Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

குறுவினா

Question 1.
ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
ஈரசைச்சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள், இயற்சீர், ஆசிரிய உரிசர்சான்பன. ஈரசைச்சீர்கள் மாச்சீர் (தேமா, புளிமா), விளச்சீர் (கூவிளம், கருவிளம்) என இரு வகைப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘செய்யுள்’ என்னும் பொருளைக் குறிக்கும் சொற்கள் எவை?
Answer:
செய்யுள் என்னும் பொருளைக் குறிக்கும் சொற்கள், காக்கு கவி, கவிதை, பாட்டு என்பன.

Question 3.
செய்யுள் உறுப்புகள் எவை?
Answer:
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பல செய்யுள் உறுப்புகளாகும்.

Question 4.
அசையாவது யாது? அது எத்தனை வகைப்படும். அவை யாவை?
Answer:

  • எழுத்தோ எழுத்துகளோ சேர்ந்து அசைத்து, ஆசைபொருந்த சீர்க்கு உறுப்பாக வருவது அசை.
  • அது இரண்டு வகைப்படும். அவை நேர் நிரை.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 5.
நேரசை எவ்வாறு அமையும்?
Answer:
குறில் தனித்தோ, குறில் ஒற்றிணைத்தோ, நெடில் தனித்தோ, நெடில் ஒற்றிணைந்தோ நேர்’ அசை அமையும்.

Question 6.
நிரையசை எவ்வாறு அமையும்?
Answer:
இருகுறில் இணைந்தோ, இருகுறிலோடு ஒற்றிணைந்தோ, குறில்நெடில் இணைந்தோ, குறில் நெடிலோடு நற்றிணைந்தோ, நிரை அசை அமையும்.

Question 7.
நேரிசை ஆசிரியப்பா எவ்வாறு அமையும்?
Answer:
ஈற்றயல் அடி மூன்று சீர்களாய் அமைய, ஏனைய அடிகள் நான்கு சீர்களாக அமைய வருவது, நேரிகை ஆசிரியப்பா.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 8.
எல்லா அகளும் நான்கு சீர்களாக அமைந்து வரும் ஆசிரியப்பாப் பெயர் என்ன?
Answer:
எல்லா அடிகளும் நான்கு சீர்களாக அமைந்து வரும் ஆசிரியப்பா ‘நிலைமண்டில ஆசிரியப்பா’. இது ‘ஏ’, ‘என்’ என்னும் ஈற்று அசை பெறுவது சிறப்பு என்பர்.

Question 9.
இணைக்குறள் ஆசிரியப்பா எவ்வாறு அமையும்?
Answer:
முதல் அடியும் இறுதி அடியும் நான்கு சீர்களைப் பெற்று, இடையடிகள் ஈரசை, மூவசைச் சீர்களைப் பெற்று வருவது, இணைக்குறள் ஆசிரியப்பா.

Question 10.
அடிமறிமண்டில ஆசிரியப்பா என்பது யாது?
Answer:
அடிகளை முன்பின்னாக மாற்றிப் பாடினாலும் பொருளோ, ஓசையோ மாறாது அமைவது அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 11.
ஆசிரியப்பாவின் இனங்கள் யாவை?
Answer:
ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் என்பன, ஆசிரியப்பாவின் இனங்களாகும்.

சிறுவினா

Question 1.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்துள், எவையேனும் நான்கினைக் கூறுக.
Answer:

  • எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வரும்.
  • இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.
  • நிரை நடுவாகிய (கூவிளங்கனி, கருவிளங்கனி) வஞ்சி உரிச்சீர்கள் வாரா.
  • இறுதி அடியின் இறுதிச் சீர் ‘ஏ’ என்னும் ஓசையில் முடிவது சிறப்பு.

பலவுள் தெரிக

Question 1.
நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது……………………….
அ) காய் முன் நேர்
ஆ) காய் முன் நிரை
இ) கனி முன் நிரை
ஈ) மா முன் நேர்
Answer:
ஈ) மா முன் நேர்

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
பாக்களின் வகை, ஓசை இயற்றும் விதிமுறைகளைக் கூறும் நூல்……………………….
அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) யாப்பருங்கலக்காரிகை
ஈ) புறம்பொருள் வெண்பா மாலை
Answer:
இ) யாப்பருங்கலக்காரிகை

Question 3.
பா (செய்யுள்) எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
இ) நான்கு

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 4.
கலிப்பாவிற்கு உரிய ஓசை……………………….
அ) துள்ளலோசை
ஆ) செப்பலோதை
இ) அகவலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
அ) துள்ளலோசை

Question 5.
‘அகவலோசை’ பெற்று வருவது……………………….
அ) வெண்பா
ஆ) கலிப்பா
இ) ஆசிரியப்பா
ஈ) வஞ்சிப்பா
Answer:
இ) ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 6.
செய்யுளில் இசையைப் பிணைப்பவை ……………………….
அ) எழுத்து, அசை, சீ
ஆ) எதுகை, மோனை, இயைபு
இ) அடி, தொடை பா
ஈ) சீர், அடி, தொடை
Answer:
ஆ) எதுகை, மோனை, இயைபு

Question 9.
‘அகவற்பா’ எனக் குறிப்பிடப்படுவது……………………….
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) வஞ்சிப்பா
ஈ) கலிப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 10.
‘ஆரிய உரிச்சீர்’ என்று அழைக்கப்படுவது……………………….
அ) ஈரசைச்சீர்
ஆ) மூவசைச்சீர்
இ) ஓரசைச்சீர்
ஈ) நாலசைச்சீர்
Answer:
அ) ஈரசைச்சீர்

Question 11.
எல்லா அடிகளும் அளவடி (நாற்சீர் அடி) பெற்று வருவது……………………….
அ) நிலைமண்டில ஆசிரியப்பா
ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா
Answer:
அ) நிலைமண்டில ஆசிரியப்பா

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 12.
முதலடியும் இறுதி அடியும் அளவடிகளாகவும், இடையடிகள் குறளடி, சிந்தடிகளாகவும் வரும் ஆசிரியப்பா……………………….
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) நிலைமண்டில ஆசிரியப்பா
இ) இணைக்குறள் ஆசிரியப்பா
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா
Answer:
இ) இணைக்குறள் ஆசிரியப்பா

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
ஆசிரியப்பா, நான்கு வகைப்படும். அவை: நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா.

Question 2.
ஆசிரியப்பாவிற்குரிய சீரும் தளையும் யாவை?
Answer:

  • மாச்சீர், விளச்சீர் எனும் ஈரசைச் சீர்கள், ஆசிரியப்பாவிற்குரிய சீர்களாகும்.
  • வெண்பாவிற்குரிய காய்ச்சீர்கள் வரலாம்.
  • நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் ஆசிரியப்பாவின் தளைகளாகும்.
  • பிற தளையும் கலந்து வரும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 3.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகளையும், அவை இயற்றுவதற்கான விதிகளையும் கூறுக.
Answer:

  • ஆறுசீர்கள் நான்கு கொண்டதாக அமைந்து, நான்கு அடிகளும் அளவு ஒத்து வரவேண்டும்.
  • முதல்சீரிலும், நான்காம் சீரிலும் மோனை அமைத்தும், முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைத்தும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எழுதலாம்.

Question 4.
பொருத்துக.
அ) நேரிசை ஆசிரியப்பா – i) முதலடியும் இறுதியடியும் அளவடிகளால் வரும்
ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா – ii) அடிகளை மாற்றிப் பாடினாலும் ஓசயும் பொருளும் மாறாது
இ) நிலைமண்டில ஆசிரியப்பா – iii) ஈற்றயல் அடி சிந்தடியாய் வரும்
ஈ) அடிமறிமண்டில ஆசிரியப்பா – iv) எல்லா அடிகளும் அளவடி பெற்று வரும்
Answer:
அ – iii ஆ – 1 இ – iv ஈ – ம

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

மொழியை ஆள்வோம்,
சான்றோர் சித்திரம்
இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர் (1882 – 1954)

தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும் எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி. கே. சிதம்பரநாதர். இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். டி. கே. சி.யின் வீட்டுக் கூடத்தில் வட்டவடிவமான தொட்டிக் கட்டு. ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய காலம், இலக்கியத்தைப் பற்றிப் பேசியது. அவ்வமைப்பு, ‘வட்டத் தொட்டி’ என்றே பெயர் பெற்றது. டி. கே. சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர். தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும். வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார்.

தமிழ்க்கலைகள், தமிழ்இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும் மேன்மையையும் தனித்தன்மையையும் எடுத்துச் சொன்னார். கடிதங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார். அவாகம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன. இதய ஒலி, தயார் யார்? முதலான நூல்களும், முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவ தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம். சென்னை மாநில மேலவையின் உறுப்பினர் கவும், அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்த டி.கே.சி. ஏற்றிய இலக்கிய ஒளி, தமில் அழகியலை வெளிச்சப்படுத்தியது.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அன்று, அல்ல என்பவற்றுக்கான பொருள்வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க.
Answer:
அன்று : நீ செய்யும் செயல் நன்று அன்று.
அல்ல : நான் கேட்டவை இவை அல்ல.

Question 2.
சொல்லச் சொல்ல, திளைப்பர் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
சொல்லச் சொல்ல – அடுக்குத்தொடர்
திளைப்பர் – படர்க்கைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

Question 3.
ரசிகர் – தமிழ்ச்சொல் எழுதுக. மாநில மேலவை – ஆங்கிலக் கலைச்சொல் தருக.
Answer:
ரசிகர் – சுவைப்பவர், சுவைஞர்,
மாநில மேலவெ – Legislative Council

Question 4.
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார் – விடைக்கேற்ற வினா அமைக்க.
Answer:
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிட, எதில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார்?

Question 5.
மேலவை, புத்துணர்வு – இச்சொற்களின் புணர்ச்சி வகையைக் கண்டறிக.
Answer:
மேலவை – மேல் + அவை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மேலவை)
புத்துணர்வு – புதுமை + உணர்வு
“ஈறுபோதல்” (புது + உணர்வு)“தன் ஒற்று இரட்டல்” (புத்து + உணர்ச்சி)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (புத்த் + உணர்வு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (புத்துணர்வு)

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. டி. கே. சிதம்பரநாதர் தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு
ஊட்டினார். வினா : டி. கே. சிதம்பரநாதர் தமிழுக்கும் தமிழருக்கும் எவ்வாறு பத்துணர்வு ஊட்டினார்?

2. டி. கே. சி. எழுதிய கடிதங்களும் நூல் உரைகளும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம்.
வினா : எவற்றை டி. கே. சி. இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம்?

தமிழக்கம் தருக

The folk songs of TamilNadu have in thema rawarkable charm just as we find in the folk songs of any other country. But what is special in Mese Tamil songs is, they not only possess a native charm and the aroma of the soil but have reserved in them a certain literary and artistic quality. This is so because the people who yowak the language of these folk songs, the Tamils, have had a great historical past and a wonderful literary tradition. Folk songs are so old and yet so full of life that they are alwax new and progressively modern. These songs were born several centuries ago; they are baing born every generation; they will be born and reborn over and over again!
Answer:
தமிழ்நாட்டின் நாட்டுப்புறப் பாடல்கள், பிறமொழி நாட்டுப்புறப் பாடல்களைவிட ஒரு குறிப்பிடத்தக்க அழகுணர்ச்சி நிறைந்த கவாசி யைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதனால், தமிழில் உள்ள பாடல்கள் தனிச்சிறப்பு உடையன.

இயற்கை அழகின் தோற்றத்தையும், சொந்த மண்ணின் மணத்தையும், குறிப்பிட்ட இலக்கிய மற்றும் கலை உணர்வுகளையும் தன்னகத்தே பாதுகாத்து வைத்துள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள், அவை புழங்கும் தமிழ் மொழி ஒரு பெரிய வரலாற்றைக் கடந்த அற்புதமான இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டதாக இருந்துள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள், மிகவும் பழைமையானவை.

அது புதிய வாழ்க்கையையும் படிப்படியாக தவனமயமாக்கப்படும் வாழ்க்கையையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு தலைமுறைய பெருக்கும் மறுபடியும் மறுபடியும் தோன்றிப் புதுப்பித்து வந்துள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கீழ்க்காணும் பாடலின் முதலடியைக் கவனித்துப் பிற அடிகளில் உள்ள சீர்களை ஒழுங்கு செய்க.

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்றதீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்தசுகந்தமணமலரே
மேடையிலேவீசுகின்றமெல்லியபூங்காற்றே
மென்காற்றில்விளைசுகமேசுகத்திலுறும்பயனே
ஆடையிலே எனைமணந்தமணவாளாபொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந்தருளே.
Answer:
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

படித்துப் பார்த்துப் படைத்துக் காட்டுக

புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்த சான்றோர் குறித்த அறிமுக உரை :

பேரன்பு கொண்டோரே! பேரறிவுச் செல்வமே பெருஞ்செல்வம் எனக் கருதி வந்திருக்கும் சான்றே ரே! இளைய தலைமுறையே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொல்றேன்.

புத்தக வாசிப்பை மூச்சுக்காற்றாய்ச் சுவாசித்து வாழ்கின்ற படிப்பாளர்களாகிய உங்கள் முன்பு ஒரு படைப்பாளரை, மிகச் சிறந்த பண்பாளரை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். சிறுவயது முதலாகத் தனக்குப் பெற்றோர்கள் அளித்த சில்லறைகளைச் சேகரித்து, ஆண்டுதோறும் புத்தகம் வாங்கும் வழக்கத்தைக் கொண்டவர்.

புத்தகங்களோடு வாழ்ந்து வருபவர். புத்தகத்தை வாங்குவ தாடு மட்டுமல்லாமல் முழுமையாக அவற்றை வாசிப்பதும், குறிப்பெடுப்பதும் இளைய தலைமுறையினர்க்குத் தன்னம்பிக்கை அளிக்கும் கூட்டங்களில் பேசுவதும் எனப் பல்வேறு திறன்களைப் பெற்றவர்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

ஷேக்ஸ்பியர் என்னும் மாபெரும் படைப்பாளரின் பிறந்த நாளான ஏடல் 23ஐ, உலகம் முழுவதும் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் அவரிடம் இருந்த வாசிப்பு வழக்கமே ஆகும். அவ்வகையில் வாசிப்பையே தம் வாழ்க்கையாய்க் கொண்டிருக்கும் தம் சிறப்பு விருந்தினர், நமக்கெல்லாம் முன்மாதிரியானவர். அவர் வழியில் புத்தக வாசிப்பைத் தொடர்போடி! புதியதோர் உலகம் படைப்போம்! வெல்வோம்!

உங்கள் பகுதி நூலகத்தில் வாசகர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்க வருகைதரும் அறிஞரை அறிமுகம் செய்க.

திரண்டுள்ள அனைவருக்கும் வணக்கம்.
நாம் இன்று இங்குத் திரண்டிருப்பதன் நோக்கத்தை அனைவரும் அறிவீர்கள். இன்று, பெருமைக்குரிய ஐயா, அறிவொளி அவர்கள் இங்கு உங்கள் அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டை வழங்க வந்துள்ளார் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. இருப்பினும் சில கூறி முடிக்கிறேன். இவர் சிறந்த சொற்பொழிவாளர், உன்னதமான எழுத்தாளர், உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, நம் தமிழின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பைப் பறையறைந்து கொண்டிருப்பவர். இவர் போன்றவர்களை நாம் பெற்றிருப்பது, நம் நாட்டுக்கும் மொழிக்கும் பெருமை சேர்க்கிறது.

இவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். இந்த விழாவைப் பற்றிக் குறிப்பிட்டு அழைத்ததும், முகமலர்ச்சியோடு மறுப்புத் தெரிவிக்காமல் வர உடன்பட்டார். இனி அவர் தரும் நூலக அட்டைகளைப் பெற்றுச் சென்று, இந்த நூலகத்திலுள்ள நூல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசித்து, மகிழ்ச்சி அடையுமாறு வேண்டுகிறேன்.

ஐயாவுக்கும் உங்களுக்கும் நன்றி. வணக்கம்.
இலக்கிய நயம் பாராட்டுக

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 1

ஆசிரியர் குறிப்பு : ‘பெ. தூரன்’ என்று சுருக்கப் பெயரில் குறிப்பிடப் பெறுபவர், ‘பெரியசாமித்

தூரன்’. இவர் சிறந்த இலக்கியப் புலமையும், ஆழ்ந்த அறிவியல் அறிவும் பெற்றவர். தமிழில் பல நூல்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காகத் தாய்மொழியில் இனிய எளிய பாடல்களை எழுதி, நல்லறிவு புகட்ட முயன்றார். தமிழ்மொழியில் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தைப் படைத்தளித்த உழைப்பாளி.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

திரண்ட செய்தி : இயற்கையைப் போற்ற வேண்டும். அதனால் வளம் பெருகும். உணவுப் பொருள் உற்பத்தி பெருகும். வறுமை போகும் என்பவற்றை வலியுறுத்துகிறார். முன்பு சாதி, சமய வேறுபாடுகளால் சிதைந்து அடிமைப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கி அனைவரும் ஒரு குடும்பமாக வாழவேண்டுமென அறிவுரை கூறுகிறார்.

ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வது நல்லது என்னும் செய்தி, உறுதிபடக் கூறப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கலில் தமிழ்ப்பண்பு வெளிப்பட விழா எடுத்து வாழவேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார். வேற்றுமைகளை மறந்து, மனித இன உயர்வுக்குப் பாடுபட வேண்டுமென் வதை வலியுறுத்துகிறார். எளிய சொற்களில், இனிய கருத்தை அருமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடை நயம் :
மோனைத்தொடை : ஒருதனி, ஒற்றுமை; தமிழன், தமிழன்; புவியெலாம், புறம்பிலை யாதும், யாவரும் என்னும் சீர்களில், முதலெழுத்து ஒன்றிவந்து, சீர்மோனை அமைந்துள்ளது.

இயைபுத்தொடை : விளைந்தனவே, விரிந்தனவே; போயொழிக, நலமுறுக, வாழ்ந்திடுவோம், செய்திடு வோம்; சாற்றியதும், ஏற்றதுவும் என்னும் ஈற்றுச்சீர்களில், ஓசைநயம் பொருந்தி, இயைபுத் தொடை அமைந்துள்ளது.

சந்தநயம் : எளிய சொற்களில் ஓசைநயம் பெறப் பாடி இன்புறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளமை, சந்தநயத்தைப் புலப்படுத்தும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

மொழியோடு விளையாடு

கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக
Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 2

தமிழ் மொழியின் ஐவகை இலக்கணப் பிரிவுகளுள் ‘பொருள் இலக்கணம்’ தமிழர் வாழ்வுமுறை கூறுவதாகும். இந்தப் பொருள் இலக்கணம் என்பது, அகம் (அகப்பொருள்), புறம் (புறப்பொருள்) என இருவகையாகப் பிரிக்கப் பெற்றுளராது.

அன்பு நிறை காதல் வாழ்வைப் பற்றிக் கூறும் அகப்பொருள் செய்திகளை விளக்கும் இலக்கணம் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூவகைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

முதல்பொருள் என்பது (நிகழ்வு நடைபெறும்) நிலத்தையும் பொழுதையும் குறிக்கும். நிலமானது குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐந்து வகைப்படும்.

‘குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
‘முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
மருதம்’ என்பது வயலும் வயல் சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
நெய்தல்’ என்பது கடலும் கடல் சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.
‘பாலை’ என்பது சுரமும் சுரம் சார்ந்த நிலத்தையும் குறிக்கும்.

பொழுது என்பதைச் சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைகளாகப் பிரிப்பர். சிறுபொழுது என்பது ஒருநாளின் வைகறை, காலை, நண்பகல், மாலை, எற்பாடு, யாமம் என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டதாகும். பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டதாகும்.

‘கருப்பொருள்’ என்பது தெய்வம், மக்கள், புள் (பறவை), விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்னும் பிரிவுகளைக் கொண்டது. இது ஐந்து திணைகளுக்கும் தனித்தனியே அமையும்.

‘உரிப்பொருள்’ என்பது புணர்தல் புணர்தல் நிமித்தம், பிரிதல் பிரிதல் நிமித்தம், இருத்தல் இருத்தல் நிமித்தம், ஊடல் ஊடல் நிமித்தம், இரங்கல் இரங்கல் நிமித்தம் என ஐந்து வகைப்படும். இவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் திணைகளுக்கு உரியனவாகும்.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

புதிர்களுக்கான விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (கம்பு, மை, வளை, மதி, இதழ், ஆழி)
1. எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும்………………….
2. அடிக்கவும் செய்யலாம்; கோடைக்குக் கூழாகக் குடிக்கவும் செய்யலாம்………………….
3. கண்ணிலும் எழுதலாம்; வெண்தாளிலும் எழுதலாம்.
4. அறிவின் பெயரும் அதுதான்; அம்புலியின் பெயரும் அதுதான்………………….
5. பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே………………….
6. வண்டியையும் இயக்கும்; பெரும் கப்பலையும் தாங்கும்.
Answers:
1. வளை ,
2. கம்பு,
3. மை,
4. மதி,
5. இதழ்,
6. ஆழி.

எண்ணங்களை எழுத்தாக்குக.

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 3

கத்திக்கும் ஈட்டிக்கும் இப்போது இடமில்லை!
புத்திக்கும் உழைப்புக்குமே இடம் உண்டு!

முயற்சி செய் முடிவு உன்கையில்!
உழைப்பவர்க்கே ஊதியம் கிடைக்கும்.
எண்ணித் துணிந்தால் எதுவும் கைகூடும்.
வெற்றி எப்போதும் எட்டாக் கனிதான்
ஏன் எட்டாது என முயன்று பார்!
மனம் ஊனமுற்றால் உழைக்க முடியாது
உறுதியோடு போரிட்டவனே உலகை ஆண்டான்
விதியே உன்னதம் என்றால், உன் முயற்சி என்னவானது?

நம்பிக்கை உள்ளோர் பிரச்சனைகளை மிதித்து வாய்ப்டை எதிர்நோக்குவர்!
வெற்றியை உறுதிசெய்யச் சோம்பலை விரட்டு!
அண்டவிட்டால் அழிவது உறுதி!
அச்சப்படாமல் தொட்டுப் பார்!
பயத்தைப் பலியிட்டு, உரிய காலத்தோடு கைகுலுக்கு!

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

ஆழ்கடல் மூழ்கியோர் முத்தெடுப்பர்
அடுத்து முயல்வோர் இமய உச்சி மிதிப்பர்!
கண் மூடாதே. பசி நோக்காதே
பழிமொழி கேளாதே, புகழ்மொ தவிர்!
குறிக்கோள் ஒன்றே குறியாது நில். வெற்றி உனதே!

நிற்க அதற்குத் தக

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம் - 4

Samacheer Kalvi 11th Tamil Chapter 5.5 பா இயற்றப் பழகலாம்

கலைச்சொல் அறிவோம்

ஆவணம் – Document
உப்பங்கழி – Backwater
ஒப்பந்தம் – Agreement
படையெடுப்பு- Invasion
பண்பாடு – Culture
மாலுமி – Sailor

Leave a Reply