசையாக வந்து நிற்கின்றன. இனிக் காளைகள் ஒவ்வொன்றாக நாம் வாசல் வழியே வெளிவரும். அங்குக் காளைகளை அடக்கப் போகிறவர்கள் திரண்டு நிற்கிறார்கள்.
காளையை அடக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? எதற்காகக் காளையை அடக்கப் போகிறார்கள்? அது தமிழர் பண்பாட்டுப் பெருமை! அடக்கினால் பெயர்பெற்றி ரனாகலாம்! பரிசுகளோடு பாராட்டுகளும் கிடைக்கும். அங்கே திரண்டிருக்கும் காளையருக்குப் பரிசும் பாராட்டும் பெரிதல்ல!
காளையை அடக்குவதனால் கிடைக்கும் வெற்றிப் பெருமிதம்தான் முக்கியம். அந்தப் பெருமிதத்தைத் தொடுவதற்காக எத்தனை இளைஞர்கள் காத்துக் கிடக்கிறார்கள்? துடிப்புள்ள இளைஞர்களின் துணிச்சலான செயலை, இன்னும் சிறிது நேரத்தில் நாம் அனைவரும் காணப் போகுறோம்!
அதோ வாடிவாசல் திறக்கப்பட்டு விட்டது! முதலில் வெளிவந்த சிவப்புநிறக்காளை, திமில் நிமிர்த்து – தன் தலையை அசைத்து வெளிவருகிறது. அந்தச் செவனைக் காளையைக் கண்டு, நம் இளங்காளையர் சிலர் அஞ்சி ஒதுங்குகின்றனர். தன்னை எவரும் அடக்க, என் நெருங்கவே முடியாது என்பதை உண்மையாக்கி அந்தச் சிவப்புக்காளை துள்ளிக் குதித்துப் பெருமித் தோடு ஓடுகிறது! வெற்றி காளைக்குத்தான்.
அடுத்து வாடிவாசல் வழியாகக் கறுப்புநிறக் காக்காளை வருகிறது. எவ்வளவு பெரிய திமில் – கூட்டதைக் கண்டு மிரளாமல், எல்லாரையும் தன் மூச்சுக் காற்றால் மிரட்டுகிறது. கழுத்தில் மாலை! கொம்புகளுக்கு இடையே உருமால். களத்தில் நின்று, நெருங்கியவர் எல்லாரையும் மிரட்டி விட்டு, வெற்றியோடு ஓடுகிறது. இதோ அடுத்ததாக வாடிவாசலில் துள்ளிக்குதித்தபடி ஒரு பால்போல் வெளுத்த வெள்ளைநிறக்காளை வெளிவருகிறது.
அதன் வெள்ளைநிறமே எல்லா கண்களையும் பறிக்கிறது. எவரும் நெருங்க முடியவில்லை. இப்படியாகப் பல காளைகள் வந்தன. சில காளைகள் பிடிபட்டன. பிடித்தவர் பரிசு பெற்றார். பிடிபடாத காளைகளின் சொந்தக்காரர்களும் பரிசு பெற்றனர். வென்றவர் முகத்தில் பெருமிதம் மின்னியது.